February 2025
-
திருநெல்வேலி எழுச்சியில் வ.உ.சி : புரட்சிவானத்தில் ஒரு விடிவெள்ளி !
இரா. சிந்தன் திருநெல்வேலி எழுச்சியில் வ.உ.சி புரட்சிவானத்தில் ஒரு விடிவெள்ளி! இரா. சிந்தன் ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ என்ற ஆய்வு நூலுக்கு, 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நூலாசிரியரும் ஆய்வாளருமான ஆ.இரா.வெங்கடாசலபதி, திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவிடங்களை நெல்லையிலும் தூத்துக்குடியிலும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 1908 திருநெல்வேலி எழுச்சி, தமிழ்நாட்டின் வரலாற்றில் முத்திரை பதித்த ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சியாகும். அந்த எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்த வரலாற்று நிகழ்வுகள் இன்றும்… Continue reading
-
சோசலிசமும் சமமான வாய்ப்பு எனும் சொல்லாடலும்
ச. லெனின் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள சோசலிசம் என்கிற வார்த்தையை நீக்கவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில், சோசலிசம் எனும் சொல் எந்தத் தத்துவத்தையும் முன்வைத்து, நமது அரசியல் சாசனத்தில் முன்வைக்கப்படவில்லை; அனைத்து குடிமக்களுக்கும், சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் சேமநல அரசாக இந்தியா இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் அது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதை அரசியல் சாசனத்தின் முகப்புரையிலிருந்து நீக்கவேண்டியதில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல்… Continue reading
-
மோடி அரசின் மேலும் ஒரு தாக்குதல்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இதுவரை ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து ஏழு முறை தாக்கல் செய்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பிப்ரவரி 1, 2025 எட்டாம் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது பட்ஜெட்களை தொடர்ந்து கவனித்தால், இவை எதிலும் மக்கள் நலன் சார்ந்த பார்வை இருந்ததில்லை என்பதைக் காண முடியும். இவரது எட்டாவது பட்ஜெட்டும் இதேபாணியில்தான் அமைந்துள்ளது. அதிதீவிர நவீன தாராளமய கொள்கைகள் மூலம் இந்திய பொருளாதாரத்தை, இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளித்துவ… Continue reading
-
இயக்கவியல் பொருள்முதல்வாதம்: மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு (பகுதி -3)
3) வளர்ச்சியின் அடிப்படை விதிகள்எல்லாமே வளர்ச்சிப் போக்கிலே இருந்து வருவதாகவே இயக்கவியல் பார்க்கிறது. எதுவும் நிலையாக இல்லை. துளியூண்டு பொருளில் இருந்து பிரம்மாண்டமான பொருள் வரை எல்லாமே வளர்ச்சிப் போக்கில் உள்ளன. இந்த வளர்ச்சிப் போக்கும் சில விதிகளுக்கு உட்பட்டது. மாற்றத்தையும் வளர்ச்சியையும் உருவாக்க வல்ல இந்த இயக்கம் எங்கிருந்து வந்தது? வளர்ச்சியை வழிநடத்துவதும் அதன் திசை வழியை தீர்மானிப்பதும் எது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையை வளர்ச்சியின் விதிகளின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். முக்கிய விதிகள்… Continue reading
-
இந்தியாவுக்கான மாற்றுப் பாதைக்கு வழிகாட்டும் ஆவணங்கள்
மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் முக்கிய ஆவணங்கள் விவாதிக்கப்படவுள்ளன. தற்போது மத்தியகுழு இரண்டு நகல் ஆவணங்களை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதத்திற்காக சுற்றுக்கு விட்டுள்ளது . ஒன்று, கடந்த 24 வது மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி அமலாக்கம் குறித்த பரிசீலனை அறிக்கை ; மற்றொரு ஆவணம், எதிர் வரும் ஆண்டுகளுக்கான அரசியல் நிலைப்பாட்டை உள்ளடக்கிய நகல் அரசியல் தீர்மானம். கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு முக்கிய… Continue reading
