மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


September 2025

  • சாதியும் வர்க்கமும்

    சாதியும் வர்க்கமும்

    சீத்தாராம் யெச்சூரி (சீத்தாராம் யெச்சூரி முதலாண்டு நினைவு தினம்) கம்யூனிஸ்டுகள் சமுதாயத்தில் உள்ள வர்க்கப் பிரிவினைகளைத்தான் பார்க்கிறார்கள்; சாதிக் கட்டமைப்பு பற்றி கவலைப்படுவதில்லை. இது கம்யூனிஸ்டுகள் மீது சாதிய அமைப்புகள் மற்றும் சில சுயநல சக்திகளின் குற்றச்சாட்டு. கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்திற்கே முக்கியத்துவம் தருகிறார்கள்; சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று மேலே கூறப்பட்ட குற்றச்சாட்டையே வேறு விதமாகக் கூறுவோரும் உள்ளனர். இது உண்மையல்ல. “பொருளாதாரக் கூறுகளே அடிப்படையில் தீர்மானிக்கும் சக்தி படைத்தவை” என்று… Continue reading

  • மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி: வெஞ்சினம் மிக்கதொரு நவ பாசிஸம்

    மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி: வெஞ்சினம் மிக்கதொரு நவ பாசிஸம்

    அசோக் தவாலே 90 ஆண்டுகளுக்கு முன்பு, மகத்தான பாசிஸ எதிர்ப்பாளரும், கம்யூனிஸ்ட் போராளியுமான கியோர்கி டிமிட்ரோவ், 1935 ஆகஸ்ட் 2ஆம் நாளன்று கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது காங்கிரஸில், அதன் பொதுச்செயலாளர் என்ற வகையில் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையில், பாசிஸம் குறித்து இவ்வாறு மிகத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்திருந்தார்:  “பாசிஸம் எத்தனை வகையான முகமூடிகளைப் போட்டுக் கொண்டாலும் சரி, அது தன்னை எத்தகைய வடிவங்களில் காட்டிக் கொண்டாலும் சரி, அது அதிகாரத்திற்கு வரும் வழிகள் எத்தகையதாக இருந்தாலும்… Continue reading

  • ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டும், அதன் பாசிச அடித்தளமும் !

    ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டும், அதன் பாசிச அடித்தளமும் !

    இரா. சிந்தன் இப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தன்னுடைய நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டுள்ளது. இந்த சமயத்தில் அந்த அமைப்பை குளிர்விக்கும் நோக்குடன், நாட்டின் 79வது சுதந்திர தின மேடையையை பயன்படுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினைப் புகழ்ந்து பேசியதுடன், அதே உரையில் ‘மக்கள் தொகை திட்டம்’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்தச் செயல்கள் மிகக் கடுமையான விமர்சனத்திற்குரியவை. ஆனாலும், பெரும்பாலான நாட்டு மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டம் தெரியாததால், அதன் அபாயம் உணரப்படவில்லை. இந்தியாவில் செயல்பட்டு வரும்… Continue reading

  • மகத்தான தோழர் ஸ்ரீனிவாச ராவ் (BSR) : நினைவு தினம் செப்டம்பர் 30

    மகத்தான தோழர் ஸ்ரீனிவாச ராவ் (BSR) : நினைவு தினம் செப்டம்பர் 30

    பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா நமது நாடு விடுதலை பெறுவதற்கு  முன்பே, அன்றைய மதராஸ் மாகாணத்தின் தமிழ் பேசும் பகுதிகளில் பொதுஉடைமை இயக்கம் மலர்ந்தது. அவ்வியக்கம் 1930களின் இறுதி ஆண்டுகளில் தொடங்கி,  தொடர்ந்து பல பத்தாண்டுகள், அன்றைய தஞ்சை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த, நிலப்பிரபுத்துவ கொடுமைகளை எதிர்த்து  மிகவும் வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தியது. ஒரே நேரத்தில், கிராமப் பகுதிகளில் நிலவிய சமூக ஒடுக்குமுறையையும், நிலப்பிரபுக்களின் வர்க்கச் சுரண்டலையும் எதிர்த்து, கம்யூனிஸ்டுகள் நடத்திய நெடிய போராட்டங்களின் விளைவாக, இப்பகுதியில், குறிப்பாக… Continue reading

  • சமகால பொது வேலைநிறுத்தத்தின் புதிய அரசியலைப் புரிந்துகொள்ளுதல்

    சமகால பொது வேலைநிறுத்தத்தின் புதிய அரசியலைப் புரிந்துகொள்ளுதல்

    சுதீப் தத்தா இந்தியா, தனது நவதாராளமய காலகட்டத்தின் 22வது பொது வேலைநிறுத்தத்தை சமீபத்தில் கண்டது. எனினும், இந்த வேலைநிறுத்தங்கள், ‘பொது’ என்ற முன்னொட்டைத் தாங்கினாலும், தொழிலாளர்களுக்கு மட்டுமேயான சமகால பொருளாதாரப் பிரச்சினைகளை  மையமாகக் கொண்டவை என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மேலும், அந்த பிரபலமான கருத்து ஒரு சமூக-உளவியல் வரம்பையும் உருவாக்குகிறது – இது பொது வேலைநிறுத்தங்களின் உண்மையான அரசியல் திறனைப் புரிந்து கொள்வதைத் தடுக்கிறது. இது முதலாளித்துவ அரசுக்கும் ஒட்டுமொத்த அமைப்புக்கும் எதிரான ஆயுதங்களாக வேலைநிறுத்தங்களை மாற்றுவதற்கான… Continue reading

  • இந்துத்துவாவும் ‘இந்து’ பெருமுதலாளித்துவமும்

    இந்துத்துவாவும் ‘இந்து’ பெருமுதலாளித்துவமும்

    பிரகாஷ் காரத் (மார்க்சிஸ்ட் ஜூலை இதழில் நமது வாசகர்களின் சில கேள்விகளுக்கு தோழர் பிரகாஷ் காரத் பதிலளித்திருந்தார். அதன்மீது வந்த ஒரு கேள்வியை அவருக்கு அனுப்பியிருந்தோம். அவரது பதில் கீழே தரப்பட்டுள்ளது. – ஆசிரியர் குழு) தெளிவுக்கான கேள்வி: சென்ற இதழில் உங்கள் பதிலில், இந்துத்துவா சித்தாந்தம் “ஒரு குறிப்பிட்ட வழியில் ‘இந்து’ பெருமுதலாளித்துவத்தை ஊக்குவிக்கிறது” என்றும், ஆர்எஸ்எஸ்-இன் இந்து ராஷ்டிரக் கருத்து “ஒரு சக்திவாய்ந்த இந்து முதலாளித்துவ ஆதிக்க அமைப்பை அடிப்படையாகக் கொண்டது” என்றும் குறிப்பிட்டீர்கள்.… Continue reading

  • செப்.2 – ஹோ சி மின் நினைவுதினம்: தனித்துவமானதொரு புரட்சியாளர்

    செப்.2 – ஹோ சி மின் நினைவுதினம்: தனித்துவமானதொரு புரட்சியாளர்

    வீ.பா.கணேசன் உலகில் இதுவரை நடைபெற்ற புரட்சிகளிலேயே, தனித்துவமான ஒன்றாகத் திகழ்வது வியட்நாம் புரட்சியாகும். இதற்கான அடிப்படைக் காரணம், வியட்நாம் புரட்சி என்பது, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய இரு பெரும் ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவங்களை நேரடியாக எதிர்த்தும், இரண்டாம் உலகப் போரின்போது இந்தோசீனப் பகுதியைக் கைப்பற்றிய ஜப்பானிய ஆக்கிரமிப்புப்படைகளை எதிர்த்தும் தீர்மானகரமான வகையில் ஆயுதம் தாங்கிப் போராடி, வெற்றிவாகை சூடிய மகத்தான ஒரு புரட்சியாகும். அத்தகையதொரு புரட்சிக்குத் தலைமையேற்று நடத்தி, வழிகாட்டிய ஹோ சி மின் தன்னளவில் தனித்துவமான… Continue reading