மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


March 2021

  • விவசாயப் பிரச்னையும், சோசலிசமும்

    என். குணசேகரன் மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் எழுச்சி, அவ்வப்போது விவசாய பாதிப்புகளுக்காக எழுகிற தற்காலிக போராட்டம் அல்ல. இந்திய விவசாய நெருக்கடி மிகக் கடுமையானது என்பதை இந்தப் போராட்டம் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது. ஆளும் வர்க்கங்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, விவசாய பொருட்களை சந்தை சரக்காக மாற்றி, ஏகபோக மூலதனத்தின் ஆதிக்கத்தை விவசாயத்தில் நிலைநாட்ட முயற்சிக்கிறது என்பதையும் இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது. மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள்… Continue reading

  • சாதிய பாலின ஒடுக்குமுறை, மத அடிப்படைவாதம்: இந்துத்துவ சித்தாந்தத்தின் பிரிக்க முடியாத அம்சம்

    உ. வாசுகி மத்திய பாஜக ஆட்சியின் நடவடிக்கைகளை ஒரு சராசரி முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியின் நடவடிக்கைகளாக மட்டும் வரையறுக்க முடியாது என்பதும், பாசிச சித்தாந்தத்தைப் பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஆட்சி என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட வேண்டும் என்பதும் இவ்விதழின் பல கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சி பாசிச ஆட்சியா?இல்லையா? என்ற விவாதத்தை நடத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல என்றாலும், பாசிசத் தன்மை கொண்ட நடவடிக்கைகளை அது எடுத்துவருகிறது என்பதில் இருவேறு கருத்து… Continue reading

  • நம்பிக்கையூட்டும் லத்தீன் அமெரிக்கா

    அபிநவ் சூர்யா லத்தீன் அமெரிக்க நாடுகளின் அண்மைக்கால நிகழ்வுகளும் வளர்ச்சிகளும் சர்வதேச இடதுசாரி இயக்கங்களுக்கு முக்கிய பாடமாகவும், பெருமளவு உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளன. குறிப்பாக, 2019ல் துவங்கி, இன்று வரை, அப்பகுதியின் பல நாடுகளிலும் பெருந்திரளான மக்கள் அமெரிக்கா ஆதரவுடன் அமலாகி வரும் ஏகாதிபத்திய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து வருகின்றனர். பல காலமாக லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா தன் சொந்த ஆட்சிக்களமாக நினைத்து, அங்கு அனைத்து நாடுகளையும் தன் கட்டளைகளுக்கு அடிபணிய வைக்க முயற்சித்து… Continue reading

  • சொல்லகராதி: “உழைப்பு சக்தி – உபரி உழைப்பு”

    உழைப்பு சக்தி என்பது உயிர்வாழும் உழைப்பாளியின் உருவத்தில் இருக்கிறது. அந்த உழைப்பாளிக்கும் அவன் இறந்த பின்பும் உழைப்பு சக்தி தொடர்ந்து கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் அவன் குடும்பத்துக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வாழ்க்கைத் தேவைகள் அவசியமாகின்றன. அத்தேவைகளை உற்பத்தி செய்ய எவ்வளவு உழைப்பு நேரம் அவசியப்படுகிறதோ அந்த உழைப்பு நேரம்தான் உழைப்பு சக்தியின் மதிப்பாகிறது. ஒரு தொழிலாளி, ஒரு குறிப்பிட்ட வரலாற்று சகாப்தத்தில், ஒரு குறிப்பிட்ட நாட்டின் வரலாற்று முறையில் நிலைநாட்டப்பட்டுவிட்ட வழியில் தன்னை பராமரித்துக் கொள்ளவும்,… Continue reading

  • வறுமையை ஒழிக்கும் போராட்டத்தில் சோசலிச சீனா!

    இரா. சிந்தன் ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற முழக்கம் கேட்காத நாடே உலகில் கிடையாது. பெரு முதலாளிகளின் வயிற்றை வளர்ப்பதில் மட்டுமே குறிக்கோளாக செயல்படும் முதலாளித்துவ அரசுகள் கூட, இவ்வகையில் நாங்கள் ‘வறுமையை வளர்க்கிறோம்’ என்று உண்மையைச் சொல்வதில்லை. அதனால் வறுமை ஒழிப்பு முழக்கம், என்றும் புகழ் குன்றாத, இறப்பேயில்லாத முழக்கமாக நீடிக்கிறது. இப்படியான சூழலில்தான் நம்புவதற்கே அரிதான விதத்தில்,மக்கள் சீன குடியரசு, தனது நாட்டில் அதீத வறுமையை ஒழித்துவிட்டது என்ற செய்தி வெளிவந்துள்ளது. சியா கங் (xiaokang)… Continue reading

  • சர்வதேச நிதி மூலதனத்திலுருந்தான விடுதலைக்கான பாதை

    பிரபாத் பட்நாயக் இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன் என்னென்ன நிகழ்ந்தன? கம்யூனிஸ்ட் ஆட்சிகள் முன்னேறின. வளர்ந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றன. பிரிட்டன் தேர்தலில் வின்ஸ்டன் சர்ச்சில் தோல்வியைத் தழுவினார். பிரான்ஸ், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும் பலம் பெற்றதை எல்லோரும் கண்டனர். காலனி, அரைக் காலனி, சார்ந்துள்ள நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் மத்தியில் எதிர்பாராத குழப்பம் ஏற்பட்டது. போரினால் தாக்கப்பட்டு பலவீனமான ஏகாதிபத்திய தலைநகரங்களின் மூலதனம் சில சலுகைகளை அறிவிக்க வேண்டிய கட்டாய… Continue reading

  • சாதிய அமைப்பும் கம்யூனிஸ்ட் செயல்திட்டமும்

    பிருந்தா காரத் “அடிமைத்தனம், சாதிய அமைப்பு, (சமூகம், கலாச்சாரம் போன்ற) அனைத்து வடிவங்களிலுமான சாதிய ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை முற்றிலுமாக அழித்தொழிக்கவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. உழைக்கும் தீண்டத்தகாதவர்கள் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து உழைப்பாளிகளின் முழுமையான, முற்றிலுமான சமத்துவத்திற்காகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது”.1930ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட செயலுக்கான மேடை என்ற கட்சி ஆவணத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் இவை. இதன் இன்றைய முக்கியத்துவம் என்ன? 1930ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி முதன்முதலாக வெளியிட்ட இந்தக்… Continue reading