December 2024
-
தமிழகத்தில் பொருள் முதல்வாதத்தின் சருக்கலும், வைதீக ஆக்கிரமிப்பும்!
இரா.சிந்தன் தமிழகத்தில் நிலவிய குடிவாழ்க்கையில், முன்னிலைப் பொருள்முதல்வாத நோக்கு நிலவியது. தொன்ம நம்பிக்கைகளும் உருவாகின. இவை உலகம் முழுவதும் நிலவக்கூடிய இயல்பான போக்குதான். தமிழ் இலக்கியங்களின் தொன்மையின் காரணமாக, ஆதிச் சமூகத்தின் தத்துவங்கள் அதன் இலக்கணத்திலும், கட்டமைப்பிலும், கலாச்சார வாழ்க்கையிலும் தொடர்ந்ததை பார்த்தோம். அதன் பின்னர் வர்க்க சமுதாயத்தில் தத்துவப் போக்கில் சில சருக்கல்கள் ஏற்பட்டிருந்தாலும், சுமார் 1500 ஆண்டுகள் தமிழர் இலக்கியங்களின் தத்துவ நோக்கில் பொருள் முதல்வாத பார்வைக்கு முக்கிய இடம் இருந்ததை தேவ பேரின்பன்… Continue reading
-
வெண்மணியின் குரலாய் சட்டமன்றத்தில் சங்கரய்யா
கீழ்வெண்மணி படுகொலை தொடர்பாக “தஞ்சை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு தவறியது; கீழ்வெண்மணி கிராமத்தில் தீவைப்பால் பலர் உயிரிழந்தது குறித்த அமைச்சரவையின் கொள்கையைக் கண்டிக்கும்” ஒரு கண்டனத் தீர்மானத்தை , காங்கிரஸ் கட்சி முன்மொழிந்தது. அதன் மீது 1969 பிப்ரவரி 28 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தோழர் சங்கரய்யா ஆற்றிய உரையை வெண்மணி நினைவு தினத்தை ஒட்டி இங்கு பிரசுரிக்கிறோம். – ஆசிரியர் குழு திரு. என். சங்கரய்யா :… Continue reading
-
இயக்கவியல் பொருள்முதல்வாதம்
மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு அறிமுகம் மார்க்சிய தத்துவம், மற்ற அனைத்து தத்துவ இயல்களைக் காட்டிலும் மிகச் சிறந்த, விஞ்ஞான முறையிலான புரட்சிகர தத்துவமாகும். மார்க்சிய தத்துவம், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்தை கோட்பாட்டு வழியிலும் சித்தாந்த வழியிலும் ஆகச் சிறந்த விதத்தில் ஆற்றல்மிக்க ஆயுதப்பாணியாக்குகிறது. பல சிக்கல்கள் நிறைந்த சமூக, அரசியல் நிலைமைகளை சரியான முறையில் அணுகுவதற்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தகுதிப்படுத்துகிறது. நடைமுறையை விஞ்ஞான வழியில் பகுத்தாய்வு செய்வதற்கும், வரையறுக்கப்பட்ட முன்னுரிமை கடமைகளை தெளிவாக … Continue reading
-
தமிழகத் தத்துவ வேர்களும், மாற்றப் போக்குகளும் !
இரா. சிந்தன் தேவ. பேரின்பன் எழுதியுள்ள “தமிழர் வளர்த்த தத்துவங்கள்” என்ற நூல், அவரது மறைவுக்கு பின் 2014ஆம் ஆண்டில் அச்சாக்கம் பெற்றது. இறுதிக் காலத்தில் அவர் எழுதி முடிக்க முயன்றிருந்த இந்த நூலில், தமிழ்நாட்டு தத்துவங்களின் வேர்களையும், மாற்றப்போக்குகளையும் மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்துள்ளார். இந்திய பொருள் முதல்வாதத்தின் வரலாற்றை மீட்டெடுத்த அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் தடம் பற்றி, தமிழகத்திலும் அந்தத் தேடலை விரிவாக்கிட வேண்டியுள்ளது. அவ்வகையில் பழந்தமிழர் இலக்கியங்களில் பதிவாகியுள்ள பொருள்முதல்வாத தத்துவங்களைப்… Continue reading
-
பொதுவுடைமை உலகை நோக்கிய மானுடப் பயணம் தொடரும், வெல்லும்! – 2
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இக்கட்டுரை தொடரின் முதல் பகுதி சென்ற இதழில் வெளியானது. அதில் போல்ஷெவிக் கட்சியின் தலைமையில் நிகழ்ந்த மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சி எதிர்கொண்ட பெரும் சவால்கள், அப்புரட்சி நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகள் பற்றி சுருக்கமாகப் பார்த்தோம். பின்னர் 1991இல் அது வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் பற்றி விரிவாக விவாதிக்காவிட்டாலும், சுருக்கமாக குறிப்பிட்டிருந்தோம். அதனை தொடர்ந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நீண்ட பயணம் மேற்கொண்டு, நெடிய போராட்டங்களை நடத்தி… Continue reading
-
லெனினின் தத்துவ பங்களிப்புகள்
ஜி. விஜயகுமார் பகுதி – 1 சுருக்கமாக, எதிர்மறைகளின் ஒற்றுமை பற்றிய தத்துவமே இயக்கவியல் தத்துவமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இயக்கவியலின் சாரம் இந்த வரைமுறையில் அடங்கியுள்ளது. இருப்பினும், இந்த விஷயத்தில் மேலும் தெளிவுபடுத்தல் தேவை; இதனை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் – இந்தச் சொற்கள் ஹெகல் எழுதிய ” தர்க்கத்தின் அறிவியல்” நூலுக்கு லெனின் தயாரித்த குறிப்புகளில் காணப்படுகின்றன (லெனின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 38, பக்கம் 222). சொல்லப் போனால், ஹெகலின் எழுத்துக்கள் இடையே லெனின் தனது… Continue reading
-
கலாச்சார அரங்கில் கட்சியின் கடமைகள்
எம். ஏ. பேபி(அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்) 1. ஐந்தாண்டுகளுக்கு முன்பு, 2017 அக்டோபர் 14-16 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் ‘கலாச்சார அரங்கில் நமது கடமைகள்’ என்ற ஆவணம் நிறைவேற்றப்பட்டது. 2. இந்த ஆவணத்தைப் புரிந்து கொண்டு உள்வாங்கவும், பல்வேறு மாநிலங்களில் அதைச் செயல்படுத்தவுமான முயற்சிகள் தொடர்கின்றன. மற்ற இந்திய மொழிகளோடு கூடவே, இந்தியிலும் இந்த ஆவணத்தின் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு மட்டங்களில், இந்த ஆவணம் குறித்து, செயல்பாட்டாளர்களிடையே எடுத்துக் கூறும் பணி,… Continue reading
-
திமுக 75: திராவிட அரசியலின் சமூக நீதியும், சாதியச் சவால்களும்
பேரா. கா. அ. மணிக்குமார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், ஐந்து முறை தமிழக முதல்வருமான மறைந்த கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழா கட்சியினரின் மகிழ்ச்சி பொங்க சில மாதங்களுக்கு முன்பு நடந்து நிறைவடைந்தது. தமிழ்மொழிப் புலமைக்காகவும், அரசியல் அறிவுக்கூர்மைக்காகவும், துணிச்சலுக்காகவும் அறியப்பட்ட கலைஞர், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். அவர் தலைமையேற்ற காலத்தில், திமுகவில் மூன்று பெரிய பிளவுகளை சந்தித்தபோதிலும், தனது மறைவுக்காலம் வரை கட்சியை ஒற்றுமையாக,… Continue reading
-
சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் வெளிப்பட்ட மார்க்சியப் பார்வை
நர்மதா தேவி பல்வேறு சிக்கல்கள் நிறைந்த ஒரு சமூகத்தில், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை துல்லியமாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கணித்திடவும், தனது கடமைகளையும், உத்திகளையும் வகுத்திட மார்க்சிய லெனினிய தத்துவம் அடிப்படையாகும். 1917-இல் தோழர் லெனின் தலைமையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் தொழிலாளர் அரசு, சுரண்டலை ஒழித்திடவும், சமத்துவத்தை மலரச் செய்திடவும் எடுத்த தீர்க்கமான நடவடிக்கைகள், இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்களை மார்க்சிய தத்துவத்தின்பால் ஈர்த்தன. இந்திய நாடு, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை… Continue reading
-
நவீன தாராளவாதத்திற்கும் பாசிச எதேச்சதிகாரத்திற்கும் எதிராக தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவோம்
ஆர். எஸ். செண்பகம் உலகெங்கிலும் தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி தொடர்கிறது. நவீனதாராளவாதக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள அதிருப்தியே, இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். தொழிலாளர்கள், தங்களுடைய வேலை நிலைமைகள் மற்றும் ஊதியத்தின் மீது அதிருப்தி உடையவர்களாக இருப்பதுடன், தங்கள் வேலை குறித்து வாயைக் கூட திறக்க முடியாதச் சூழல் நிலவுவதால், ஜனநாயத்தின் மீதான நம்பிக்கையை இழந்தவர்களாக உள்ளனர். இதன் விளைவு, வலதுசாரி சக்திகளின் பிறள் பிரச்சாரங்களுக்கு ஆளாகிப் பலியாகின்றனர். அதேநேரத்தில், இடதுசாரி சக்திகளும், தொழிற்சங்கங்களும் வலுவாக உள்ள இடங்களில்,… Continue reading
