-
தேர்தல் சீர்திருத்தங்களின் முக்கியத்துவம்
உ. வாசுகி தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசுவதற்கு முன், தேர்தல் பற்றிய கம்யூனிஸ்டுகளின் நிலைபாட்டை நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். மார்க்ஸ், எங்கல்ஸ் காலத்தில் இருவித கருத்துக்கள் நிலவின. நாடாளுமன்ற பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிப்பதன் மூலம், தொழிலாளி வர்க்கத்துக்கு சோஷலிசத்தைக் கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஒரு நிலைபாடு. இது அமைதியான முறையில் முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறிச் செல்வதை முன்வைக்கிறது. தேர்தல், அதனுடன் இணைந்த பணி மற்றும் பிரச்சாரத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்து, களப்போராட்டத்தைக்… Continue reading
-
மனிதர்களால் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் – மார்க்சிய நோக்கில்…
பேரா. டி. ஜெயராமன் முதலாளித்துவ உலகில் இன்று உற்பத்தியும் நுகர்வும் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. புதைபடிவ எரிபொருட்களாகிய நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் போன்ற பொருட்களை முழுமையாகப் பயன்படுத்தத் துவங்கியது என்பதுதான் இந்த வியத்தகு வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக உள்ளது. இப்படி மனிதப் பயன்பாடுகளின் காரணமாக அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் என்பது இன்றைய உலகின் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. முதலில் இந்தப் பிரச்சினையின் தன்மை குறித்து வரையறை செய்வதென்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால், இதுகுறித்த… Continue reading
-
புரட்சிகர மக்கள் தலைவர் தோழர் வி. எஸ்.
ஆசாத் கருத்தும் களமும் ஒன்றிணையும் இடமாக தோழர் வி.எஸ். திகழ்ந்தார். கேரளத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ; உணர்ச்சி ததும்பும் பேச்சாளர்; ஆற்றல் மிகுந்த செயற்பாட்டாளர்; களத்தில் கருத்துக்குச் செறிவூட்டிய கருத்தாழமிக்க மார்க்சிஸ்ட். கேரள மண்ணின் வீரம் செறிந்த புன்னப்புர – வயலார் போராட்டத்தின் களப்போராளி தோழர் வி.எஸ். அச்சுதானந்தன். இந்தப் போராட்ட நெருப்பு அவரது வாழ்வின் இறுதிவரை கனன்று கொண்டேயிருந்தது. புன்னப்புர – வயலார் போராட்டம் தற்போதுள்ள கேரளாவின், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்கள்தான் புன்னப்புராவும் வயலாரும்.… Continue reading
-
தொடர்ந்து முன்னேற விரும்பும் காஷ்மீீீர் மக்கள் இந்திய மக்களின் ஒரு பகுதியினரே!
முகமது யூசுஃப் தாரிகாமி (பஹால்காம் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்கள் எத்தகைய மனநிலையில் உள்ளனர் என்பதை அறியும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தாரிகாமியுடன் தொலைபேசி மூலம் நடத்திய உரையாடலின் தொகுப்பினை கீழே தருகிறோம் – ஆசிரியர் குழு) கேள்வி: பஹால்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நிலைமை எப்படி இருக்கிறது? அமைதி திரும்பவேண்டும் என்று விரும்புகிற காஷ்மீர் மக்கள், இந்த நிலைமையை எப்படிப் பார்க்கிறார்கள்? தோழர் தாரிகாமி: இது பெருந்துயரமான,… Continue reading
-
மக்கள் தொகை, சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள்
பி. வி. ராகவலு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தலைமைப் பதிவாளர் நீண்ட தாமதத்திற்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் பிறகு, இறுதியாக 2027இல், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இதுவரையில்லாத பெரிய ஒரு மாற்றம், சாதிவாரிக் கணக்கெடுப்பைச் சேர்க்கும் முடிவாகும். இது ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) மற்றும் அதன் சித்தாந்தத் தாயான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) ஆகியவை நீண்ட காலமாக எதிர்த்துவந்த ஒரு விஷயமாகும். அரசியல் விவகாரங்களுக்கான… Continue reading
-
ஈரானை சீண்டும் ஏகாதிபத்திய கொக்கரிப்பு : எத்தனை காலம் அமைதி நீடிக்கும்?
– பிரபீர் புர்கயஸ்தா இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர்நிறுத்தம் நீடிக்கிறதென்றால், ஈரானின் அணுசக்தி நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் இனி தாக்குதல் போதும் என்று முடிவு செய்தால், இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தெரியக்கூடும். இப்போதும் காசாவில் இனப்படுகொலை தொடர்கிறது. அங்கு இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல் மரணத்தை வேகப்படுத்தும்; அல்லது பட்டினியால் மெல்ல மெல்ல சாகச் செய்யும். இந்த இரண்டு வாய்ப்புகள்தான் அந்த மக்கள் முன்னே உள்ளன. காசாவில் நடந்துவரும் இனப்படுகொலை தினமும்… Continue reading
-
அணு ஆயுத பரவலை அதிகப்படுத்தும் அமெரிக்க போர் வெறி!
– விஜய் பிரசாத் ஐக்கிய நாடுகள் நிறுவனம் நிறுவப்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, 1958இல் ஈரான் IAEA-வில் சேர்ந்தது. தொடர்ந்து அது IAEA-வின் உறுப்பினராக நீடிப்பதோடு, அமைதியான அணுசக்தி பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட விதிமுறைகளின் பொதுவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறது. ஈரானுக்கு எதிராகத் தடை விதிக்க வேண்டுமென புவிக்கோளத்தின் வடக்கு நாடுகள் (வளர்ச்சியடைந்த நாடுகள்) IAEA மீது மிகுந்த அழுத்தம் கொடுத்த போதிலும், ஈரான் விதிமுறைகளை மீறவில்லை; அது ஓர் அணு ஆயுத நாடு அல்ல என்பதை IAEA… Continue reading
-
காஸ்த்ரோ நூற்றாண்டை நோக்கி…கூபாவின் விடுதலை: காஸ்த்ரோ முன்வைத்த ஜூலை 26 இயக்கத்தின் திட்டங்கள்
சமகால உலகில் 65 ஆண்டுகளாக அமெரிக்க வல்லரசின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்து தனது சோசலிச அமைப்பை பாதுகாத்து முன்னேறி வரும் கூபப் புரட்சியின் வரலாற்றில் 1953 ஆம் ஆண்டு ஜூலை 26 என்பது மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் பாடிஸ்டா என்ற சர்வாதிகாரியின் ஆதிக்கத்தில் இருந்த மக்களை விடுவிக்க போராடிக் கொண்டிருந்த கூபாவின் இளம் முற்போக்கு சக்திகளான ஜூலை 26 இயக்கத்தினர் கூபா அரசின் ராணுவ தளங்களில் முக்கியமான ஒன்றான மான்கடா முகாமின் மீது ஆயுதம் தாங்கிய தாக்குதலை மேற்கொண்டனர். அத்தாக்குதல், பாடிஸ்டாவின் படைகளால்… Continue reading
-
கேரளா LDF அரசாங்கத்தின் சாதனைகளும் சந்திக்கும் சவால்களும்!
அன்வர் உசேன் கேரளாவில் பினராயி விஜயன் அரசாங்கம் 9 ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டில் நுழைந்துள்ளது. 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் வென்ற LDF மீண்டும் 2021இல் வென்றது. இது ஒரு வரலாற்று சாதனை ஆகும். ஏனெனில் கேரள மக்கள் ஒரே கூட்டணியை இரண்டாவது முறை தேர்வு செய்தது இல்லை. இப்பொழுது 2026ஆம் ஆண்டு கேரளாவிற்கு சட்டமன்ற தேர்தல்கள் நடக்க உள்ளன. பினராயி விஜயன் அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர் என எதிரிகள் ஓயாது… Continue reading
-
நவீன கிராமங்களும், நீடித்த வளர்ச்சியும் சாத்தியமா? சோசலிச படிப்பினைகள் காட்டுவது!
இரா. சிந்தன் (இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மந்த்லி ரிவியூ இதழில் சீன இடதுசாரி சிந்தனையாளர் லு ஜின்வு எழுதிய ‘சீன பாணி நவீனமாதல்: புரட்சியும், பாட்டாளி-விவசாயி கூட்டணியும் ‘ என்ற கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை) அனைத்து மக்களுக்கும் மேம்பட்ட வாழ்வை உறுதி செய்வது சோசலிச கட்டமைப்புதான் என்ற போதிலும், பின் தங்கிய ஒரு நாட்டில் உற்பத்தி சக்திகளை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்ற கேள்வி முக்கியமாக எழுகிறது. பின் தங்கிய நாடுகளிலேயே சோசலிச புரட்சிகள் வெற்றியடைந்துள்ள நிலையில்,… Continue reading
