October 2024
-
சிந்து சமவெளி: நிலைநாட்டப்பட்ட உண்மைகளும் கருதுகோள்களும்
அன்வர் உசேன் ஹரப்பா நாகரிகம் எனவும் சிந்து சமவெளி நாகரிகம் எனவும் அழைக்கப்படும் ஒரு சிறந்த நாகரிகம் இருந்ததற்கான அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி சர் ஜான் மார்ஷல் எனும் பிரிட்டிஷ் ஆய்வாளர் “The Illustrated London News” எனும் பத்திரிக்கையில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். அவரது அறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. அதுவரை இந்திய நாகரிகத்தின் தொடக்கம் வேத காலம்தான் என கருதப்பட்ட நிலையில், வேத காலத்துக்கும்… Continue reading
-
வங்காளதேசம்: நவ தாராளமயத்தின் தோல்வி
பிரபாத் பட்நாயக் (இது செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் (Artificial Intelligence) கொண்டு மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரை. ஆசிரியர் குழுவால் சரி பார்க்கப்பட்டது) வங்காளதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் அதிகாரத்துவம் மற்றும் சர்வாதிகாரத்தன்மையை மையமாகக் கொண்டுள்ளன. அந்நாட்டின் “பொருளாதார” நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை, அவை முற்றிலும் கவனிக்கத் தவறிவிட்டன; அல்லது பொதுவாக குறைத்து மதிப்பிட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்புவரை பொருளாதார “அதிசயம்” என்று புகழப்பட்ட ஒரு நாடு, இப்போது… Continue reading
-
குருப்ஸ்காயா – அசாதாரண பெண்மணி
பேரா. சந்திரா “மிக மிக புரட்சிகரமான வர்க்கத்தை சார்ந்த லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தை மார்க்சின் போதனை கவர்ந்தது ஏன் என்ற கேள்வியை நீங்கள் கேட்பீர்களேயானால், உங்களுக்கு ஒரே பதில்தான் கிடைக்கும்; ஏனென்றால், முதலாளித்துவத்தின் கீழ், மனித குலம் பெற்ற அறிவின் திட்டமான அடிப்படையை மார்க்ஸ் ஆதாரமாகக் கொண்டார். மனித சமுதாயத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்த மார்க்ஸ், கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தார். முந்தைய விஞ்ஞானம் தந்த அனைத்தையும்… Continue reading
-
பொன்மலை தியாகிகள் தியாகத்தின் அரசியல் முக்கியத்துவம்
– ஆர். இளங்கோவன் கலகம் எங்கு நோக்கினும் கலகம் அதன் ஒவ்வொரு நாளின் கதையையும் என் கவிதைகளில் வடிக்கிறேன் – கவிஞர் சுகந்த பட்டாச்சார்யா. 1946 இரண்டாம் உலகயுத்தம் முடிந்தவுடன் 1945 இறுதியிலும் 1946லும் இந்தியா முழுவதும் தொழிலாளர்களும், விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும், போர்வீரர்களும் கிளர்ந்தெழுந்ததனால் பல போராட்டங்கள் வெடித்தன. இதைப் பற்றித்தான் கவிஞர் இப்படி கவி வடித்தார். 1.12.1945 அன்று கிளான் ஆச்சின்லாக் என்ற பிரிட்டிஷ் தளபதி தனது ரகசிய குறிப்பில்… Continue reading
-
நவ தாராளமய கார்ப்பரேட் கூட்டுகளவாணித்தனம் மீண்டும் அம்பலம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா மாறிய மக்களவை 2024 இந்தியாவின் பதினெட்டாவது மக்களவை தேர்தல் முடிவுகள் பத்தாண்டு பாஜக /ஆர்எஸ்எஸ் அரசின் மீது மக்களுக்கு இருந்த கடும் கோபத்தை வெளிப்படுத்தியது. 2019 மக்களவை தேர்தலில் 303 இடங்கள் பெற்றிருந்த பாஜக, 2024 மக்களவை தேர்தலில், “நாங்கள் 400 இடங்கள் வெல்வோம்” என்று தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கத்தில் கொக்கரித்தது. ஆனால், பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாறாக, 63 இடங்கள் குறைந்து, 240 இடங்கள் மட்டுமே பெற்று, இப்பொழுது ஐக்கிய ஜனதா… Continue reading
-
பட்டியல் சாதிகளில் உள்வகைப்படுத்தல் மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு – விவாதங்களும், விளக்கங்களும்
பி. வி. ராகவலு அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் இனத்தவரை உள் வகைப்படுத்தும் பிரச்சினையில் (Sub Categorisation) மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. பட்டியலினத்தவரை வகைப்படுத்துவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்றும், தெளிவான தரவுகள், வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அப் பிரச்சினையில் முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும், உச்ச நீதிமன்றம் பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் கூறி இருக்கிறது. இந்த பெரும்பான்மைக் கருத்தை ஒரேயொரு நீதிபதி மட்டும் மறுத்துள்ளார். உள் வகைப்படுத்தலை மேற்கொள்ளும் முடிவை மாநிலங்களின்… Continue reading
-
வர்க்க பிரச்சனைகளை விவாதிக்கும் கட்சி மாநாடுகள்..
எஸ். கண்ணன் கம்யூனிசம் என்றால் என்ன? பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கமாகும். பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன? பாட்டாளிவர்க்கம் என்பது, முற்றாக தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த ஒரு மூலதனத்திடமிருந்தும், லாபம் பெற்றுக் கொள்ளாத வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பம், துன்பம், வாழ்வு மற்றும் சாவு என அனைத்தும் உழைப்பு மீதே சார்ந்திருக்கின்றன. இதன் காரணமாக மாறிக் கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற… Continue reading
