May 2006
-
கட்சி அமைப்பின் அவசியம்!
நமது கட்சியின் அகில இந்திய 18வது மாநாடு நடத்திய கட்சி அமைப்பு பற்றிய பரிசீலனை அறிக்கையின் கோடிட்டு காட்ட வேண்டிய பகுதி என்று எங்களுக்கு பட்டதை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மக்கள் மனதை கவ்விப்பிடிக்கும் ஒர புரட்சிகரமான பாட்டாளி வர்க்க கட்சியாக நாம் உயர அயராது பாடுபட வேண்டியுள்ளது. இன்றைய பலகீனத்தை களைந்து, நாடு தழுவிய அளவில் நமது செயல் விரிவடைய வேண்டுமானால், திட்டமிட்ட செயல் பாடுகள் அவசியமாகிறது. Continue reading
-
குடியரசின் மாண்புகளைப் பாதுகாப்போம்! மக்கள் நலன்களை முன்னேற்றுவோம்!
1950ல் குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது சுதந்திர இந்தியாவின் முக்கியமான சாதனையாகும், ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன், அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை தனது குடிமக்களுக்கு ஜாதி, மத, இன, பால் பேதமின்றி சம உரிமை அளிக்கும் ஜனநாயகக் குடியரசாக அறிவித்தது. இப்போது நினைத்துப் பார்த்தால், வயது வந்தோருக்கான வாக்குரிமையுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயக முறையை உருவாக்கிய அரசிய லமைப்புச் சட்டம் மிகப் பெரிய சாதனைதான் என்று தெரிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் சொல் அமைப்பிலும், செயல்படும் முறைகளிலும், பல தடைகளும்… Continue reading
-
நாணய மாற்றுதலை – தறிகெட்டு அலையவிடலாமா?

நாணய மாற்றுதலில் (மணி – கன்வெர்ட்டபிலிட்டி) தாராள மயத்தை முழுமையாகப் புகுத்த மீண்டும் ஒரு முயற்சி நடக்கிறது. இதனை ஒட்டி ஒரு சூடான சர்ச்சை அரசாங்க மேல்மட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சைகளில் பங்கு பெறுவோர் அமைச்சர்கள், மேல்மட்ட அதிகாரிகள், அரசிடம் சம்பளம் பெறும் நிபுணர்கள், வங்கிகளின் தலைமைப் பீடங்கள், இவர்களோடு எல்லா வகையிலும், நெருக்கமாக குடும்பப் பாசத்தோடு இருக்கும் பெரு முதலாளிகளிடம் சேவகம் செய்யவே பிறப்பெடுத்த கொழுத்த சம்பளம் பெறும் மூளைகள் இவர்கள் எல்லாம் ஒரு… Continue reading
-
தனியார்மயத்தால் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு?

தண்ணீரில் நாம் காணும் நெருக்கடி உலகளவிலான தனியார்மய சூழலாகும். இது மக்களின் அடிப்படை உரிமையாக நீரை கருத வேண்டும் என்ற கோட்பாட்டிற்கும் தண்ணீரை வைத்து சுரண்டும் உரிமை வழங்கினால் தான் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த இயலும் என்ற கோட்பாட்டிற்கும் நடக்கிற போராட்டமாகும். சமீபத்தில் மெக்ஸிகோவில் கூடிய உலக நாடுகளின் தண்ணீர் பற்றிய மாநாட்டில், பெரும்பாலான அரசுகள் குடிநீரை, அடிப்படை உரிமையாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருத்தை முன்வைத்துள்ளன. Continue reading
