May 2017
-
ஏழைகளைக் கொலைசெய்யும் தேசிய சுகாதார கொள்கை

தொற்று நோய்கள், தொற்று அல்லாத நோய்களின் பாதிப்புகள் இந்திய சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதுபோலவே, சுகாதாரத்தின் மீதான வணிகம் மிகப்பெருமளவில் அதிகரிப்பது இரண்டாவது பிரச்சனையாகும். மூன்றாவது பிரச்சனை, சுகாதாரத் தேவைகளுக்காக மக்கள் செலவளிக்கும் பணமும், அதன் மூலம் மக்கள் வறுமையில் தள்ளப்படுவதுமாகும். Continue reading
-
அரசமைப்புச் சட்டங்களின் வழியே சோவியத் தரிசனம் !

ஒவ்வொரு குடிமகனுக்கும் உழைப்பு உரிமையாக்கப்பட்டது. அதன்படிவேலை வழங்குவதும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை உறுதிசெய்வதும் அரசின் கடமையாகும். ஓய்வெடுத்தலும், புதுப்பித்துக் கொள்வதும் குடிமக்களின் உரிமையாக்கப்பட்டது. 7 மணி நேர வேலை, ஆண்டுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் விடுமுறைக் காலத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசின் கடமையாக ஏற்றது. Continue reading
-
வலதுசாரி தாக்கமும், இந்திய தொழிலாளி வர்க்க கடமைகளும்

சுதந்திரப் போராட்ட காலம் முதற்கொண்டு இந்திய தொழிலாளிவர்க்கமும் உழைப்பாளி மக்களும் ஆற்றியுள்ள பணிகளையும் தியாகங்களையும் முன்னிறுத்தி மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் அவசியத்தை, சமூகத்தில் அடிப்படைமாற்றம் காண்பதின் தேவையை, தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைப்பாளி மக்களிடையே கொண்டு செல்லும் ஸ்தாபன வலிமையை நாம் பெற்றாக வேண்டும். Continue reading
-
நிலவுகின்ற அனைத்தையும் குறித்த ஈவிரக்கமற்ற விமர்சனம் …

பாட்டாளிவர்க்க இயக்கம் மிகப் பெரும்பான்மையினருக்காக மிகப் பெரும்பான்மையினர் நடத்தும் சுயேட்சையான இயக்கம். தற்கால சமுதாயத்தின் மிக அடிமட்ட அடுக்கான பாட்டாளிவர்க்கம், அதிகாரப்பூர்வமான சமுதாயத்தை உருவாக்கும் அடுக்குகளின் மேல்கட்டுமானம் முழுவதையும் தகர்த்தெறியாமல் தன்னை எழுந்து நிற்கச் செய்யவோ, நிமிர்ந்து நிற்கச் செய்யவோ முடியாது. Continue reading
-
காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸ்

2007ஆம் ஆண்டின் இறுதி கால்பகுதியில் தோன்றி இன்றுவரை தொடரும் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தீவிர மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை, முதலாளித்துவ உலகமயத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பு பேரலைகள் இவையெல்லாம் மார்க்சின் அவசியத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து, இன்னொரு சமயத்தில் மார்க்ஸ் கூறியதுபோல், முதலாளித்துவ அறிவுஜீவிகளின் மண்டைகளில் பேரொலியுடன் ஏறிக்கொண்டிருக்கிறது! Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 5

மக்கள்ஜனநாயக புரட்சி நிலப்பிரபுத்துவம், அந்நிய ஏகபோக முதாளித்துவத்தை சமரசமின்றி எதிர்ப்பதோடு மட்டுமின்றி, அதனுடன் சேர்ந்து அந்நிய நிதி மூலதனத்துடன் சமரசம் செய்து ஒத்துழைக்கும் நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டு வைத்திருக்கும் அரசுக்கு தலைமை தாங்கும் பெரு முதலாளித்துவத்தையும் எதிர்க்கிறது Continue reading
-
வரலாற்றைத் திரித்து வழங்குதல்!

பாபரை வரவேற்று முடிசூட்டிய ராணா சங்காவாக இருக்கட்டும்; ராணா பிரதாப்பாக இருக்கட்டும்; சிவாஜியாக இருக்கட்டும்;அவர்கள் முகலாயர்கள் வெளிநாட்டினர் என்பதற்காகவோ, முஸ்லீம்கள் என்பதற்காகவோ எதிர்த்துப் போரிடவில்லை. மாறாக ஏகாதிபத்திய மேலாதிக்கம் என்பதற்காகவே எதிர்த்துப் போரிட்டனர்; அல்லது ஒரு அரசருக்கெதிராக இன்னொருவர் போரிட்டனர். Continue reading
-
நவீன தாராளமயமும் தொழிற்சங்கமும்

டாக்டர் ஹேமலதா, தலைவர், இந்திய தொழிற்சங்க மையம் 1970களில் உருவான பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவ அமைப்பு மேற்கொண்ட எதிர்வினை நவீன தாராளமயமாகும். அமெரிக்காவும் பிரிட்டனும் 1980–களில் நவீன தாராளமயத்தை அமல்படுத்தும் வண்ணம் பொருளாதார மறுகட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்த துவங்கின. இந்தத் திட்டங்கள், பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வங்கி போன்ற அமைப்புகளின் உதவியுடன் உலகம் முழுவதும் திணிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டுகளில் நுழையும்பொழுது உலகில் பெரும்பாலான நாடுகள் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தங்கள் திட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் துவங்கின.… Continue reading
-
மேற்குவங்கத்தில் பிரம்மாண்டவாசிப்புஇயக்கமும், அனுபவமும்

(மேற்குவங்கத்தில் நடைபெற்ற கட்சித் திட்டத்தின் மீதான வாசகர் வட்ட இயக்கத்தின் சிறப்பம்சங்களை விளக்குகிறது இந்தக் கட்டுரை) சிரிதிப்பட்டாச்சார்யா மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அதன் அரசாங்கமும் கட்டவிழ்த்துட்டுள்ள பாசிச அடக்குமுறைக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஜனநாயக மீட்புக்கான போராட்டத்தின் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழு தனது கட்சிஅணிகளுக்கு கட்சி அரசியல்கல்வியை தீவிரமாகப் பயிற்றுவிப்பதென முடிவு செய்தது. புரம்மோத் தாஸ்குப்தா கல்விமையத்தில் நிரந்தர கட்சிப் பள்ளி மாநிலஅளவில் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதில் தொடர்ச்சியாக மாநிலஅளவிலான வகுப்புகள்… Continue reading
-
மே (2017) மாத மார்க்சிஸ்ட் இதழில் …

கார்ல் மார்க்ஸின் 200-வது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் சூழலில், மே மாத மார்க்சிஸ்ட் இதழ் வெளிவருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பல மக்கள் இயக்கங்களும் ஆண்டு முழுவதும் இந்த கொண்டாட்ட நிகழ்வுகளை பல வடிவங்களில் மேற்கொள்ள உள்ளனர். Continue reading
