April 2021
-
நாட்டை விற்கும் மத்திய பட்ஜெட்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இந்த நாட்டின் மிகப்பெரிய படை- தலைநகர் தில்லியின் நுழைவாயில்களில் அணிவகுத்துள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் படை – பல மாதங்களாக மத்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு முக்கிய அரசியல் பாடம் கற்பித்துவருகின்றனர். அரசின் அடக்குமுறைகளை ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் வலுவாக எதிர்கொள்ளும் என்பதுதான் அந்தப் பாடம். ஆனால் நாட்டின் பெரும் துயர் என்னவென்றால் மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வை மட்டுமல்ல; நாட்டின் அனைத்து உழைப்பாளி மக்களின் வாழ்வையும் நாட்டின் பொஇந்தியாவை நிர்பந்திக்க ருளாதாரத்தையும் நாசப்படுத்தி… Continue reading
-
பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் அரசியல் பொருளாதாரம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசு 2011 இல் பதவி ஏற்றது. அச்சமயம் காங்கிரஸ் தலைமையிலான “ஐக்கிய முற்போக்கு கூட்டணி” (யூபிஏ)அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் அரசியல் வரைபடம் முற்றிலும் மாறியுள்ளது. மத்தியிலும் பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது. அதன் அதிதீவிர தாராளமய கொள்கைகள், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அதிகாரங்களை மையப்படுத்துவது, அதன் வெறுப்பு உமிழும் மதவாத அரசியல் ஆகியவை இந்தியாவும் தமிழகமும் எதிர்கொள்ளவேண்டிய சவால்களாகியுள்ளன.… Continue reading
-
சோஷலிசம் எதற்காக?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் [1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரையின் சிறு பகுதி] பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுநராக இல்லாத ஒருவர் சோஷலிசம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன். விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம்… பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அநேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம்… Continue reading
-
இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்
அ.சவுந்தரராசன் பிரடெரிக் எங்கெல்ஸ் எழுதிய முதல் முழுமையான புத்தகம் ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்’ ஆகும். இந்த புத்தகத்தை எழுதுகிறபோது அவருக்கு வயது 24 மட்டுமே. மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவருவதற்கு முன்பாக, கம்யூனிஸ்ட் லீக் மற்றும் முதலாம் அகிலம் போன்ற அமைப்பு வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பாகவே, ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம், பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமெரிக்க பதிப்பாக ஆங்கிலத்திலும் வெளியானது. மிக இளம் வயதிலேயே இந்த புத்தகத்தை… Continue reading
