June 2025
-
நவீன கிராமங்களும், நீடித்த வளர்ச்சியும் சாத்தியமா? சோசலிச படிப்பினைகள் காட்டுவது!
இரா. சிந்தன் (இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மந்த்லி ரிவியூ இதழில் சீன இடதுசாரி சிந்தனையாளர் லு ஜின்வு எழுதிய ‘சீன பாணி நவீனமாதல்: புரட்சியும், பாட்டாளி-விவசாயி கூட்டணியும் ‘ என்ற கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை) அனைத்து மக்களுக்கும் மேம்பட்ட வாழ்வை உறுதி செய்வது சோசலிச கட்டமைப்புதான் என்ற போதிலும், பின் தங்கிய ஒரு நாட்டில் உற்பத்தி சக்திகளை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்ற கேள்வி முக்கியமாக எழுகிறது. பின் தங்கிய நாடுகளிலேயே சோசலிச புரட்சிகள் வெற்றியடைந்துள்ள நிலையில்,… Continue reading
-
இந்திய மார்க்சிய ஆய்வின் முன்னோடி டி.டி. கோசாம்பி
அன்வர் உசேன் டி.டி.கோசாம்பி என அழைக்கப்படும் தாமோதர் தர்மானந்த் கோசாம்பியின் நினைவு தினம் ஜூன் மாதம் 29 ஆகும். 1907ஆம் ஆண்டு ஜூலை 31இல் பிறந்த அவர் 1966ஆம் ஆண்டு 60 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே இறந்தார். இந்திய வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து முன்வைத்ததில் அவர் முன்னோடி எனில் மிகை அல்ல. இந்திய வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் கற்பதற்கு கோசாம்பியின் எழுத்துகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார்.… Continue reading
-
செயற்கை நுண்ணறிவு மற்றும் வேலை உலகம்
சுதீப் தத்தா (சிஐடியுவின் அகில இந்திய பொதுக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் சுருக்கமான வடிவம்) செயற்கை நுண்ணறிவு (AI) வேலை உலகத்தை ஆழமாக மறுவடிவமைத்து வருகிறது. இது எதிர்காலம் பற்றிய கருத்து மட்டுமல்ல; AI ஏற்கனவே நமது அன்றாடப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்பப் போட்டியில் காணப்படுவது போல, குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. சிஐடியு போன்ற தொழிலாளர் அமைப்புகளுக்கு, வேகமாக வளர்ந்து வரும் இந்தத்… Continue reading
-
வியத்நாம்: வெற்றிகரமாகத் தொடரும் சோசலிச பயணம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1975 மே தினத்தை உலகெங்கும் ஜனநாயக சக்திகள் இரட்டிப்பு உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். ஏன் என்றால் அப்பொழுதுதான் வீர வியத்நாம் ஆகப் பெரிய ஏகாதிபத்திய அமெரிக்க வல்லரசை தோற்கடித்தது. அதன் துருப்புக்களை தனது மண்ணிலிருந்து ஓட ஓட விரட்டியது. 1954 இல் இருந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது அனைத்து பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்தியும், அமெரிக்காவால் வியத்நாம் மக்களின் தேச விடுதலைக்கான போராட்டத்தை தோற்கடிக்க இயலவில்லை என்பது… Continue reading
-
இன்றைய நிலைமைகளும் நமது கடமைகளும்
பிரகாஷ் காரத் (இன்றைய அரசியல் நிலைமை குறித்து தோழர் பிரகாஷ் காரத் முன்பாக வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்) ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் எவ்வாறு உருவெடுத்துள்ளன? முதலாவதாக, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் மாறிய இயல்பைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் சில நேரங்களில் மோதல்களுக்கு வழிவகுத்தன. இதன்விளைவாக, அவற்றுக்கிடையே போர்களும் உருவாயின. உதாரணமாக, 1914முதல் 1919 வரை நடைபெற்ற முதலாம் உலகப் பெரும்போர்… Continue reading
-
‘புயற்பறவை’யாய் எழுந்த ஓர் எழுத்தாளர்!
ஜூன் 18: மாக்சிம் கார்க்கி நினைவு தினம் வீ. பா. கணேசன் ஜார் ஆட்சியின் கீழ் சிதலமடைந்து கொண்டிருந்த சமூகத்தைச் சித்தரிப்பதில், ஒப்பீட்டளவில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்களாக இருந்த ரஷ்ய எழுத்தாளர்கள் அலெக்சாண்டர் புஷ்கின், லெவ் டால்ஸ்டாய், பியோடர் தாஸ்தயேவ்ஸ்கி, ஆண்டன் செகாவ், துர்கனேவ் போன்ற பலரும் தங்களுக்கேயுரிய வகையில் தனித்துவம் பெற்றிருந்தனர். இதற்கு மாறாக, சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து, வளரும் சிறுவயதிலேயே உழைப்பை மட்டுமே நம்பி வாழ வேண்டிய நிலைக்கு ஆட்பட்ட மாக்சிம்… Continue reading
-
ட்ரம்ப் வர்த்தக வரிகள் – ஏகாதிபத்திய சுரண்டலின் புதிய வடிவம்
அபிநவ் சூர்யா அமெரிக்காவின் வர்த்தக வரி இன்று உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரும் பொருளாதாரமான அமெரிக்காவை “மீண்டும் பெருமைமிக்கதாக” ஆக்கப்போகிறேன் என்று முழங்கி, ட்ரம்ப் இந்த வரிகளை விதித்து வருகிறார். அவரின் முக்கியமான வாதமானது, இந்த இறக்குமதி வரிகள் காரணமாக அமெரிக்கர்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தியாகும் பண்டங்களை வாங்குவார்கள்; அதனால் மீண்டும் அமெரிக்காவின் உற்பத்திதுறை ஜாம்பவான் ஆகும் என்பதுதான். மேலும் இந்த இறக்குமதி வரிகளை இதர நாடுகள் செலுத்துவார்கள் என்றும், அது அமெரிக்காவிற்கு வருமானமாக அமையும்… Continue reading
-
சீனாவில் மார்க்சிய சூழலியல்: மார்க்சின் சூழலியலிலிருந்து சோசலிச சுற்றுச்சூழல் நாகரிகக் கோட்பாடு
ஆர். எஸ். செண்பகம் சென் யி வென் சீன மக்கள் குடியரசின் பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் மார்க்சியப் பள்ளியில் உதவிப் பேராசிரியராக உள்ளார். அவரது கட்டுரை, சீன மார்க்சிய சூழலில் பல்வேறு ஆராய்ச்சி முன்னுதாரணங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சியின் போக்கைப் பற்றி விவாதிக்கிறது. அதேநேரத்தில், சீனாவில் மார்க்சிய சூழலியல் எதிர்கொள்ளும் சாதனைகள் மற்றும் சவால்களையும் எடுத்துக்காட்டுகிறது. உலகை அழுத்திக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினையை இடதுசாரிகள் மார்ச்சிய சூழலியல் பகுப்பாய்வினை அடித்தளமாகக் கொண்டு அணுகுகிறார்கள். சீன கல்விச்… Continue reading
-
கூட்டாட்சியை நோக்கி வலுக்கும் குரல்கள்
வீ. பா. கணேசன் கூட்டாட்சி என்ற கருத்தாக்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த ஏப்ரல் மாதமானது மிக முக்கியமான பல முன்னெடுப்புகளை நமக்கு உணர்த்துவதாக அமைந்திருந்தது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவு இந்தியா என்ற ஒரு நாட்டை அறிமுகம் செய்கையில், “பாரத் எனப்படும் நமது இந்திய நாடானது மாநிலங்களின் ஓர் ஒன்றியம் ஆகும்” என்றே குறிப்பிடுகிறது. அதன்படி மாநிலங்களுக்கெனவும் ஒன்றிய அரசுக்கெனவும் பொறுப்புகளின் தனித்தனிப் பட்டியலும், இந்த இரண்டு அமைப்புகளுமே கையாளத்தக்க பொறுப்புகளின் பொதுவான பட்டியலும் அரசியல்… Continue reading
-
மே தினமும் – பொது வேலை நிறுத்தங்களும்
எஸ். கண்ணன் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை, வேலை நாளின் நீட்டிப்பைக் கொண்டு, மனித உழைப்பு சக்தியின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் வேண்டிய இயல்பான, தார்மீக, பௌதீக நிலைமைகளைக் கூட, தொழிலாளர்களுக்கு கிடைக்காதபடி கொள்ளையிட்டு, அச்சக்தியை சீரழிய செய்வதுடன் வற்றிப் போகும்படியும் செய்கிறது. — காரல் மார்க்ஸ் வேலை நாள் குறித்த பகுதியில் எழுதியது. மார்க்ஸ் பிறந்த மே 5ம், ஒரு வேலை நாளில் தங்களின் உழைப்பு நேரத்தை 8 மணி நேரமாக வரையறை செய்ய வேண்டுமெனவும் நாளின்… Continue reading
