Uncategorized
-
சொல்லகராதி: அறுதி உபரி மதிப்பு சார்பு உபரி மதிப்பு
கே.சுவாமிநாதன் உபரி மதிப்பு எவ்வாறு உருவாகிறது, அது மூலதனக் குவியலுக்கு வழி வகுக்கிறது என்பதை கடந்த மாதங்களில் இப் பகுதியில் கண்டோம். முதலாளித்துவ உற்பத்தி முறைமையில் உபரி மதிப்பின் விகிதத்தையும், அதன் குவிப்பையும் அதிகரிப்பதற்கான தொடர்ந்த முனைப்பு இருந்து கொண்டே இருக்கும். உபரி மதிப்பு அதிகரிப்பை அது இரண்டு வழிகளில் செய்யும். ஒன்று அறுதி உபரி மதிப்பு (Absolute Surplus Value). இன்னொன்று சார்பு உபரி மதிப்பு ( Relative Surplus Value). அறுதி உபரி மதிப்பு… Continue reading
-
சீனாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் – சில கேள்விகளும் பதில்களும்
சோவியத் யூனியன் சிதறுண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலவிய ஆட்சிகள் வலுவிழந்து உலக அளவில் சோஷலிச சக்திகளை பலவீனப்படுத்திய போதிலும்கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் தற்போது நீடித்து வரும் சோஷலிசமானது பொருளாயத அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு முரணான ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மை தொடர்ந்து நீடிக்கிறது. Continue reading
-
சொல் அகராதி: மாறா மூலதனம் (Constant Capital) – மாறும் மூலதனம் (Variable Capital)
இப்படி மூலதனத்தின் சேர்மானத்தை எதற்காக ஆய்வு செய்ய வேண்டும்? இது தொழில் நுட்ப பயன்பாட்டின் அளவை, பங்களிப்பை பற்றிய குறியீடு என்பதே அதன் முக்கியத்துவம். ஒரு பெரும் தொழிலில் இயந்திரங்கள் பயன்பாடு அதிகம் இருக்கும். சிறு தொழில்களில் இயந்திர பயன்பாடு குறைவாக இருக்கும். Continue reading
