மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சாதி

  • சாதியும் வர்க்கமும்

    சாதியும் வர்க்கமும்

    சீத்தாராம் யெச்சூரி (சீத்தாராம் யெச்சூரி முதலாண்டு நினைவு தினம்) கம்யூனிஸ்டுகள் சமுதாயத்தில் உள்ள வர்க்கப் பிரிவினைகளைத்தான் பார்க்கிறார்கள்; சாதிக் கட்டமைப்பு பற்றி கவலைப்படுவதில்லை. இது கம்யூனிஸ்டுகள் மீது சாதிய அமைப்புகள் மற்றும் சில சுயநல சக்திகளின் குற்றச்சாட்டு. கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்திற்கே முக்கியத்துவம் தருகிறார்கள்; சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று மேலே கூறப்பட்ட குற்றச்சாட்டையே வேறு விதமாகக் கூறுவோரும் உள்ளனர். இது உண்மையல்ல. “பொருளாதாரக் கூறுகளே அடிப்படையில் தீர்மானிக்கும் சக்தி படைத்தவை” என்று… Continue reading

  • மக்கள் தொகை, சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள்

    பி. வி. ராகவலு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தலைமைப் பதிவாளர் நீண்ட தாமதத்திற்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் பிறகு, இறுதியாக 2027இல், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இதுவரையில்லாத பெரிய ஒரு மாற்றம், சாதிவாரிக் கணக்கெடுப்பைச் சேர்க்கும் முடிவாகும். இது ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) மற்றும் அதன் சித்தாந்தத் தாயான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) ஆகியவை நீண்ட காலமாக எதிர்த்துவந்த ஒரு விஷயமாகும். அரசியல் விவகாரங்களுக்கான… Continue reading

  • திமுக 75: திராவிட அரசியலின் சமூக நீதியும், சாதியச் சவால்களும்

    பேரா. கா. அ. மணிக்குமார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், ஐந்து முறை தமிழக முதல்வருமான மறைந்த கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழா கட்சியினரின் மகிழ்ச்சி பொங்க சில மாதங்களுக்கு முன்பு நடந்து நிறைவடைந்தது. தமிழ்மொழிப் புலமைக்காகவும், அரசியல் அறிவுக்கூர்மைக்காகவும், துணிச்சலுக்காகவும் அறியப்பட்ட கலைஞர், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். அவர் தலைமையேற்ற காலத்தில், திமுகவில் மூன்று பெரிய பிளவுகளை சந்தித்தபோதிலும், தனது மறைவுக்காலம் வரை கட்சியை ஒற்றுமையாக,… Continue reading

  • சாதி அமைப்பை சற்றும் தயையின்றி ஒழிப்பது

    நூல் அறிமுகம் கே.சுவாமிநாதன் “சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள்: கள அனுபவங்கள்” – பி. சம்பத் “சாதி ஒடுக்குமுறை மற்றும் சாதிய பாகுபாடு பிரச்சினை நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பு முறைமைக்குள் அதன் வேர்கள் ஆழமாகப் புதைந்தும் உள்ளன. முதலாளித்துவ வளர்ச்சியை உள்ளடக்கிய சமூக அமைப்பு, ஏற்கனவே உள்ள சாதிய அமைப்புடன் சமரசம் செய்து கொண்டுள்ளது. இந்திய முதலாளித்துவமே சாதிய பாரபட்சங்களை வளர்க்கிறது. உழைப்பாளி வர்க்கங்களின் அங்கமாக மிகப் பெரும்பான்மை தலித்… Continue reading