August 2025
-
சீரழிந்த வடிவத்தின் மீது கட்டப்படும் நவீனம்
ச. லெனின் ‘ஒரு முறை அது புனிதமானது என்று வகைப்படுத்தப்பட்ட பிறகு, அது எல்லாக் காலத்திற்கும் புனிதமானதுதான். வர்ண பேதம் என்பது மாற்ற முடியாதது’ என்று புருஷ சுக்தம் கூறுவதை அம்பேத்கர் குறிப்பிட்டுப் பேசும்போது, “ஒரு சமூகமோ, தனி நபரோ சில நெறிமுறைகளை வகுத்துக்கொண்டு வாழ்வது தவிர்க்க முடியாததுதான். ஆனால், காலத்திற்கு ஏற்றார்போல் அந்த நெறிமுறைகளில் மாற்றம் செய்துகொள்வது அவசியமாகும். எல்லாக் காலத்திற்குமான நெறிமுறை என்று எதையும் நிறுவக் கூடாது” என்றார். இந்தியச் சமூகத்தில் வர்ணபேதம் என்பது… Continue reading
-
கியூபா புரட்சியின் வீரம்மிக்க பயணம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த பல சோசலிச புரட்சிகளில் கியூபா புரட்சிக்கு ஒரு முக்கிய தனித்தன்மை உண்டு. அமெரிக்க கண்டத்தின் வரலாற்றில் முதல்முறையாக 1959 ஜனவரி 1 அன்று கியூபாவில் சோசலிச புரட்சி ஆட்சியை கைப்பற்றியது. ஏகாதிபத்திய முகாமின் தலைமையாக விளங்கும் அமெரிக்க வல்லரசின் மிக அருகாமையில் உள்ள நாடு கியூபா. உலகில் எங்குமே சோசலிசம் பரவி விடக்கூடாது; உலகம் முழுவதும் ஏகாதிபத்திய நாடுகளின் பெரும் கம்பெனிகளுக்கு லாப வேட்டைக்கான களமாகவே இருக்கவேண்டும்… Continue reading
-
ஃபிடல்: கியூபப் புரட்சி கட்டமைப்பும் பாதுகாத்தலும்
பாப்லோ மெரிகுவெட் மார்க்சிய, பொதுவுடைமைப் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் பிறந்தநாள் நூற்றாண்டு தொடங்கியுள்ளது. 1959இல் கியூபப் புரட்சி வெற்றிகண்ட பிறகு அவர்தம் அரசியல் வாழ்வைப் பற்றி அலசுவோம். 1959ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாளன்று கியூப புரட்சி வெற்றிகண்டபின், ஒருமாதம் கழித்து ஃபிப்ரவரி 16ஆம் நாள் ஃபிடல் காஸ்ட்ரோ அந்நாட்டின் பிரதம அமைச்சரானார்; மீண்டும் சில மாதங்களுக்குப் பின் அவரே கியூப அரசின் தலைவராக நியமிக்கப்பட்டார். பாடிஸ்டா படையெடுப்புக்கு எதிரான போரின் புரட்சிகர வேகத்தைக் காத்திட வேண்டியும்,… Continue reading
-
தேர்தல் சீர்திருத்தங்களின் முக்கியத்துவம்
உ. வாசுகி தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசுவதற்கு முன், தேர்தல் பற்றிய கம்யூனிஸ்டுகளின் நிலைபாட்டை நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். மார்க்ஸ், எங்கல்ஸ் காலத்தில் இருவித கருத்துக்கள் நிலவின. நாடாளுமன்ற பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிப்பதன் மூலம், தொழிலாளி வர்க்கத்துக்கு சோஷலிசத்தைக் கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஒரு நிலைபாடு. இது அமைதியான முறையில் முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறிச் செல்வதை முன்வைக்கிறது. தேர்தல், அதனுடன் இணைந்த பணி மற்றும் பிரச்சாரத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்து, களப்போராட்டத்தைக்… Continue reading
-
மனிதர்களால் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் – மார்க்சிய நோக்கில்…
பேரா. டி. ஜெயராமன் முதலாளித்துவ உலகில் இன்று உற்பத்தியும் நுகர்வும் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. புதைபடிவ எரிபொருட்களாகிய நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் போன்ற பொருட்களை முழுமையாகப் பயன்படுத்தத் துவங்கியது என்பதுதான் இந்த வியத்தகு வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக உள்ளது. இப்படி மனிதப் பயன்பாடுகளின் காரணமாக அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் என்பது இன்றைய உலகின் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. முதலில் இந்தப் பிரச்சினையின் தன்மை குறித்து வரையறை செய்வதென்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால், இதுகுறித்த… Continue reading
-
புரட்சிகர மக்கள் தலைவர் தோழர் வி. எஸ்.
ஆசாத் கருத்தும் களமும் ஒன்றிணையும் இடமாக தோழர் வி.எஸ். திகழ்ந்தார். கேரளத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ; உணர்ச்சி ததும்பும் பேச்சாளர்; ஆற்றல் மிகுந்த செயற்பாட்டாளர்; களத்தில் கருத்துக்குச் செறிவூட்டிய கருத்தாழமிக்க மார்க்சிஸ்ட். கேரள மண்ணின் வீரம் செறிந்த புன்னப்புர – வயலார் போராட்டத்தின் களப்போராளி தோழர் வி.எஸ். அச்சுதானந்தன். இந்தப் போராட்ட நெருப்பு அவரது வாழ்வின் இறுதிவரை கனன்று கொண்டேயிருந்தது. புன்னப்புர – வயலார் போராட்டம் தற்போதுள்ள கேரளாவின், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்கள்தான் புன்னப்புராவும் வயலாரும்.… Continue reading
