May 2024
-
அமெரிக்காவிற்கு அடிபணியும் மோடி அரசின் அயல்துறைக் கொள்கை
ஜி. ராமகிருஷ்ணன் கடந்த 29.02.2024 அன்று அதிகாலையில் காசா நகரத்தில் வீடுகளை இழந்த, வருவாயை இழந்த பாலஸ்தீன மக்களுக்கு உணவுப் பொட்டலம் ஒரு ட்ரக்கில் வந்திருக்கிறது. பசியால் வாடும் பாலஸ்தீன மக்கள் உணவுப் பொட்டலங்களை வாங்கிட அங்கு செல்கிறார்கள். திடிரென்று இஸ்ரேல் ராணுவத்தினர் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 112 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து காசா – பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலின் தொடர்ச்சிதான் கடந்த 29 ஆம் தேதி நடந்த கோரமான சம்பவம். இத்தகைய சூழலிலும் ஐ.நா.மன்றத்தில் காசா மீது தொடுத்து வரும் தாக்குதலை நிறுத்த வேண்டுமென்று கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தின் மூலம் தடுத்துவிட்டது. இத்தகைய தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் வருகிறபோது இந்திய அரசு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நிலைபாட்டை மேற்கொள்ளவில்லை. மாறாக, அமெரிக்காவின் நிலைபாட்டை ஆதரிக்கக் கூடிய நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது. கூட்டுசேராக் கொள்கையிலிருந்து விலகல் தென்னாப்பிரிக்காவில் கருப்பின மக்கள் நிறவெறிக்கு எதிராக போராடுகிறபோது, பெரும்பான்மையான உலக நாடுகள் கருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. ஐ.நா. மன்றமும் இனவெறிக்கு முடிவுகட்ட வேண்டுமென்று தொடர்ச்சியாக பல தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்திய அரசு தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடும் கருப்பின மக்களுக்கு ஆதரவாக நின்றது. ஐ.நா. மன்றத்திலும் இனவெறிக்கு எதிரான தீர்மானங்களை ஆதரித்தது. 1950களில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்ற வியட்நாம் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் போர் தொடுத்து வியட்நாமின் தென்பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹோ சி மின் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை உலக நாடுகள் ஆதரித்தன. ஐ.நா. மன்றமும் வியட்நாம் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய அரசு வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சமரசமின்றி ஆதரித்தது. கூட்டு சேரா நாடுகளின் அமைப்பில் முக்கிய பங்கு வகித்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தென்னாப்பிரிக்க மக்களின் இனவெறிக்கு எதிரான போராட்டத்தையும், வியட்நாம் மக்களின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தையும் ஆதரிக்கக்கூடிய அயலுறவுக் கொள்கையை கடைப்பிடித்தது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி கடந்த 2014ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து கூட்டுசேரா நாடு கொள்கையிலிருந்து வெகுவாக விலகி, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் வெளியுறவு கொள்கைகளை ஆதரிக்கக் கூடிய அயல்துறை கொள்கையை கடைபிடித்து வருகிறது. “ஒரு அரசாங்கத்தின் அயல்துறை கொள்கையானது இறுதியாக பார்த்தால் அதன் உள்நாட்டு கொள்கையின் வெளிப்பாடே தவிர வேறு எதுவுமல்ல” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி திட்டம் குறிப்பிடுகிறது. ஒன்றிய பாஜக அரசு பெருமுதலாளிகள் மற்றும் நிலச்சுவான்தார்களின் நலன்களை பிரதிபலிப்பதோடு, ஏகாதிபத்திய நாடுகளின் மூலதனத்தின் நலன்களுக்காகவும் செயல்படக்கூடிய அரசாக உள்ளது. பாஜக கட்சி இதர முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளை போல் அல்ல. இக்கட்சியின் தலைமையிலான அரசு பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி செயல்படக்கூடிய அரசு. நாட்டின் தலைநகரம் டெல்லியாக இருந்தாலும், பாஜகவுக்கு வழிகாட்டுதல் நாக்பூரிலிருந்தே (ஆர்எஸ்எஸ் தலைமையகம்) வருகிறது. ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் கம்பெனிகள் – இந்துத்துவா சக்திகளின் கூட்டுக் களவாணி அரசு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்ணயித்துள்ளது. இதன் பொருள் உள்நாட்டு – பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுடைய நலன்களை பாதுகாப்பதோடு, இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்றக் கூடிய பாதையில் வேகவேகமாக சென்று கொண்டிருக்கிறது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை 1991ஆம் ஆண்டிலிருந்து அமலாக்கப்பட்டு வந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள்,… Continue reading
-
முற்போக்கு சமூக மாற்றத்தின் மீது வேட்கை கொண்ட அறிவியலாளர்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பிரபீர் புர்காயஸ்தா ஒரு சிறந்த பொறியாளர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்பால் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவர் மக்கள் அறிவியல் இயக்கத்தின் (People’s Science Movement) அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டாளர். அறிவியல் மனப்பான்மை, இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சுயசார்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான போராட்டத்தில் அவர் முன்னணியில் இருந்து வந்துள்ளார். புர்காயஸ்தா எழுதிய கட்டுரைகளின் ஒரு சிறந்த தொகுப்பை ‘லெஃப்ட்வேர்ட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தகைய சிறந்த அறிவாளி அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக,… Continue reading
-
நாடாளுமன்றம் என்ற களத்தில்..
டி. கே. ரங்கராஜன் (தோழர் டி.கே. ரங்கராஜன் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் குறித்த ‘தொடர் ஓட்டம்’ என்ற நூலில் இருந்து சில பகுதிகள்) நிதித்துறைக்கான குழுவும் பணமதிப்பு நீக்கமும் இந்தக் குழுவில் இருக்கும்போது பணமதிப்பு நீக்கம் பற்றிய பிரச்சனை வந்தது. இது பற்றி விவரங்களை அறிய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர்களாக இருந்த ரகுராம் ராஜன், உர்ஜித் படேல், சக்திகாந்த தாஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் தவிர வங்கியாளர்கள் சங்க (Bankers Association) நிர்வாகிகளையும் அழைத்து விசாரித்தோம். எவரும் இது பற்றி தங்களுக்குத் தெரியும் என்றோ தங்களுடன் விவாதிக்கப்பட்டதாகவோ கூறவில்லை. அமைச்சர்கள் கூட தேநீர் விருந்துக்கு என்று அழைக்கப்பட்டதாகவும் அங்கே தான் பிரதமர் டிவியில் பேசப் போகிறார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தக் குழுவில் உர்ஜித் படேலிடம் கேள்விகள் கேட்டபோது அவரைப் பேசவிடாமல் மன்மோகன் சிங் தடுத்ததோடு, கூட்டத்தையும் முடிக்கச் சொல்லிவிட்டார். குழுவின் தலைவராக இருந்த வீரப்ப மொய்லியும் அப்படியே செய்துவிட்டார். இதுதான் ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்கும் அதிகார வர்க்கப் போக்கு என்பது. பாதுகாப்புத்துறை நாடாளுமன்றக்குழு அனுபவங்கள் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித்துறை 200 வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்திடம்தான் இருந்தது. இதற்கொரு காரணம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவோர் ஆயுதங்களை எடுத்துச் சென்றுவிடக் கூடாது என்பதுதான். பிரிட்டனில் இது தனியாரிடம் இருந்தது என்பதை கவனித்தால் இது புரியும். நாடு விடுதலை அடைந்தபின் பாதுகாப்புத் துறைக்கான தொழிற்சாலைகளில் 80 சதவீதம் அரசாங்கத்திடம்தான் இருந்தது. இப்போது இதில் தனியாரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு நேரடி முதலீடும் வரலாம் என்று மோடி அரசு கூறிவிட்டது. டாடா நுழைந்துவிட்டது, ரிலையன்ஸ் வந்துவிட்டது, மஹிந்திரா புகுந்திருக்கிறது, கல்யாண் குழுமம் நுழைந்திருக்கிறது, எல் அண்ட் டி வந்துவிட்டது – இவர்கள் 100 சதவீதம் முதலீடு செய்யலாம். இப்படிப்பட்ட நடவடிக்கை ஆசியா கண்டத்திலும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஆயுதப் போட்டியை உருவாக்கும். இது அத்துடன் நிற்காது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி வரும்; இந்தியாவுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் போட்டி வரும். பாதுகாப்புத்துறையில் தனியார் மயம் என்பது காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கியது. ஆனால் அதனை ஓரளவு தடுத்து நிறுத்த முடிந்தது. இப்போது ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவான பிஜேபி ஆட்சி முழுபலத்துடன் இருப்பதால் எதையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக செயல்படுத்துகிறது. இதன் பொருள் என்னவென்றால் ஆயுதங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதாகும். அதாவது சமாதான சக வாழ்வு என்ற கோட்பாட்டிலிருந்து இந்தியா வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது என்பது பொருள். ஆயுதங்களின் அதிகப்படியான உற்பத்தி என்பது சந்தையைத் தேடுவதாக – அவற்றுக்கான தளங்களை அமைப்பதாக – மாறிவிடும். இது நாட்டுக்கு நல்லதல்ல என்பதை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் வலியுறுத்தியும் வருகிறோம். ஒழுங்கைக் குலைப்பதும் நியாயம்தான் ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்காக மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் உறுப்பினர் என்ற பெருமை தோழர் அனந்தன் நம்பியாருக்கு உண்டு. நம்பியார் நடந்து கொண்ட விதத்தை எஸ்.ஏ.டாங்கே கண்டித்தார். ஆனால் சுந்தரய்யா வரவேற்றார். ஒரே கட்சிதான் என்றாலும் நாடாளுமன்ற அமைப்பைப் பற்றிய இருவித அணுகுமுறை இருந்துள்ளது.… Continue reading
-
தொழிலாளி விவசாயி ஒற்றுமையின்அவசியம்
உ. வாசுகி தொழிலாளி விவசாயி கூட்டணி குறித்து கட்சி திட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் தொழிலாளி விவசாயி ஒற்றுமைக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. மக்கள் ஜனநாயக புரட்சி, அதற்கான மக்கள் ஜனநாயக முன்னணி என்று கட்சித் திட்டம் பேசும் இடத்தில், மக்கள் ஜனநாயக முன்னணியில் இடம்பெறும் வர்க்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. தொழிலாளி வர்க்கம் தலைமை ஏற்கும் என்று சொல்வதோடு, திட்டத்தின் 7.6 பத்தி, “தொழிலாளி விவசாயி வர்க்கங்களின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானது, அடித்தளமானது. ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்த, இந்த கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில், இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் என்பது, தொழிலாளி… Continue reading
-
மாற்று அரசியலுக்கான மார்க்சிய உரையாடல்
என்.குணசேகரன் மறைந்த அய்ஜாஸ் அகமது அவர்கள் ஒரு தலைசிறந்த மார்க்சிய அறிஞர். இன்றைய காலச் சூழலின் சவால்களை மார்க்சிய நோக்கில் புரிந்து கொள்ளவும், போராட்ட நடைமுறைகளை அமைத்திடவும், தொடர்ந்து வழிகாட்டி வந்த மார்க்சிய ஆசிரியர். 1990ஆம் ஆண்டுகளில் மார்க்சிய ஆய்வாளர்கள் பலர் தடம் மாறி, மார்க்சியத்தின் ஜீவ நாடியான பாட்டாளி வர்க்கப் புரட்சி, சோசலிச இலக்குகளைக் கைவிட்டு மார்க்சியத்தை திரித்து வந்த நிலையில், அய்ஜாஸ் அகமது மகத்தான மார்க்சிய ஆசானாகத் திகழ்ந்தார். புரட்சிகரமான மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து, கருத்துப் போராட்டத்தை அவர் நடத்தி வந்தார். 2022ஆம் ஆண்டு மறைந்த அய்ஜாஸ் அகமது ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். நவீன தாராளமயம் என்ற திருப்பத்தை அடைந்த இன்றைய முதலாளித்துவ இயக்கத்தினை மார்க்சிய வழி நின்று ஆய்வு செய்திடும் எழுத்துக்களாக அவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன. அத்துடன் இன்றைய முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் வளர்ச்சி, புரட்சிகர மாற்றத்தின் திசைவழி குறித்தெல்லாம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆய்வு நெறியில் நின்று படைப்புக்களை அளித்துள்ளார். பேராசிரியர் அய்ஜாஸ் அகமது அவர்களுடன் தோழர் விஜய் பிரசாத் நடத்திய உடையாடல் “மார்க்ஸ் – புரட்சியின் அரசியல்” என்ற தலைப்பில் தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. அரசியல் கையேடு மார்க்சியம் முன்னெடுக்கும் புரட்சிகர அரசியலை ஆழமாக புரிந்து கொள்ள உதவிடும் நூலாக இந்த நூல் அமைந்துள்ளது. இந்த உரையாடலில் இருவரும் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள், மார்க்சின் பங்களிப்பு பற்றிய பல பரிமாணங்களை வெளிக்கொணர்கிறது. மார்க்சின் எழுத்துக்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது மட்டுமல்ல; மார்க்சின் எழுத்துக்களுக்கு அடிப்படையாக இருந்த மார்க்சின் எண்ணவோட்டத்தை ஆழமாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த உரையாடல்கள் அமைந்துள்ளன. தோழர் விஜய் பிரசாத் உலக அளவில் செயல்பட்டு வரும் மார்க்சிய செயல்பாட்டாளர். மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து, போராடும் உழைக்கும் வர்க்க இயக்கங்களின் தத்துவார்த்த புரிதலை மேம்படுத்தும் படைப்புக்களை விஜய் பிரசாத் அளித்து வருகிறார். அய்ஜாஸ் அவர்களின் உயரிய மார்க்சிய சிந்தனைகள் தெளிந்த நீரோட்டமாக வெளிவரும் வகையில் விஜய் பிரசாத் உரையாடலை ஒருங்கிணைக்கிறார். கனமான, தத்துவக் கட்டுரைகளை, கட்டுரை வடிவத்தில் படிக்கும்போது சிலருக்கு ஏற்படும் சோர்வு, இந்த உரையாடல் வடிவ படைப்பில், உரையாடலோடு ஒன்றிப்போகும்போது ஏற்படுவதில்லை. நூலின் முன்னுரையில் விஜய்பிரசாத் குறிப்பிடுவது போன்று, மார்க்ஸ் பொது தளத்தில் பொருளாதார அறிஞராகவே முன்னிறுத்தப்படுகிறார். மார்க்சின் பொருளாதாரம் பற்றிய பங்களிப்பு மகத்தானதுதான் என்பதில் ஐயமில்லை. உண்மையில்,மார்க்ஸ் முதலாளித்துவத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுகிற நிகழ்வைப் பற்றி ஏராளமாக எழுதியுள்ளார். அவரது புரட்சிகர அரசியல் பார்வையை வெளிப்படுத்தும் மார்க்சின் எழுத்துக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. அதிலும் இன்று முதலாளித்துவத்தின் நேரடித் தாக்குதல் உழைக்கும் மக்கள் மீது அதிகரித்துள்ள நிலையில், வலதுசாரி அரசியலை பக்கபலமாக வைத்துக் கொண்டு, முதலாளித்துவ கருத்தியல் ஆயுதபாணியாக மாறியுள்ள நிலையில், புரட்சிகர அரசியல் இன்று… Continue reading
-
இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கம்: வரலாற்று ஆய்வு
பேரா. மாலினிபட்டாச்சார்யா படைப்பாற்றல் மிக்க பொழுதுபோக்கு நடவடிக்கைகள் எனும் குறிப்பிட்ட பொருளில் ‘பண்பாடு’ என்ற சொல்லை இங்கு நாம் பயன்படுத்துகிறோம். இத்தகைய செயல்பாடுகள் தொடர்பான ஒரு ‘இயக்கம்’ பற்றி பேசுவது, அவை தனிமனித உள்ளத்தில் தனிப்பட்ட ஓர் முறையில் உருவான ஒன்றல்ல; அவற்றின் உருவாக்கம் சமூகம் சார்ந்தது, அரசியல் – கருத்தியல் அம்சத்தை உள்ளடக்கியது என்ற பொருளில்தான். பண்பாட்டு அரசியலுக்கு எப்போதும் இடமுண்டு. இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தில் நாம் ஏன் ஆர்வம் செலுத்துகிறோம்? ஏனெனில், கம்யூனிஸ்டுகள் இப்பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள். இதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள். கருத்தியல் போர் இந்திய முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தின் தொடக்க கால அரசியல், சாதியப் படிநிலை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்தும், கல்வியறிவு பெறவும் 19ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற உரிமைகளுக்கான சமூகச் சீர்திருத்த இயக்கங்களில் வேர்கொண்டுள்ளது. ஆதிக்கப் பண்பாட்டுக்கு எதிரான விமர்சன பூர்வமான எதிர்ப்பாக இது விளங்கியது. தொன்மைக்காலம் தொட்டு ஆதிக்கப் பண்பாட்டுக்கு எதிரான மாற்றுக் கருத்தும், பன்முகத்தன்மை கொண்ட பார்வையும் முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால், காலனி ஆதிக்கமும், நவீன மேலைய சிந்தனையுடன் தொடர்புடைய மேட்டுக்குடி வர்க்கங்களில் ஒரு பகுதியினரிடம் உருவான தேசிய அடையாளத்துக்கான தேடலும் 19ஆம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்களுக்கு ஒரு புதிய தன்மையை அளித்தது. அவை வழி வழியாக வரும் விவாதங்களின் பகுதி என்று கூறலாமா? அல்லது ‘சுதேசி நவீனத்துவம்’ என்ற சொல்லாடலில் அழைக்கலாமா? 1930, 40களின் பண்பாட்டு இயக்கம், இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளில் வெகுமக்கள் இயக்கமாக மாறிய விடுதலைப் போராட்டத்துடன் மிக நெருக்கமான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள், விவசாயிகளின் பரந்துபட்ட போராட்டங்கள் வலுப்பெற்று காலனி ஆதிக்க எதிர்ப்பு எழுச்சிக்கு புதிய பரிமாணங்களை கொடுத்தன. ரஷ்யப் புரட்சி, ஐரோப்பாவில் பாசிசத்தின் எழுச்சி, இரண்டு உலகப்போர்கள் போன்ற சர்வதேச நிகழ்வுகளின் தாக்கம் கூடுதலாக இருந்தது. இந்தப் பின்னணியில் சம உரிமை, சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையில் நல்லிணக்கத்தை நிலை நாட்டும் சுதந்திர நவீனக் குடியரசு பற்றிய உண்மையான பார்வை ஏற்கனவே உருப்பெற்றிருந்தது. இப்பார்வை வெறும் கருத்தியல் சார்ந்ததாக மட்டுமல்லாமல், சமூகப் போராட்டங்களிலும், படைப்பாக்கம், விமர்சன இலக்கியம் , இதழியல், நாடகம், பாடல்கள், காட்சிக் கலைகள், பின்னாளில் திரைப்பட ஊடகம் போன்றவை மூலம் பன்மடங்காக வெளிப்பட்ட புதிய போக்குகளில் தெளிவாகத் தெரிந்தது. அதேசமயத்தில் சுதந்திரப் போராட்டத்திற்குள் வர்க்கம் ,சாதி, வகுப்புவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆழமான பிளவுகளும் ஏற்பட்டன. விடுதலையின் நோக்கத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்போம் என பிற்போக்குச் சக்திகள் அச்சுறுத்தின. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும் , சிறிது காலத்துக்குப் பிறகு உருப்பெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பும் இக்காலத்தில் பிறந்து, விடுதலைப் போராட்டத்திலிருந்த இந்த எதிரெதிர் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தின. கம்யூனிஸ்ட்களைப் பொறுத்தவரை,… Continue reading
-
நிதித்துறை – மாநில சுயாட்சி சீர்குலைவு
அபிநவ்சூர்யா தேசிய இனங்களின் உரிமைகளை அங்கீகரித்தும், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலும் கட்டமைக்கப்பட்ட இன்றிய ஒன்றியத்தின் ஸ்திரத்தன்மை அண்மைக் காலங்களில் கடும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. மாநில முதலமைச்சர்களும், பல எதிர்க் கட்சி தலைவர்களும் ஒன்றிய அரசிற்கு எதிராக தில்லி வீதிகளில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக, கேரள அரசின் அமைச்சரவையே நேரடியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கி உள்ளது. இது, மோடி அரசு மாநிலங்களின் சுயாட்சி மீது தொடுத்து வரும் தீவிர தாக்குதல்களுக்கு அத்தாட்சி. எதேச்சாதிகார முறையில் செயல்படும் ஆளுநர்கள் மூலம் பல மாநிலங்களில் அரசாங்க செயல்பாடுகளை சீர்குலைத்து, மாநில அரசாங்கங்கள் கையில் உள்ள சிறிதளவு சட்டம் இயற்றும் உரிமைகளையும் பறிப்பது, புதிய கல்வி கொள்கை இயற்றுதல், மத்தியில் கூட்டுறவு அமைச்சகம் அமைத்து கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வருதல் என்பது போன்ற மாநில பட்டியலில் இருக்கும் துறைகளில் மத்திய அரசு ஊடுருவுதல் என்பது போன்ற நேரடியான தாக்குதல்கள் மூலம் மட்டுமல்லாமல், மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவி விட்டு எதிர்க் கட்சி தலைவர்களை அச்சுறுத்துதல், குதிரை பேரம் மூலம் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தல் போன்ற சட்டவிரோத தாக்குதல்கள் மூலமும் மாநில அரசாங்கங்களை சீர்குலைத்து, கூட்டு ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க. அரசு. இந்த போக்கின் ஒரு பகுதியாக, மாநிலங்களின் நிதி சுயாட்சி (fiscal federalism) அடிப்படைகளை தீவிரமாக அழிக்கும் வேலைகளும் வலுப்பெற்றுள்ளன. நவ தாராளமய காலத்தில், நாட்டை மொத்தமாக கார்ப்பரேட்டுகளுக்கு விற்க ஏதுவாக, நிதி உட்பட அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவிக்கும் நடவடிக்கைகள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று தான் வருகிறது. ஆனால் எல்லாவற்றையும் போலவே, காங்கிரஸ் செய்து வந்த ‘நிதி சுயாட்சி’ அழிப்பையும் அதி தீவிர நிலைக்கு கொண்டு சென்றுள்ளதே பாஜக அரசின் சாதனை. நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது, இன்று ஊடகங்களில் பரவலாக உலா வரும், “கட்டும் வரி ஒவ்வொரு ரூபாய்க்கும் தமிழ்நாட்டிற்கு கிடைப்பது 30 பைசா மட்டுமே, உத்திர பிரதேசத்திற்கு 1.7 ரூபாய் கிடைக்கிறது” என்பது போன்ற குறுகிய நோக்கம் உடைய பார்வை தவறானது என்பது மட்டுமல்லாமல், ஆபத்தானதும் கூட. இது ‘சுயாட்சி’ தத்துவத்தை வெறும் ‘யாருக்கு எவ்வளவு’ என்ற பார்வைக்கு சுருக்குவதோடு மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் உள்ள தாராளமய எதேச்சதிகார போக்குகளை மறைக்கிறது. அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையும் நேர் கோடு கிடையாது. பல வரலாற்று மற்றும் சமகால காரணிகளின் விளைவாக, சில மாநிலங்கள் வேகமாக வளர்ந்ததோடு மட்டுமல்லாமல், அதிக வரி ஈட்டும் திறனும் பெற்றன. இதனால், இந்த மாநிலங்களில் இருந்து ஈட்டப்பட்ட வரியின் ஒரு பகுதி, வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு மடை மாற்றப்பட்டது. இந்த பங்கீட்டு முறை, உண்மையான கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நிகழ்ந்த வரை பிரச்சனை எழவில்லை. ஆனால் மாநில சுயாட்சி அழிக்கப்படும் பொழுதுதான், அந்த கோபம், இது போன்ற தோற்றத்தில் வெளிப்படுகிறது. மாநிலங்களின் நிதி உரிமைகளே அழிக்கப்படுவதுதான் இங்கு பிரதான பிரச்சனை என்பதை நினைவில் கொள்வது அவசியம். இவ்வாறு மத்திய மாநில அரசுகள் இடையே நிலவும் நிதி உட்பட அனைத்து உரிமைகளின் ஏற்றத்தாழ்வை நம் அரசியல் சாசனமும் அங்கீகரித்து உள்ளது. உதாரணமாக, 2021இல், மத்திய-மாநில அரசுகளின் மொத்த வருவாயில் 37 விழுக்காடு மட்டுமே மாநிலங்களால் வசூலிக்கப்பட்டது.… Continue reading
-
நகர்மயமாதல்: கட்சியின் அணுகுமுறை
(நகர்மயமாதல்குறித்தஅகிலஇந்தியபட்டறையில்முன்வைத்துஇறுதிப்படுத்தப்பட்டகுறிப்பு) 2021இல் இந்திய நகர்ப்புற மக்கள் தொகை 49.8 கோடி இருக்கும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. உலக நகர்ப்புற மக்கள் தொகையில் 35.4% ஆகும். 2035இல் 67.5%ஆக உயரும் எனவும் மதிப்பீடு செய்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 52 நகரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். 5 மாநிலங்களில் 40% அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள். 2019இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 63% நகர்ப்புறத்தின் பங்களிப்பாகும். இது 2036க்குள் 75%… Continue reading
-
சாதி அமைப்பை சற்றும் தயையின்றி ஒழிப்பது
நூல் அறிமுகம் கே.சுவாமிநாதன் “சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள்: கள அனுபவங்கள்” – பி. சம்பத் “சாதி ஒடுக்குமுறை மற்றும் சாதிய பாகுபாடு பிரச்சினை நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பு முறைமைக்குள் அதன் வேர்கள் ஆழமாகப் புதைந்தும் உள்ளன. முதலாளித்துவ வளர்ச்சியை உள்ளடக்கிய சமூக அமைப்பு, ஏற்கனவே உள்ள சாதிய அமைப்புடன் சமரசம் செய்து கொண்டுள்ளது. இந்திய முதலாளித்துவமே சாதிய பாரபட்சங்களை வளர்க்கிறது. உழைப்பாளி வர்க்கங்களின் அங்கமாக மிகப் பெரும்பான்மை தலித்… Continue reading
-
கீழ் காவிரி டெல்டா பகுதியில் வரலாற்று மாற்றங்களும், இன்றைய நிலையும்
வி.கே.ராமச்சந்திரன் (இது கீழ் காவிரி டெல்டா பகுதியில் பொருளாதார மாற்றங்கள் குறித்த ஆய்வு. இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்பட்ட சமூக-பொருளாதார கணக்கெடுப்புகளை தழுவி எழுதப்பட்டது.) கீழ்வேளூர் தாலுக்காவில் உள்ள பாலக்குறிச்சி என்ற கிராமமானது, முதலில் 1917இல் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பை நடத்தியவர் கே. சுந்தர ராஜலூ. இதை வழி நடத்தியது மதராஸ் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியரான கில்பர்ட் ஸ்லேட்டர் என்பவர். இந்த பிரபல ஆய்வு “ஸ்லேட்டர் ஆய்வுகள்” என அறியப்படுகிறது. இந்த… Continue reading
