July 16, 2017
-
மோடி ஆட்சியின் மூன்றாண்டு: பொருளாதாரத் துறையில் சீரழிவு …

பாஜக ஆட்சி இந்திய மற்றும் அந்நிய பெருமுதலாளிகளுக்கும் கிராமப் புற பெரும் செல்வந்தர்களுக்கும்தான் சாதகமாக இருந்துள்ளது. வரிச்சலுகை மட்டுமல்ல. உழைப் பாளர் பாதுகாப்பு சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வது, பெரும் தொழில் நிறுவனங்களின் கடன் பாக்கிகளை விட்டுக்கொடுக்குமாறு பொதுத் துறை வங்கிகளை நிர்ப்பந்திப்பது; பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தி, அவற்றை அடிமாட்டு விலையில் இந்நாட்டு, பன்னாட்டு தனியார் பெருமுதலாளிகளிடம் விற்பது ஆகிய வையும் அரசின் பெருமுதலாளி ஆதரவு கொள் கைகளின் பகுதியாகும். Continue reading
-
மோடி ஆட்சியின் மூன்றாண்டு: அரசியல் துறையில் எதேச்சாதிகாரம் …

மார்க்சிஸ்ட் கட்சி செய்த மதிப்பீட்டை உண்மையாக்கும் நிகழ்வுகளே மோடி அரசின் 3 ஆண்டு கால ஆட்சியில் நடந்து கொண்டிருக் கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்தை பலப்படுத்தும் பொருளாதார நடவடிக் கைகளும், மதவெறி நிகழ்ச்சி நிரலும்தான் பாஜக ஆட்சியின் அரசியலாக பரிணமித்துள்ளன. உழைக் கும் வர்க்கத்தின் எதிரி, ஆயுதமாக ஏந்தியிருக்கும் இந்த இரண்டு அம்சங்களின் பாதிப்புகளை எதிர்த்த போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்; பலப்படுத்த வேண்டும் Continue reading
-
இந்தித் திணிப்பு எதிர்ப்பும்: தமிழ் ஆட்சிமொழியும் …

1965-க்கு பிறகு இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி ஆன பிறகும் ஆங்கில மும் மத்திய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் சம்மதத்தைப் பெறாமல் இந்த நிலை மாற்றப்படாது. இரண்டாவதாக, மத்திய அரசின் பணிகளைப் பொறுத்தவரையில், இந்தி பேசாத மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். இந்தி பேசாத மக்களுக்கு இது ஒருவித நம்பிக்கையை அளித்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களும் சற்று அடங்கின. Continue reading
