மார்க்சிஸ்ட் செயலியில் புதிய அப்டேட்

மின் நூல் வடிவில் மார்க்சிஸ்ட் இதழ்களை வாசிப்பதற்கான புதிய வசதியை நவம்பர் 17, 2019 அன்று திருப்பூரில் நடைபெற்ற 102 வது நவம்பர் புரட்சி தின பேரணி பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் அறிமுகப்படுத்த, சம்சீர் அகமது பெற்றுக்கொண்டார்.

சுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…

"அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கு இயக்கம் நீடிக்குமா?" இந்திய விடுதலையின் இளம் புரட்சியாளர் தோழர் பகத்சிங் சொன்னது போல் "இந்த போராட்டம் மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கு முடிவு கட்டும் வரை தொடரும்".

குழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’

கம்யூனிசத்தின் நூற்றாண்டு, ‘கலக்கத்தோடு தொடங்குவதாக’ கட்டுரையாளர் நிறுவ முயல்கிறார். இன்று கலக்கத்தில் இருப்பது கம்யூனிஸ்டுகள் அல்ல, முதலாளித்துவமே மீள முடியாத தன் நெருக்கடியைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டுள்ளது. மனித குலத்தின் எதிர்காலத்தைக் காட்டுகின்ற ஒளிவிளக்காய் மார்க்சிய இயக்கம் ஜொலிக்கிறது.

தேவை நேர் எதிரான ஒன்று – பொருளாதார மந்த நிலை குறித்து பிரபாத் பட்நாயக்

இந்த வரிலக்கு சிறு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால், அதனால் முதலீடுகள் உயர்ந்திருக்ககூடும். ஏனென்றால், இந்நிறுவனங்கள் பெரும்பாலும் நிதியை பொறுத்து செயல்படுபவை கட்டுப்படுபவை. மாறாக பெருநிறுவனங்கள் சந்தையில் நிலவும் தேவையைப் பொறுத்து செயல்படுபவை

கல்வித்துறை நவீனப்படுத்தும், கேரள இடதுசாரி அரசாங்கம் : பிணராயி விஜயன்

நவீன காலத்திற்கேற்ப தொழில் நுட்ப அறிவியல் துறையில் நாம் முன்னோக்கி செல்ல வேண்டிய தேவையுள்ளது. அதற்கு தேவையான திட்டங்களையும், செயல்முறை நிகழ்ச்சிகளையும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கேரளம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

நவீன தகவல் யுகத்தில் மார்க்சை வாசித்தல்

மனிதர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். சமூகம் மனிதர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு தாங்கிப் பிடிக்கப்படுகிறது. சமூகம் பொருள் அமைவின் ஒரு மட்டம் ஆகும். சமூகத்தில் தகவல் தொடர்பு என்பது மனிதர்களின் சமூக இடைச் செயல்முறையாகும்.

ஏழைகளைக் கொலைசெய்யும் தேசிய சுகாதார கொள்கை

தொற்று நோய்கள், தொற்று அல்லாத நோய்களின் பாதிப்புகள் இந்திய சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதுபோலவே, சுகாதாரத்தின் மீதான வணிகம் மிகப்பெருமளவில் அதிகரிப்பது இரண்டாவது பிரச்சனையாகும். மூன்றாவது பிரச்சனை, சுகாதாரத் தேவைகளுக்காக மக்கள் செலவளிக்கும் பணமும், அதன் மூலம் மக்கள் வறுமையில் தள்ளப்படுவதுமாகும்.

பிரெக்சிட் வெளிப்படுத்தும் உண்மை!

உழைக்கும் மக்கள் இனி ஒருபோதும் நெருக்கடியில் சுழ்ன்று கொண்டு வாளாவிருக்க மாட்டார்கள். உலகமய நிதிமூலதன மேலாதிக்கத்தின் விளைவாக கடும் நெருக்கடியைச் சந்தித்த மக்கள் இனி பழைய நிலைக்கு பின்னோக்கிச் செல்வது என்பது சாத்தியமல்ல.