April 2017
-
ஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

ஏப்ரல் மாதத்தில் மார்க்சிஸ்ட் சார்பாக தமிழகப் பொருளாதாரம், பண்பாடு-மக்கள் எழுச்சி, இந்துத்துவ அச்சுறுத்தல் – இடது மாற்று என்ற முக்கியத் தலைப்புக்களில் சேலம், தஞ்சை, காஞ்சிபுரம் (சிங்கபெருமாள் கோயில்) திருநெல்வேலி ஆகிய இடங்களில் மண்டல கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. Continue reading
-
முகிலினியில் கலந்த முதலாளித்துவம் …

நேற்றுவரை இது வேறொருவருடைய போராட்டம், இன்று இது இவர்களுடைய போராட்டம். இவ்வாறு பிரித்தது யாருடைய வெற்றி? எங்கே தொழிற் சங்கம் தவறியது? எங்கே நதிநீர்ப்பாதுகாப்பு அமைப்பு தவறியது? என்ற பல கேள்விகளை கௌதம் வாயிலாக வாசகர்களுக்கு கடத்து கிறார் ஆசிரியர். Continue reading
-
வகுப்புவாத தேசியத்தை வீழ்த்தும் மாற்று எது?

சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாநிலக்கட்சிகள்தான் என்றபோதிலும் அவர்கள் பிராந்திய அடையாளங்களை முன்வைக்கவில்லை, உத்தரப் பிரதேசத்தில் பிராந்திய அரசியலும் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. தங்களை தேசிய அடையாளங்களுடன் இணைத்துப் பார்த் துக் கொள்ளும் உ.பி. மக்களுக்கு பாஜகவின் ‘இந்து தேசியவாத’ அழைப்பு ஈர்ப்பைக் கொடுத் துள்ளது. வகுப்புவாத நெடியுடன் அந்தப் பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது. Continue reading
-
அரசாங்கங்கள் கடன் வாங்குவது அண்மைக் காலங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இது சரிதானா?

கடன் வாங்குவதற்கு முன், முதலில் செய்ய வேண்டிய காரியம் என்ன? செல்வந்தர்கள், இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகளின் வருமானம், லாபம், சொத்துக்கள் மீது தகுந்த வரி விதித்து அதனை முறையாக வசூல் செய்து நாட்டு வளர்ச்சிக்கான முதலீடுகளை திரட்ட வேண்டும். இதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. அதன் வர்க்க தன்மையை இது வெளிப்படுத்துகிறது. Continue reading
-
பழைய பாதையில் பயணம் : தமிழக நிதிநிலை அறிக்கை 2017–18

வெங்கடேஷ் ஆத்ரேயா இந்திய அரசியல் அமைப்பில் அடிப்படையிலேயே அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ளன. விடுதலைக்குப்பின் கடந்த எழுபது ஆண்டுகளில் இந்திய பெருமுதலாளிகளின் நலன் கருதி இந்த அதிகாரக்குவிப்பை அதிகப்படுத்த ஆளும் வர்க்கக் கட்சிகள் தொடர்ந்து முனைகின்றன. கடந்த காலங்களில் மாநில உரிமை பேசி வந்த பல்வேறு மாநிலக்கட்சிகள் தாராளமய கொள்கைகளை முழுமையாக ஏற்று அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அமலாக்கிவரும் சூழலில் மத்திய மாநில அதிகாரப்பகிர்வு தொடர்பான ஜனநாயக கோரிக்கைகளை அவை வலுவாக முன்வைப்பதில்லை. இந்திய கம்யூனிஸ்ட்… Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 4

திட்டம் அங்கீகரிக்கப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அண்மையில் அரசியல் தலைமைக்குழு அமைத்த வேளாண் துறையில் நிலவும் வர்க்க முரண்பாடுகள் குறித்த ஆய்வுக்குழுவும் இந்த நிர்ணயிப்பை உறுதி செய் துள்ளன. Continue reading
-
குதிரைக்கு முன்பாக வண்டியைப் பூட்ட முடியாது …

உத்தரப் பிரதேசத்தில் தாக்குதல் தொடங்கி யிருக்கிறது. அதற்கு எதிரான ஒற்றுமை அவசியம். யோகி அரசின் முடிவுகளால் சாமானிய மக்கள் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. சிறு பான்மையினர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந் துள்ளனர். Continue reading
-
ஊர் சுற்றிகளின் அரசன் ராகுல்ஜி

வீ. பா. கணேசன் நம்மில் பலரும் மார்க்சியத்தை நோக்கி அடிவைக்கும்போது ராகுல்ஜியின் ‘பொதுவுடமைதான் என்ன?’, ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, ‘சிந்து முதல் கங்கை வரை’ போன்ற பல நூல்களை படித்திருப்போம். நாம் அதுவரை படித்து வந்த மாமன்னர்களின் பட்டியல் வரிசைக்கு முற்றிலும் மாறாக, இந்தியாவின் எழுதப்படாத வரலாறு பற்றிய சித்திரங்களை நம் மனக்கண் முன் கொண்டு வந்த அந்த மாமேதையின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருந்தது. அன்று ஐக்கிய மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த உத்திரப்… Continue reading
-
தன்னெழுச்சி போராட்டங்கள் கம்யூனிஸ்டுகளுக்குத் தந்திடும் பாடங்கள்

கம்யூனிஸ்ட் அமைப்புகள் மற்றும் அரசியலின் தேவையை, தலையீட்டைத்தான் தன்னெழுச்சி இயக்கங்கள் அவசியப்படுத்துகின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு பெரும் திரள் எழுச்சியாக நடக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு இத்தலையீடும், இணைந்த பணிகளும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. Continue reading
