August 2017
-
கார்ல் மார்க்ஸ் 200: தத்துவ வாசிப்பு

அறிவியலின் பல துறைகள் வளர்ச்சி பெற்ற நிலை யில் பிரபஞ்சத்தின் தோற்றம், உலகம், உயிர் தோற்றம் பற்றியெல்லாம் ஏராளமான பல கண்டு பிடிப்புக்கள் வெளிவந்த நிலையில் அறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு தத்துவம் பயணிப்பது பயனற்றதாக அமைந்திடும் Continue reading
-
இந்தி திணிப்பும் தமிழ் ஆட்சி மொழியும் 2

தோழர் என்.சங்கரய்யா அவர்கள் முதலமைச்சர் அவர்கள் 14 மொழிகளும் மத்திய ஆட்சி மொழியாக வேண்டும். அதற்கு அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்ற திருத்தத்தை நாங்கள் ஆமோதிக்கிறோம். அதே போல் முதலமைச்சர் கொண்டு வந்துள்ள திருத் தத்தில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை தமிழில் எழுதுகிறவர்கள் இந்திய தேசிய மொழி களான 14 மொழிகளிலும் எழுதலாம் என சேர்த்துக் கொள்வது ஒரு முன்னேற்றமாக இருக்கும். Continue reading
-
ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

https://ia601501.us.archive.org/22/items/marxist_audio_test/Test.mp3 இந்திய சுதந்திரத்தின் 70 -ம் ஆண்டையொட்டி இரண்டு கட்டுரைகள் இந்த இதழிற்கு சிறப்பு சேர்க்கின்றன. தோழர் என்.சங்கரய்யா அவருக்கே உரிய கம்பீரத்துடன் எதிர்வரும் கடமைகளை நினைவுறுத்துகிறார். விடுதலைப் போராட்ட நினைவுகளையும் பகிர்ந்து கொள்கின்றார். விடுதலைக்குப் பின்னர், பொருளாதாரம், சமூகம் என பல தளங்களில் இந்திய சூழலை விளக்குகிறார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன். விடுதலைக் கால இலட்சியங்கள் நிறைவேற வேண்டுமானால் இந்தியா இடதுசாரி கொள்கைத் தடத்தில் செல்ல வேண்டுமென்ற சிந்தனையை இரண்டு படைப்புக்களுமே… Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8

கட்சி திட்டத்தில் வேளாண் பிரச்சினை விஜூ கிருஷ்ணன் இந்திய மக்களின் முன் உள்ள முதன்மையான தேசிய பிரச்சினை வேளாண் பிரச்சினை தான் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாகக் கூறுகிறது. இப்பிரச்சினையின் தீர்வுக்கு புரட்சிகர மாற்றம் அவசியம். நிலப்பிரபுத்துவத்தை அழித்தொழிப்ப தும் வேளாண் தொழிலாளருக்கு நிலங்களை பிரித்துக்கொடுப்பது உள்ளிட்ட தீவிரமான நிலச் சீர்திருத்தமும் தேவை. லேவாதேவி-வணிகர் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதும், பாலின மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை அழிப்பதும் அவசியம். புரட்சியின் முதல் கட்டத்தில் நாடு விடுதலை பெற்றது.… Continue reading
-
சாதி எதிர்ப்பில் கம்யூனிஸ்டுகள் – பிரகாஷ் காரத்

சாதி ஒடுக்குமுறையில், பாலின நோக்கிலான அம்சமும் இணைந்தே இருக்கிறது. எனவே நாம் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. சாதி அமைப்புமுறையே ஒரு ஆணாதிக்க அமைப்பாகும். சாதிக்குள் அகமண முறையைப் பராமரிப்பதன் மூலமே, ஒரு சாதி தனது படிநிலை அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. Continue reading
-
இந்திய விடுதலையின் 70 ஆண்டுகள்: சிக்கல்களைத் தீர்க்காத முதலாளித்துவம்

மேற்கு வங்கத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்த வரை மதமோதலோ, சாதி மோதலோ இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. மேற்கு வங்கத்தில் மட்டுமே 12 லட்சம் ஏக்கர் உபரி நிலம் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோ கம் செய்யப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதில் நாட்டுக்கே முன்மாதிரி யாக மேற்கு வங்க இடது முன்னணி அரசு திகழ்ந்தது. Continue reading
-
சோசலிசத்திற்காக இளைஞர்கள் போராட வேண்டும்: சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யா

உலகத்தில் தொழிலாளி வர்க்க உழைப்பாளிகளின் தலைமையில் இடது சாரிகள், மத்தியதர வர்க்கத்தினர், சாதாரண மக்கள் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமெனில், சோஷலிசம் தவிர வேறு எந்த சமூக அமைப்பினாலும் முடியாது என்பது உறுதி. Continue reading
