-
பொது சுகாதாரம்: முதலாளித்துவ பார்வையின் குறைபாடுகள்
ஒருவருடைய சிறப்பான உடல்நலம் அமைவது என்பது அவர் தேவையான மற்றும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் திறன், அவர் வாழ்க்கையில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பவைகளைப் பொறுத்தது ஆகும். அந்த இடம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாகும். கொள்கைகளை தீர்மானிக்கும் இடத்தில் யார் இருக்கிறார்கள், எந்த வர்க்கம் இருக்கிறது என்பது முக்கியமாகும்.
-
அவனது ரத்தம் போதிய அளவு வெளியேற்றப்படவில்லை!
மிகப் பெரும் மக்கள் இயக்கங்களை முன்னெடுப்பதன் மூலமே அரசுகளை கட்டாயப்படுத்தி விரிவான பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கான கட்டமைப்புகளை உருவாக்கச் செய்வது சாத்தியமாகும். உணவுக்கான நீதி, நலவாழ்வுக்கான நீதி ஆகிய முழக்கங்களை முன்வைக்கும் மக்கள் இயக்கங்களை கட்டமைக்கும் தேவை உள்ளது. இதுபோன்ற ஊக்கமளிக்கும் முன்னுதாரண மக்கள் இயக்கங்கள் ஏற்கனவே நடைபெற்றிருக்கின்றன. ஆனால் கார்ப்பரேட் ஊடகங்களின் செய்தி சேகரிப்பில் அவை ஓரங்கட்டப்பட்டு மறைக்கப்பட்டுவிட்டன.
-
வ.உ.சி: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக நீதிக்கான குரலும்
ஒரு வழக்கறிஞர்; விடுதலைக்குப் போராடக் கூடிய ஒரு அரசியல் போராளி; ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்; தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர் என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து விட்டு வ.உ.சி க்கு சொல்ல முடியாத கொடுமைகள் இழைக்கப்பட்டன. வ.உ.சி.க்கு இழைக்கப்பட்ட கொடுமையானது, அவர் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்பது மட்டுமல்ல; மாறாக, இந்திய விடுதலை குறித்து அவர் கொண்டிருந்த மாறுபட்ட அணுகுமுறையும் காரணமாகும்.
-
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்துப் போராட்டங்கள் : தோற்றமும், இயக்கத்தின் மீதான தாக்கமும்
1957 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் இரட்டிப்பானது, இரண்டாவது மிகப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்தது. கேரளாவில் பெரும்பான்மையை வென்றது. தேர்தலுக்கு பின், கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க்கி “வெகுஜன கட்சியாக” கட்டமைக்க மத்தியக்குழு அழைப்பு விடுத்தது. அமிர்தசரஸ் நகரில் கட்சியின் ஐந்தாவது “சிறப்பு” மாநாடு 1958 ஏப்ரல் 6 முதல் 13 வரை நடைபெற்றது. “திரிபுவாத, பிரிவினைவாத போக்கிற்கு எதிராக போராடி, இந்திய நிலையை கருத்தில் கொண்டு, மார்க்சிய – லெனினியத்தை பொருத்தி, திட்டங்களை வகுக்க” கட்சியின் செயல்திட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
the point however is to change it
Karl Marx, the Manifesto of the Communist Party