March 2024
-
லெனின் நினைவு நூற்றாண்டு : லெனினது வரலாற்றுப் பரிசோதனை
என். குணசேகரன் கடந்த நூறு ஆண்டுகளில் லெனின் பற்றி அடுக்கடுக்காக பல நூல்கள் இடைவிடாமல் வெளிவந்துள்ளன. அவற்றில் பல நூல்கள் லெனினின் சிந்தனைகள் மீது தாக்குதல் தொடுத்து எழுதப்பட்டவை. அவரை அவதூறு செய்தும், அவரது புரட்சிகர செயல்பாடுகளை இழித்தும், பழித்தும் எழுதப்பட்ட பல நூல்களும் வெளிவந்துள்ளன. அவரைப் பற்றிய நூல்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ஒரு உண்மை மறைக்க முடியாதது. உலக சிந்தனைப் பரப்பில் லெனினது தாக்கம் நீடித்துக் கொண்டே இருக்கிறது என்பதே அந்த உண்மை. அவரைப் பற்றிய… Continue reading
-
முட்டுச் சந்தில் நிற்கும் நவ தாராளவாதம்!! புறந்தள்ளுமா தெற்குலக நாடுகள்??
ஆர். எஸ். செண்பகம் திவாலுக்கு வந்த நவீன தாராளவாதக் கொள்கைகள் பொருளாதார வளர்ச்சியும், அனைத்து மக்களின் முன்னேற்றமும் வேண்டுமெனில், நவீன தாராளவாதக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னது இன்று பொய்யாகியுள்ளது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதன் காரணமாக, பெருந்துன்பங்களுக்கு மக்கள் ஆளாவது மட்டுமின்றி, உலக அளவில் பொருளாதார நெருக்கடி நீடித்து நிலைத்து நிற்கிறது. தெற்குலக நாடுகள் உலகளாவிய கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. வருமான ஏற்றத்தாழ்வுகள், பொருளாதாரச் சுரண்டல்கள், செல்வாதார ஏற்றத்தாழ்வுகள் என ஏராளமான… Continue reading
-
மோடி ஆட்சி: நிழல் தரா வாய்ப் பந்தல்
தாமஸ் ஐசக்தமிழில்: க.சுவாமிநாதன் மோடி ஆட்சியின் 10 ஆண்டுகள் பற்றி பா.ஜ.க செய்யும் பிரச்சாரமும், நமது பதில்களும் இங்கு தரப்பட்டுள்ளது. பிரச்சாரம் – 1 2029இல் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக வளர உள்ளது. இதோ “மொத்த உள்நாட்டு உற்பத்தி” (GDP – Gross Domestic Product) வளர்ச்சியில் இந்தியாவின் ரேங்க் 2014 – 102015 – 72019 – 62022 – 5 (பிரிட்டனை முந்தி)2027 – 4 (ஜெர்மனியை விஞ்சும்)2029 – 3… Continue reading
-
ஆர். எஸ். எஸ். – பாஜக ஆட்சி எனும் பெரும் துயரம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா 2014ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடியும் இதர பாஜக தலைவர்களும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்ற வகையில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினர். போடப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகளில் 31 சதமான வாக்குகளை (மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 25%) ஆதரவும் பெற்று 16ஆம் மக்களவையில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்றது. அனைத்து கருப்பு சொத்துக்களையும் கண்டுபிடித்துக் கைப்பற்றி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒவ்வொரு வங்கி… Continue reading
-
மோடியின் பத்தாண்டு ஆட்சியில் பெண்களின் நிலை
பேரா. ஆர். சந்திரா மானுட விடுதலை என்பது பெண்களின் விடுதலையுடன் இணைந்தது. சமுதாயத்தின் ஒரு பாதியாக இருக்கும் பெண்கள் ஒடுக்கப்படும் வரை, மானுட விடுதலை சாத்தியம் இல்லை என்பதை மார்க்சும், ஏங்கல்சும், லெனினும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஒரு சமுதாயம் முன்னேறுவதை கணிப்பதற்கு அங்கே வாழும் பெண்களின் அந்தஸ்தை ஓரு சிறந்த அளவுகோலாக கருத வேண்டும். விடுதலை போராட்டமும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் சுதந்திர இந்தியாவில் மக்கள் இயக்கங்களும் இந்தியாவில் பெண்கள் நிலையில் முன்னேற்றத்தை முன்னெடுத்துள்ளன. பெண்கள்… Continue reading
-
COP28 – படிம எரிபொருள் பயன்பாடுகளும், சவால்களும்
பேரா. டி. ஜெயராமன் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை COP28 மாநாடு துபாயில் நடைபெற்றது. இது உலக வெப்பமயமாதலில் இருந்து வரும் ஆபத்துக்களை எப்படி சந்திப்பது என்பது குறித்து அனைத்து நாடுகளும் இணைந்து நடத்திய மாநாடு. உலக வெப்பமயமாதலை தடுக்க 1992ஆம் ஆண்டு 192 க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து செய்துகொண்ட ஒரு ஒப்பந்தம்தான், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு என்றறியப்படுகிறது. (United Nations Framework… Continue reading
-
லெனின்: வர்க்கப் போராட்ட நடைமுறை உத்திகளின் வித்தகன்
எம். பசவபுன்னையா 1970ஆம் ஆண்டு தோழர் லெனினுடைய பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, தோழர் எம். பசவபுன்னையா லெனின் குறித்து எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமான சூழ்நிலை குறித்த திட்டவட்டமான ஆய்வு என்ற அடிப்படையில் லெனின் உருவாக்கிய நடைமுறை உத்திகள் குறித்து, தோழர் பசவபுன்னையா மிக ஆழமாக எழுதியிருந்தார். அதிலிருந்து சில பகுதிகள்… மார்க்சிய அறிவுக் கருவூலத்திற்கும், உலகப் பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சிக்கும் அவர் அளித்திருக்கும் பங்கினை நினைவு கூறும் வகையில், அவரது… Continue reading
-
இந்திய சமுதாயத்தில் எம்.எஸ். சுவாமிநாதனின் தாக்கங்கள்
பேரா. வி. முருகன் அறிவியலுக்கு அகப் பரிமாணம் (internal dimension) மற்றும் புறப்பரிமாணம் (external dimension) என்று இரண்டு பரிமாணங்கள் உள்ளன. இங்கு அகப்பரிமாணம் என்பது, கோதுமை மற்றும் அரிசி போன்ற பயிர்களை அதிகமாக உற்பத்தி செய்வதற்கு அவர் கையாண்ட அறிவியல் யுக்திகளைப் பற்றிய விஷயங்களாகும். அறிவியலின் புறப்பரிமாணம் என்பது பொருளாதாரத்தோடும் சமுதாயத்தோடும் தொடர்புள்ளவை. பெர்னாலின் மொழியில் இதை அறிவியலின் சமூகப்பணி என்று கூறலாம். இது அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ளத் தொடர்பைப் பற்றியது. அகப்பரிமாணமும் புறப்பரிமாணமும் ஒன்றோடு… Continue reading
-
தமிழக தத்துவத்தின் தோற்றமும், மரபும் !
-மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் (தமிழக தத்துவ வரலாற்றை அறிவதற்கு மிகச்சிறந்த ஆய்வு முறையாக மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல்வாதமே பயன்படுகிறது. ஆனால், தமிழகத்தில் உலா வரும் பல தத்துவ வரலாறுகள் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான செயல்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் படைப்புகளாக இருப்பதில்லை.உறுதியான மார்க்சிய அடித்தளத்தில் நின்று, தமிழக வரலாறு, தத்துவம், சமூகம், பண்பாடு ஆகிய அனைத்து துறைகளிலும் ஆழமாக ஆய்வு செய்தவர் மறைந்த மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் .அவருடைய முக்கிய கட்டுரை ஒன்று இங்கே பிரசரிக்கப்படுகிறது.ஏற்கனவே… Continue reading
-
மாற்றப்படும் குடியரசின் குணாம்சம்
உ. வாசுகி ஒன்றிய பாஜக அரசின் இரண்டாவது பதவிக்காலம் நிறைவடைந்து, இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை நாடும், நாட்டு மக்களும் சந்திக்க உள்ளனர். பத்தாண்டு காலமும் கார்ப்பரேட் மதவெறி கூட்டணி அரசாகத்தான் இது செயல்பட்டு வந்துள்ளது. பாஜகவை ஒரு சராசரி முதலாளித்துவ கட்சி எனப் பார்க்க இயலாது. அது பாசிச பாணி ஆர்.எஸ்.எஸ்சின் ஓர் அரசியல் அங்கம். ஆர் எஸ் எஸ்.சின் நிகழ்ச்சி நிரலை அரசியல் தளத்தில் அமலாக்கம் செய்வதுதான் பாஜகவின் ஆகப் பெரிய கடமை.… Continue reading
