January 2016
-
பாஜக – ஆர்.எஸ்.எஸ் இடையிலான தொடர்பு …

ஆர்.எஸ்.எஸ் ஒரு சர்வாதிகாரப் போக்கு உடைய அமைப்பு. இந்த அமைப்பை உருவாக்கிய தலைவர்கள் அனைவரும் இத்தாலியின் சர்வாதிகாரி முஸோலினி, ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் இவர்களைப் பெரிதும் புகழ்ந்தவர்கள். ஆர்.எஸ்.எஸ்.ஸின் தோற்றத்திற்குக் காரணமானவர் ஹெட்கேவார். அவருடைய குரு மூஞ்ஜே இவர் 1931-ல் இத்தாலி சென்று சர்வாதிகாரி முஸோலினியைச் சந்தித்தார். இதன்பிறகு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக நாஸிக்கில் இந்து ராணுவப் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். Continue reading
-
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக … 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய கியூப ஆதரவு மாநாடு …

அமெரிக்காவின் தடைகளால் கியூபாவின் வளர்ச்சிக்குப் பாதகமான நிலைகள் இருந்தாலும் கியூபா சோசலிச பாதையில் உறுதியாக நின்று கொண்டே பல சாதனைகளைப் படைத்துள்ளது. உலகத்தில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் கூட கியூபா சோசலிசத்தினை வலுப்படுத்தியுள்ளது. Continue reading
-
இந்துத்வ ராஜ்ஜியத்தில் பெண்களின் நிலை என்ன?

ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக சேர பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆண்கள் சுயம் சேவக்குகளாக இருக்கும் போது, பெண்களுக்கான தனி அமைப்பான சேவிகா சமிதியின் பெயரில் கூட சுயம் இல்லை. பெண்ணுரிமை இதன் நிகழ்ச்சி நிரலிலேயே கிடையாது. Continue reading
-
அகநிலைவாதம் எதிர்த்த போராட்டம் !

தலைமையின் வலுவான விருப்பு வெறுப்பு நிகழ்வுகள் அதன் எதிர்வினையாக துதிபாடுவோரை உருவாக்குகிறது. ”தலைமையை மகிழ்விக்கும்” நடத்தையை ஊழியர்களிடையே தோற்றுவிக்கிறது. ஒரு புறச்சூழலைப்பற்றி முறையான உண்மையான மதிப்பீட்டை முன்வைப்பதற்கு மாறாக “தலைமை கேட்க விரும்புவதையே” அதன் கீழுள்ள ஊழியர்கள் கூறும் போக்கிற்கு இட்டுச்செல்கிறது. Continue reading
-
வெனிசுவேலா தேர்தல் முடிவுகள் பற்றி …

2010ஆம் ஆண்டுத் தேர்தலை ஒப்பிடுகையில் புரட்சிகர சக்திகளின் வாக்கு விகிதம் அப்படியே இருந்த போதிலும், எதிர்க்கட்சிகளின் ஆதரவு தளம் பெருமளவு அதிகரித்திருப்பதும், குறிப்பாக புதிய வாக்காளர்களின் ஆதரவை அவை கணிசமான அளவில் கவர்ந்துள்ளதையும் காண முடிகிறது. Continue reading
-
தமிழகத்தில், இடது ஜனநாயக “முன்னணி” உருவாகும் வாய்ப்பு எவ்வாறு உள்ளது?

தமிழகத்தில், இன்றைய சூழலில் இடது ஜனநாயக “முன்னணி” உருவாகும் வாய்ப்பு எவ்வாறு உள்ளது? தமிழகத்தில் வேறு மாநிலங்களைப் போன்று, காங்கிரஸ்,பாஜக வலுமிக்க கட்சிகளாக இல்லை. இங்கு, திமுக,அதிமுக கட்சிகள் கணிசமான மக்களிடம் செல்வாக்கு தளத்தையும், வாக்கு வங்கியையும் வைத்துள்ளன. எனினும், உழைக்கும் மக்களுக்கு விரோதமான நவீன தாராளமயப் பாதையில் அந்த இரண்டு கட்சிகளும் பயணிக்கின்றன. சாதி ஒடுக்குமுறைகள் நீடிப்பது பற்றி எவ்வித தலையீடும் செய்வதில்லை. பிரதேச முதலாளித்துவக் கட்சிகள் எனும் வகையில் உழைக்கும் வர்க்கங்களுக்கு விரோதமான செயல்பாடுகள்… Continue reading
-
கம்யூனிஸ்டுகள் ஏன் அதிகமாக “முன்னணி”அமைப்பது பற்றி பேசுகின்றனர்?

“மக்கள் ஜனநாயக முன்னணி” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் பேசுகிறது. “இடது ஜனநாயக முன்னணி” பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் 21-வது அரசியல் தீர்மானம் பேசுகிறது. கம்யூனிஸ்டுகள் ஏன் அதிகமாக “முன்னணி”அமைப்பது பற்றி பேசுகின்றனர்? கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னணிகள் எப்படிப்பட்டவை என்பது மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்திலும், அரசியல் தீர்மானத்திலும் விளக்கப்பட்டுள்ளது. கட்சி திட்டத்தில் மக்கள் ஜனநாயக முன்னணி என்பது பல வர்க்கங்களை உள்ளடக்கியதாகவும், அந்த வர்க்கப் பிரிவுகளை எவ்வாறு திரட்ட வேண்டுமென்றும் விளக்கப்பட்டுள்ளது. தொழிலாளி – விவசாயி வர்க்கக்… Continue reading
