நவீன தாராளமயத்தின் நெருக்கடி: அரசியல் சமூக விளைவுகள்

எங்கெல்லாம் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கு எதிராக உறுதியான நிலை எடுக்க முடிந்ததோ, உழைப்பாளி மக்களின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளவில்லையோ அங்கெல்லாம் அவர்கள் மக்களின் அதிருப்தியை திரட்ட முடிந்துள்ளது. முன்னேறவும் முடிந்துள்ளது.

மதவாதத்திற்கு எதிராக மக்கள் திரட்டல்:

தலித், ஆதிவாசிகள், பெண்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகிற கார்ப்பரேட் மூலதன அதிகாரம் கொடி கட்டிப் பறக்கிற நவீன சமூக கொடூரம் அது. எனவே சரியான உத்தியோடு செயல்படுவது அவசரக் கடமை.

வகுப்புவாத அரசியல்!

இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறிப் பிரச்சாரம் செய்து, மதக்கலவரத்தை உருவாக்கி மக்களை மதரீதியில் பிளவுபடுத்தி இந்துக்கள் மத்தியில் இந்துத்துவா பிரச்சாரத்தை கொண்டு செல்லும் ஆர்எஸ்எஸ்-ன் அடிப்படையான திட்டத்தை இன்று நாட்டின் பல பகுதிகளில் ஆர்எஸ்எஸ் நிறைவேற்றி வருகிறது. நமது கட்சி திட்டம் குறிப்பிடுவது போல் வகுப்புவாத நடைமுறை இங்கு பாசிசத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியே செயல்படுத்தப்படுகிறது