January 2025
-
இயக்கவியல் பொருள்முதல்வாதம் (பகுதி -2)
மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு லெனின் கூறுகிறார்: “மனிதர்கள் கருத்தாக்கங்களால் நெய்யப்பட்ட வலைப்பின்னலுக்கு முன்னால் நிறுத்தப்படுகின்றனர் … வகைகள் (categories) வேறுபடுத்துவதற்கான நிலைகள், அதாவது, உலகத்தை அறிந்துகொள்கிற பல நிலைகளாகும். வலைப் பின்னலின் மையப்புள்ளிகள், அவை அறிவதிலும் தேர்ச்சி பெறுவதிலும் உதவுகின்றன” (Lenin Collected Works, Vol. 38) குறிப்பானதும் பொதுவானதும் ஒவ்வொரு பொருளும் குறிப்பான தனி இயல்புகளை பெற்றிருக்கிறது. அது மற்ற பொருட்களில் இருந்து அந்த குறிப்பிட்ட பொருளை பிரித்து உணர்ந்திட உதவுகிறது. மேலும். ஒவ்வொரு… Continue reading
-
நீலகண்ட சாஸ்திரிக்கு அப்பால்: திராவிட-ஆரியக் கதையாடல்கள் ஒரு மீள்பார்வை
டாக்டர்.ஜே. ரவிக்குமார் ஸ்டீபன் அறிமுகம் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியின் 1964ஆம் ஆண்டு உரையை தி இந்து நாளிதழ் இத்தருணத்தில், குறிப்பாக, சமீபத்தில் ஏராளமான ஆய்வுகள் வெளிவரும் இத்துறையில், மீளாய்வுக்குத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பது விதந்தோதத் தக்கதாக உள்ளது. சமகால ஆய்வுகள் மானுடவியல் மரபியலில் புதிய வெளிச்சத்தை வழங்கியுள்ளன. ஹோமோ சேபியன்ஸ் ஆப்பிரிக்காவில் தோன்றினர் என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன. பேராசிரியர் டாக்டர் ஆர். பிச்சப்பனின் ஆய்வுகள், எல்1 ஹாப்லோ குழுவுடன் நாடார், ஈழவர், திய்யா ஆகிய சமூகங்களை இணைக்கும்… Continue reading
-
ஏகபோகங்களின் – நாசகர முதலாளித்துவ முற்றுகைக்குள் இந்தியா
ஆர். கருமலையான் இந்தியாவில், சொத்து ஒரு சிலரின் கைகளில் குவிவதும், திரள்வதும் வேகமெடுத்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை உயர்வதும், சொத்தின் அளவு உயர்வதையும் பூர்ஷூவா ஊடகங்கள், சாதாரண மக்களிடம், ‘தேசத்தின் பெருமை’ போல சித்தரிக்கின்றன, மக்களின் வருமானமும் நுகர்வு மட்டங்களும் மிகுந்த வேகத்தில் சுருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த அருவருப்பான நிகழ்வு,பொருளாதார வளர்ச்சி என்று மோடியாலும் அவரது கூட்டத்தினராலும் தம்பட்டம் அடிக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அதிகரித்துக் கொண்டிருக்கும் துயரங்களை, வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு ‘தேவைப்படும் தியாகம்’ என… Continue reading
-
லெனின்: தொழிலாளர் -விவசாயி கூட்டணியின் சிற்பி
அசோக் தவாலே ஜனவரி 19: தொழிலாளர் – விவசாயி ஒற்றுமை தினம்லெனின் நினைவு நூற்றாண்டு (லெனின் நினைவு நூற்றாண்டை ஒட்டி, தொழிலாளர் – விவசாயி கூட்டணி பற்றிய லெனினின் முன்னெடுப்புகளைச் சுட்டிக் காட்டி, இக்கருத்தாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து தோழர் அசோக் தவாலே எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை, ஜனவரி 19 தொழிலாளர் – விவசாயி ஒற்றுமை தின அனுசரிப்பு தருணத்தில் வெளியிடுகிறோம் – ஆசிரியர் குழு) புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டு மார்க்சிஸ்டும், ‘வரலாறும் வர்க்க உணர்வும்’ என்ற மகத்தான… Continue reading
-
இந்தியாவில் வறுமையின் உண்மை நிலவரம்
அபிநவ் சூர்யா வறுமை மற்றும் வறுமை ஒழிப்பு என்பது இந்தியா மற்றும் வளரும் நாடுகளின் சூழலில் அதிக அளவில் விவாதிக்கப்படும் ஒரு பேசு பொருளாகத் தொடர்ந்து நிலவுகிறது. எந்த ஒரு நாடு அல்லது அரசு முறையின் வெற்றி – தோல்வியை கணக்கிடும் உரைகல்லாக வறுமை ஒழிப்பு நிலவுகிறது. இன்றைய சூழலில் வறுமை விகிதத்தை கணக்கிட்டு, அதன் அடிப்படையில்தான் வறுமையை ஒழிப்பது நோக்கிய வளங்களும், பொதுச் செலவினங்களும் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் இந்த வறுமை, வறுமை விகிதம் மற்றும் வறுமை… Continue reading
-
தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இடது ஜனநாயக மாற்றை உருவாக்குவோம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 வது தமிழ்நாடு மாநில மாநாட்டு அறைகூவல் தமிழகத்தில், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரி கொள்கைகளே சரியான மாற்றாக அமைய முடியும். சமூகத்தின் மேல்தட்டில் இருக்கும் ஒரு சிறு கூட்டத்தினர் நலன்களை பாதுகாக்கின்ற கொள்கைகளை அகற்றி, உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளை கொண்ட இடதுசாரி மாற்று தமிழகத்தில்… Continue reading
-
சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் உத்திகள்
என். குணசேகரன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர் அமைப்பான கட்சி காங்கிரஸ் அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்குகிற நிகழ்வாக அமைந்துள்ளது. இது அரசியல் நடைமுறை உத்தி எனப்படும். அமைப்பு சார்ந்த நிலைகளை விவாதித்து செயல்பாடுகளை மேம்படுத்திட திட்டமிடும் ஒரு தருணமாகவும் கட்சி காங்கிரஸ் அமைகின்றது. கடந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி எவ்வாறு அமலாக்கப்பட்டது என்பதும், அடுத்த மூன்று ஆண்டுகால அரசியல் நடைமுறை உத்தி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும், கட்சி காங்கிரஸின்… Continue reading
-
இயக்கவியல் பொருள்முதல்வாதம் – மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு
அறிமுகம் மார்க்சிய தத்துவம், மற்ற அனைத்து தத்துவ இயல்களைக் காட்டிலும் மிகச் சிறந்த, விஞ்ஞான முறையிலான புரட்சிகர தத்துவமாகும். மார்க்சிய தத்துவம், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்தை கோட்பாட்டு வழியிலும் சித்தாந்த வழியிலும் ஆகச் சிறந்த விதத்தில் ஆற்றல்மிக்க ஆயுதப்பாணியாக்குகிறது. பல சிக்கல்கள் நிறைந்த சமூக, அரசியல் நிலைமைகளை சரியான முறையில் அணுகுவதற்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தகுதிப்படுத்துகிறது. நடைமுறையை விஞ்ஞான வழியில் பகுத்தாய்வு செய்வதற்கும், வரையறுக்கப்பட்ட முன்னுரிமை கடமைகளை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும், அவற்றை நிறைவேற்றுவதற்கான… Continue reading
-
அபார்ட்மண்ட் குடிசைககளால் கட்டப்படும் சர்வதேச நகரம்
எஸ். கிஷோர்குமார் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில் சென்னை பெருநகரின் பங்களிப்பு இன்றிமையாதது. தமிழ்நாட்டின் மொத்த வருமானத்தில் 25% மேலாக சென்னை பெருநகரின் பங்குள்ளது. இந்தியாவின் ஷென்ஷன் (India’s Shenzhen), தெற்காசியாவின் டெட்ராய்ட் (Detroit) என்றெல்லாம் புகழப்படும் அளவிற்கு தொழிற்துறை மற்றும் சேவை உற்பத்தியில் முன்னனியில் சென்னை பெருநகரம் உள்ளது. இப்படி பொருளாதரத்தில் முன்னேற்றமும் அதே நேரத்தில் இந்தியாவில் மக்கள் நலத்திட்டங்கள் குறிப்பாக கல்வியிலும், சுகாதரத்திலும் தமிழ்நாடு முதன்மையாக திகழ்கிறதென்ற கருத்து… Continue reading
-
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி – மறுமலர்ச்சிக்கான மக்களின் நம்பிக்கை!
அருண் குமார் இலங்கை ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் உலகளாவிய சூழ்நிலையில் மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பல நாடுகளில் வலதுசாரி அல்லது தீவிர வலதுசாரி சக்திகள் அதிகாரத்தின் மையத்தை கைப்பற்றுவதைக் காணமுடிகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அண்மைய எடுத்துக்காட்டாகும். இந்தப் போக்கிலிருந்து மாறுபட்டு, இலங்கையில் ஜனதா விமுக்தி பெருமன (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி (NPP) குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜனதா விமுக்தி… Continue reading
