March 2025
-
புரட்சியின் மலர்களும், புத்தக வாசமும்!
இரா.சிந்தன் (டிரை காண்டினெண்டல்: சமூக ஆய்வு நிறுவனம் சார்பில் ‘சிவப்பு புத்தக தினத்துக்காக’ வெளியிடப்பட்ட “வாசிப்பின் பேரானந்தம்” பிரசுரத்தை தழுவி எழுதப்பட்டது) மன்னர்களும், நிலவுடைமையாளர்களும் கோலோச்சிய காலத்தில், எழுத்தும், கல்வி அறிவும் அடித்தட்டு மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டதை பல்வேறு சமுதாயங்களிலும் பார்க்க முடிகிறது. நிலப்பிரபுக்களுடைய அதிகாரம் சொத்துடைமையின் மீது மட்டுமல்லாமல், படிநிலைச் சமுதாயத்தின் மீதும் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அதிகாரத்தின் மீது புனிதத்தன்மை ஏற்றப்பட்டது. நிலப் பதிவேடுகள், நிலவுடைமையாளர்களும், வட்டிக்காரர்களும் பராமரித்த கணக்கு நோட்டுகள், மதகுருமார்கள் போற்றி முன்னெடுத்த புனித நூல்கள்… Continue reading
-
இயக்கவியல் பொருள்முதல்வாதம் மத்தியகட்சிகல்விபாடக்குறிப்பு (பகுதி -4)
4. வரலாற்று அணுகுமுறை வரலாற்று அணுகுமுறை என்பது உண்மையை சரியாக புரிந்துகொள்வதற்கான தொடக்கப் புள்ளியாகும். இது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செயல்முறை நடைபெறும் காலத்தையும், இடத்தையும் கணக்கில் கொள்வதோடு, “அடிப்படை வரலாற்றுத் தொடர்பை மறக்காமல், ஒவ்வொரு சிக்கலையும் வரலாற்றில் அது எவ்வாறு தோன்றியது என்ற கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்வதுடன், அதன் வளர்ச்சியின் முக்கிய கட்டங்கள் என்ன, அதன் வளர்ச்சிக் நோக்கில் இன்று அது என்னவாக மாறியுள்ளது என்பதையும் ஆய்வு செய்வது” என்ற அவசியத்தையும் உள்ளடக்கியது. (லெனின்) தோற்றம்,… Continue reading
-
இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள சமூக நீதி அம்சங்கள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா முன்பின் முரணற்ற இடதுசாரி நிலைப்பாடு பெரியார் ஒரு மிகச்சிறந்த சமூக செயல்பாட்டாளர். இந்திய சமூகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்தவர். பெரியார் மகத்தான பணிகளை நம்மிடையே செய்திருக்கிறார். சாதி ஒடுக்குமுறையைக் கடுமையாகச் சாடினார். சாதி ஒடுக்குமுறை, சமத்துவம், பாலின சமத்துவம் பற்றி அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தில் பெரியாருக்கு நிகர் பெரியார் தான். மிகச்சிறந்த அறிஞர்கள், சமத்துவத்திற்காக போராடியவர்கள் என்கிற பட்டியலில் பெரியார், அம்பேத்கர், போன்றோர் முக்கியமானவர்கள். அதேநேரம்,… Continue reading
-
டீப்சீக்கும் – பங்குச் சந்தையும்
பிரசன்ன வெங்கடேஷ் முதலாளித்துவத்தில் தொழில்நுட்பம் “உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது.” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். சந்தையைக் கைப்பற்ற தங்களுக்குள் நிலவும் போட்டியில் முதலாளிகளும் அவர்களது நிறுவனங்களும் உற்பத்தி கருவிகளின் திறனை மேம்படுத்துவதில் எப்போதும் அதீத கவனம் செலுத்திக் கொண்டே இருப்பர். ஒவ்வொரு நிறுவனமும் முதலீடு மற்றும் லாபத்தின் ஒரு பகுதியை இதற்கென ஒதுக்கி… Continue reading
-
நகல் அரசியல் தீர்மானம் – ஓர் அறிமுகம்
உ.வாசுகி கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த முக்கிய சர்வதேசிய, தேசிய நிகழ்ச்சிப் போக்குகள் சுருக்கமாக குறிப்பிடப்பட்டு, அதன் பின்னணியில் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் நடைமுறை உத்தி என்னவாக இருக்க வேண்டும் என விளக்குகிற ஆவணமே அரசியல் தீர்மானம். சர்வ தேசிய சூழல்: சர்வதேசப் பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய நடவடிக்கைகள், உலகப் பொருளாதாரத்தின் மந்த நிலை, அதன் விளைவாக உருவாகும் சமத்துவமின்மை, வறுமை, வேலையின்மை, பசி, ஊட்டச்சத்து குறைவு போன்ற அம்சங்கள், இந்த பாதிப்பை எதிர்த்து… Continue reading
-
மூன்றாம் முறையாய் மோடி
பிரகாஷ் காரத் 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம் நாட்டின் முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிக பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் தேர்தலாக 18வது மக்களவை தேர்தல் எதிர்க்கட்சிகளாலும், அரசியல் விமர்சகர்கள் பலராலும் பார்க்கப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டு கால பாஜக அரசாங்கத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வாகக் கருதப்பட்டது. இதன் விளைவு, இந்தியா முழு வீச்சிலான இந்துத்துவ சர்வாதிகார நாடாக மாறப்போகிறதா, அல்லது, அரசின் கட்டமைப்பில் ஒரு சில சர்வாதிகார எச்சங்களைக்… Continue reading
-
இந்தியாவில் முதலாளித்துவ நெருக்கடியும், மாறியுள்ள சுரண்டல் முறைகளும்
அபிநவ் சூர்யா 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வின் அறுதி பெரும்பான்மை கனவுகள் பாழானதற்கு முக்கிய காரணம், ஊரக பகுதி மக்கள் மத்தியிலான கடும் கோபம் தான். கொரோனா நெருக்கடிக்குப் பின் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திவிட்டோம் என மார் தட்டிக் கொண்டிருந்த மோடி அரசாங்கத்திற்கு மக்கள் தங்கள் வாழ்வின் உண்மை நிலையை உணர்த்தினர். எனினும், கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சிக்கு வந்த பின்பும், இன்றும் இந்த மக்கள் விரோத கொள்கைகளை தொடர்கிறது மோடி அரசு – அதற்கு… Continue reading
