தொழிலாளி வர்க்கம்
-
சமகால பொது வேலைநிறுத்தத்தின் புதிய அரசியலைப் புரிந்துகொள்ளுதல்

சுதீப் தத்தா இந்தியா, தனது நவதாராளமய காலகட்டத்தின் 22வது பொது வேலைநிறுத்தத்தை சமீபத்தில் கண்டது. எனினும், இந்த வேலைநிறுத்தங்கள், ‘பொது’ என்ற முன்னொட்டைத் தாங்கினாலும், தொழிலாளர்களுக்கு மட்டுமேயான சமகால பொருளாதாரப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டவை என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மேலும், அந்த பிரபலமான கருத்து ஒரு சமூக-உளவியல் வரம்பையும் உருவாக்குகிறது – இது பொது வேலைநிறுத்தங்களின் உண்மையான அரசியல் திறனைப் புரிந்து கொள்வதைத் தடுக்கிறது. இது முதலாளித்துவ அரசுக்கும் ஒட்டுமொத்த அமைப்புக்கும் எதிரான ஆயுதங்களாக வேலைநிறுத்தங்களை மாற்றுவதற்கான… Continue reading
-
மே தினமும் – பொது வேலை நிறுத்தங்களும்
எஸ். கண்ணன் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை, வேலை நாளின் நீட்டிப்பைக் கொண்டு, மனித உழைப்பு சக்தியின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் வேண்டிய இயல்பான, தார்மீக, பௌதீக நிலைமைகளைக் கூட, தொழிலாளர்களுக்கு கிடைக்காதபடி கொள்ளையிட்டு, அச்சக்தியை சீரழிய செய்வதுடன் வற்றிப் போகும்படியும் செய்கிறது. — காரல் மார்க்ஸ் வேலை நாள் குறித்த பகுதியில் எழுதியது. மார்க்ஸ் பிறந்த மே 5ம், ஒரு வேலை நாளில் தங்களின் உழைப்பு நேரத்தை 8 மணி நேரமாக வரையறை செய்ய வேண்டுமெனவும் நாளின்… Continue reading
-
நவீன தாராளவாதத்திற்கும் பாசிச எதேச்சதிகாரத்திற்கும் எதிராக தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவோம்
ஆர். எஸ். செண்பகம் உலகெங்கிலும் தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி தொடர்கிறது. நவீனதாராளவாதக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள அதிருப்தியே, இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். தொழிலாளர்கள், தங்களுடைய வேலை நிலைமைகள் மற்றும் ஊதியத்தின் மீது அதிருப்தி உடையவர்களாக இருப்பதுடன், தங்கள் வேலை குறித்து வாயைக் கூட திறக்க முடியாதச் சூழல் நிலவுவதால், ஜனநாயத்தின் மீதான நம்பிக்கையை இழந்தவர்களாக உள்ளனர். இதன் விளைவு, வலதுசாரி சக்திகளின் பிறள் பிரச்சாரங்களுக்கு ஆளாகிப் பலியாகின்றனர். அதேநேரத்தில், இடதுசாரி சக்திகளும், தொழிற்சங்கங்களும் வலுவாக உள்ள இடங்களில்,… Continue reading
-
தொழிலாளி விவசாயி ஒற்றுமையின்அவசியம்
உ. வாசுகி தொழிலாளி விவசாயி கூட்டணி குறித்து கட்சி திட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் தொழிலாளி விவசாயி ஒற்றுமைக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. மக்கள் ஜனநாயக புரட்சி, அதற்கான மக்கள் ஜனநாயக முன்னணி என்று கட்சித் திட்டம் பேசும் இடத்தில், மக்கள் ஜனநாயக முன்னணியில் இடம்பெறும் வர்க்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. தொழிலாளி வர்க்கம் தலைமை ஏற்கும் என்று சொல்வதோடு, திட்டத்தின் 7.6 பத்தி, “தொழிலாளி விவசாயி வர்க்கங்களின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானது, அடித்தளமானது. ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்த, இந்த கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில், இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் என்பது, தொழிலாளி… Continue reading
-
ஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …

தேர்தல் தோல்வியை ஒட்டுமொத்த தோல்வியாக பார்க்கும் போக்கை கடந்து, தேர்தலை எவ்வாறு பார்க்க வேண்டும்; முழுமையான சமூக விடுதலையை தேர்தல் மூலமாக மட்டுமே அடைந்து விட முடியாது என்கிற அதே நேரத்தில், தேர்தலை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும் என்பதை விளக்கிடும் மார்க்ஸ் மற்றும் எங்கல்சின்… Continue reading
