July 2017
-
பண்பாட்டுத் தளத்தில் களமாட…

ஜனநாயக போராட்டத்தின் கட்டாய பங்காக இம்முறையிலான போராட்டங்கள் இருந்தாலும் தற்போதுள்ள சூழலில் உள்ளூர் சமூகங்களோடு, மக்களோடு ஆழமான உறவுகளை உருவாக்கும் வகையில் போராட்ட முறைகள் குறித்து தீவிரமான மறுபரிசீலனை செய்ய வேண்டும். மறுப்பு, எதிர்ப்பு மட்டும்போதுமானதல்ல. ஒரு எதிர்க்கலாச்சாரத்தை உருவாக்குவதுதான் இன்றைய தேவை. Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 7

இது போன்ற அரசின் நடவடிக்கைகள் இருவேறு இந்தியாவிற்கிடையே தீவிரமான இடைவெளியை அதிகப்படுத்துகிறது. ஏழை இந்தியா மேலும் ஏழையாகவும், பணக்கார இந்தியா மேலும், மேலும் வசதி வாய்ப்புகளை பெற்று வளர்ச்சியுறவும் வழிவகை செய்கிறது. மேற்கண்ட தகவல்களோடு கட்சி திட்டத்தின் அத்தியாயம் மூன்றில் உள்ள பத்திகள் 3.11 முதல் 3.14 வரையிலான அம்சங்களின் தற்கால பொருத் தப்பாடு சற்று புரிபடும். தாராளமயமாக்கலின் விளைவாக இந்திய சமூகத்தில் வளர்ந்துள்ள சமமின்மையை மேற்கண்ட புள்ளிவிபரங்கள் எடுத்துரைக்கும். Continue reading
-
‘ட்ரம்ப் திட்டம்’ என்ற ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டால், அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இப்போது ட்ரம்ப் வெளிப்படுத்தும் பழமைவாதம் என்பது அமெரிக்காவை மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தும்படியான அமெரிக்காவின் பழைய பழமைவாதத்தைப் போன்றது அல்ல. Continue reading
-
செவ்வியல் நூல்: மார்க்சியமும், தேசிய இனப் பிரச்சனையும் …

பாட்டாளிவர்க்கம் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பதும் கூட ஏட்டில் உள்ள உரிமை அல்ல. பிரத்யேக நிலைமைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைப் படுத்த வேண்டும். எனவே, அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏற்ப சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பாட்டாளி கள் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பது வர்க்க நலன் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படு கிறது. எனவே, முதலாளித்துவ முழக்கங்களை அப்படியே ஏற்காது. Continue reading
-
மோடி ஆட்சியின் மூன்றாண்டு: பொருளாதாரத் துறையில் சீரழிவு …

பாஜக ஆட்சி இந்திய மற்றும் அந்நிய பெருமுதலாளிகளுக்கும் கிராமப் புற பெரும் செல்வந்தர்களுக்கும்தான் சாதகமாக இருந்துள்ளது. வரிச்சலுகை மட்டுமல்ல. உழைப் பாளர் பாதுகாப்பு சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வது, பெரும் தொழில் நிறுவனங்களின் கடன் பாக்கிகளை விட்டுக்கொடுக்குமாறு பொதுத் துறை வங்கிகளை நிர்ப்பந்திப்பது; பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தி, அவற்றை அடிமாட்டு விலையில் இந்நாட்டு, பன்னாட்டு தனியார் பெருமுதலாளிகளிடம் விற்பது ஆகிய வையும் அரசின் பெருமுதலாளி ஆதரவு கொள் கைகளின் பகுதியாகும். Continue reading
-
மோடி ஆட்சியின் மூன்றாண்டு: அரசியல் துறையில் எதேச்சாதிகாரம் …

மார்க்சிஸ்ட் கட்சி செய்த மதிப்பீட்டை உண்மையாக்கும் நிகழ்வுகளே மோடி அரசின் 3 ஆண்டு கால ஆட்சியில் நடந்து கொண்டிருக் கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்தை பலப்படுத்தும் பொருளாதார நடவடிக் கைகளும், மதவெறி நிகழ்ச்சி நிரலும்தான் பாஜக ஆட்சியின் அரசியலாக பரிணமித்துள்ளன. உழைக் கும் வர்க்கத்தின் எதிரி, ஆயுதமாக ஏந்தியிருக்கும் இந்த இரண்டு அம்சங்களின் பாதிப்புகளை எதிர்த்த போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்; பலப்படுத்த வேண்டும் Continue reading
-
இந்தித் திணிப்பு எதிர்ப்பும்: தமிழ் ஆட்சிமொழியும் …

1965-க்கு பிறகு இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி ஆன பிறகும் ஆங்கில மும் மத்திய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் சம்மதத்தைப் பெறாமல் இந்த நிலை மாற்றப்படாது. இரண்டாவதாக, மத்திய அரசின் பணிகளைப் பொறுத்தவரையில், இந்தி பேசாத மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். இந்தி பேசாத மக்களுக்கு இது ஒருவித நம்பிக்கையை அளித்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களும் சற்று அடங்கின. Continue reading
-
மோடி ஆட்சியின் மூன்றாண்டுகள்: வகுப்புவாத பிளவு அரசியல்

இது தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் அடிப்படையான செயல் படும் முறையாக இந்தியா முழுவதும் இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் ஆட்சியதிகாரத்தை பயன் படுத்திக் கொண்டு சமூக அமைப்பில், அரசமைப் பில் ஒவ்வொரு துறையிலும் இதைச் செய்வதன் மூலமாக தங்கள் அரசியல் பலத்தை மேம்படுத் திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். Continue reading
-
இந்தியாவில் சாதி முறை : ஒரு மார்க்சிய பார்வை

சாதியையும், சாதி அமைப்புமுறை யினை மார்க்சிய நோக்கில் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையில் அதனை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை வகுத்துக்கொள்ள வேண்டும். Continue reading
