June 2006
-
காஸ்ட்ரோவும் – புரட்சியும்!
அமெரிக்கர்களால் இந்த புரட்சிகர நடவடிக்கை யினை அழித்துவிட முடியாது; ஏனெனில் எம் தேச மக்கள் ஆயுதந்தாங்க பயிற்சி பெற்றவர்கள். ஆனால், எங்கள் தவறுகளை நாங்கள் திருத்திக்கொள்ள முடியாமல் போனால், இந்நாடு தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியும். இந்தக் காரணத்திற் காகத்தான், நாங்கள் முழுமையான சமூக மாற்றத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். Continue reading
-
தேச அரசியலை நிர்ணயிப்பதில் உள்ளூர் சமூகங்கள்!
இன்று அதிகாரத்தில் இருக்கும் சக்திகள் நாட்டை உலக மூலதனத்தின் ஆதிக்கத்திற்குக் கொண்டு செல்ல முயல்கின்றன. அவ்வப்போது இடதுசாரிகளின் தலையீடு அவர்களது வேகத்தைத் தடுத்தாலும், அவர்களது கொள்கைகள் மாறவில்லை. புதிய தாரளமயம் எனும் பாதையே இன்று ஆட்சியாளர் செல்லும் பாதை. Continue reading
-
கடவுள் சிருஷ்டியா?
தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் தோழர் ம.சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமையேற்றவர்; கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்; விஞ்ஞானப் பார்வையை தமிழ்மக்கள் பெறுவதற்காக ஏராளமான கட்டுரைகளை சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே எழுதியவர். புராணங்களையும், இதிகாசங்களையும் விமர்சித்தால் போதாது, விஞ்ஞான பார்வை மக்கள் பெறும்போதுதான் அறியாமை இருள் அகலும் என்று உறுதி காட்டியவர்; 71 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய கட்டுரையை மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு அளிக்கிறோம். Continue reading
-
குடியரசின் பலன்களை ஒன்று திரட்டப் போராடுவோம்!

பூரண சுதந்திரம் என்ற குறிக்கோளை பல ஆண்டுகளாக ஏற்க மறுத்த காங்கிரஸ், கடைசியில் 1929 டிசம்பரில் நடந்த லாகூர் காங்கிரசில் அதை ஏற்று ஆண்டுதோறும் ஜனவரி 26 ஐ சுந்திர தினமாகக் கொண்டாடத் தீர்மானித்தது. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் தளைகளைத் துண்டித்தால் மட்டும் போதாது என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர். காலங்காலமாக இங்கு நீடித்து வரும் பசி, சுரண்டல் ஒடுக்குமுறைத் தளைகளிலிருந்து இந்திய மக்கள் விடுபடுவது தான் முக்கியமானது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். இந்த விழிப்புணர்வு நாடெங்கிலும் எண்ணிலடங்கா… Continue reading
-
இடதுசாரி கட்சிகளின் குணாம்சங்கள்!
2004 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் பயனாக ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பு காங்கிரஸ் மீது விழுந்தது. இது ஒரு விசேஷமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கியது. அதிலும் குறிப்பாக இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு கூட்டு மந்திரி சபைக்கு அவசியம் தேவை என்ற நிலைமை ஏற்பட்டது. Continue reading
-
இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அடிப்படைவாதிகள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா கண்டத்தில் பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அதாவது ஆரிய இனத்தில் பிறப்பவர் அறிவாளி என்றும், வேறு இனங்களில் பிறக்கும் குழந்தைக்கு அவ்வளவு மதிநுட்பம் இருப்பதில்லை என்றும் விவாதம் நடந்தது. அதேபோல் தான், உயர்கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதமானம் இட ஒதுக்கீடு என்கிற, மத்திய அரசின் முடிவுக்கு, எதிரான விவாதங்களும் நடைபெறுகிறது. தகுதி என்பது, அவரவர் வளருகிற சமூக சூழ்நிலையில் இருந்தே உருவாகிறது. பிறக்கும் போதே எல்லோரும்… Continue reading
இடஒதுக்கீடு, உலகமயமாக்கல், காகா காலேகர் கமிஷன், கிராம முன்னேற்றம், சத்திரியர், சமீர் அமீன், நில விநியோகம், நிலச் சீர்த்திருத்தம், பிராமணர், மண்டல் கமிஷன், வேலைவாய்ப்பு, வைசியர், BJP, Brain Drain, CPI(M), Creamy Layor, IIM, IIMS, IIT, National Knowledge Commission, NRI, OBC, PGI, Samkrisation, SC, ST, Westernisation
