September 8, 2025
-
சமகால பொது வேலைநிறுத்தத்தின் புதிய அரசியலைப் புரிந்துகொள்ளுதல்

சுதீப் தத்தா இந்தியா, தனது நவதாராளமய காலகட்டத்தின் 22வது பொது வேலைநிறுத்தத்தை சமீபத்தில் கண்டது. எனினும், இந்த வேலைநிறுத்தங்கள், ‘பொது’ என்ற முன்னொட்டைத் தாங்கினாலும், தொழிலாளர்களுக்கு மட்டுமேயான சமகால பொருளாதாரப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டவை என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மேலும், அந்த பிரபலமான கருத்து ஒரு சமூக-உளவியல் வரம்பையும் உருவாக்குகிறது – இது பொது வேலைநிறுத்தங்களின் உண்மையான அரசியல் திறனைப் புரிந்து கொள்வதைத் தடுக்கிறது. இது முதலாளித்துவ அரசுக்கும் ஒட்டுமொத்த அமைப்புக்கும் எதிரான ஆயுதங்களாக வேலைநிறுத்தங்களை மாற்றுவதற்கான… Continue reading
-
இந்துத்துவாவும் ‘இந்து’ பெருமுதலாளித்துவமும்

பிரகாஷ் காரத் (மார்க்சிஸ்ட் ஜூலை இதழில் நமது வாசகர்களின் சில கேள்விகளுக்கு தோழர் பிரகாஷ் காரத் பதிலளித்திருந்தார். அதன்மீது வந்த ஒரு கேள்வியை அவருக்கு அனுப்பியிருந்தோம். அவரது பதில் கீழே தரப்பட்டுள்ளது. – ஆசிரியர் குழு) தெளிவுக்கான கேள்வி: சென்ற இதழில் உங்கள் பதிலில், இந்துத்துவா சித்தாந்தம் “ஒரு குறிப்பிட்ட வழியில் ‘இந்து’ பெருமுதலாளித்துவத்தை ஊக்குவிக்கிறது” என்றும், ஆர்எஸ்எஸ்-இன் இந்து ராஷ்டிரக் கருத்து “ஒரு சக்திவாய்ந்த இந்து முதலாளித்துவ ஆதிக்க அமைப்பை அடிப்படையாகக் கொண்டது” என்றும் குறிப்பிட்டீர்கள்.… Continue reading
-
செப்.2 – ஹோ சி மின் நினைவுதினம்: தனித்துவமானதொரு புரட்சியாளர்

வீ.பா.கணேசன் உலகில் இதுவரை நடைபெற்ற புரட்சிகளிலேயே, தனித்துவமான ஒன்றாகத் திகழ்வது வியட்நாம் புரட்சியாகும். இதற்கான அடிப்படைக் காரணம், வியட்நாம் புரட்சி என்பது, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய இரு பெரும் ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவங்களை நேரடியாக எதிர்த்தும், இரண்டாம் உலகப் போரின்போது இந்தோசீனப் பகுதியைக் கைப்பற்றிய ஜப்பானிய ஆக்கிரமிப்புப்படைகளை எதிர்த்தும் தீர்மானகரமான வகையில் ஆயுதம் தாங்கிப் போராடி, வெற்றிவாகை சூடிய மகத்தான ஒரு புரட்சியாகும். அத்தகையதொரு புரட்சிக்குத் தலைமையேற்று நடத்தி, வழிகாட்டிய ஹோ சி மின் தன்னளவில் தனித்துவமான… Continue reading
