September 2024
-
ஒன்றிய அரசின் பட்ஜெட் 2024-25: திக்குதெரியாதகாட்டில்…
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் ஒன்றிய அரசின் 2024-25க்கான வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. உண்மையில், பாஜக, மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியிருப்பதை, 2024 பொது தேர்தல்கள் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ள பின்னணியில், கடந்த கால பட்ஜெட்டுகளில் இருந்து, இந்த ஆண்டு பட்ஜெட் வேறுபடும் என்பது போன்ற ஊகங்களை கார்ப்பரேட் ஊடகங்கள் உலாவ விட்டன. ஆனால், பத்தாண்டு காலமாக பாஜக-ஆர்எஸ்எஸ் அரசு பின்பற்றிவரும், அதே மக்கள்-விரோத, விவசாயிகள்-விரோத கொள்கையைத்தான் என்டிஏ கூட்டணி சார்பாக… Continue reading
-
திசை மாற்றத்திற்கான அத்தியாவசியக் கொள்கை
பேரா. சி.டி. குரியன் கருத்தியல் ரீதியான தர்க்கப் பயிற்சிகளில் மட்டும் கவனம் செலுத்தும் இன்றைய வகுப்பறைப் பொருளியலைப் போலன்றி, நிஜவாழ்வுப் பொருளியல் (Real Life Economy -RLE) பொருளியலைக் கற்க நம் எல்லோரின் அனுபவபூர்வ யதார்த்தமான சில துப்புக்களாகும். பொருளியல் ஒரு அனுபவபூர்வ யதார்த்தம் என்பதால், அது வரலாற்றுரீதியாக, புவியியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, நம்மோடு தொடர்புடையது. எனினும் எந்தப் பொருளாதாரத்தின் குறிப்பான அம்சங்களையும் நாம் தர்க்கரீதியாக அறிந்து, ஆராய முடியும். ஒரு குறிப்பிட்ட பொருளாதாரத்தை தர்க்க… Continue reading
-
இந்தியாவில் தேசிய இனப்பிரச்சனை
கே. முத்தையா தோழர் கே. முத்தையா நூற்றாண்டு [தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியும், மார்க்சிய சிந்தனையாளருமான தோழர் கே.முத்தையா, எழுத்தும் இயக்கச் செயல்பாடும் பின்னிப் பிணைந்த வாழ்க்கைக்கு சொந்தக்காரர். ஜனசக்தி இதழில் ஜீவானந்தத்துடன் இணைந்து பணியாற்றிய அவர், தீக்கதிர், செம்மலர் ஆகிய ஏடுகளின் ஆசிரியராக செயல்பட்டு, அந்த இதழ்களை வார்த்து எடுத்தவர். தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்து, வர்க்கப் பார்வையில் அவற்றை எடைபோட்டுப் புரிந்துகொள்வதற்கு தோழர் கே.எம். எழுத்துக்கள் இன்றும் வழிகாட்டுகின்றன. கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே… Continue reading
-
பிரான்சில் இடதுசாரிகளின் புதிய பாப்புலர் முன்னணி
சூசன் ராம் பாசிச தீவிர வலதுசாரிகளை தடுத்து நிறுத்திட பிரெஞ்சு நாட்டின் இடதுசாரிகள் ஒன்றுபட்டுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்சு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பிரெஞ்சு அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல், உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊடகங்கள், வாக்கெடுப்பு அமைப்புகள், அரசியல் விமர்சகர்கள் என அனைவரும் பாசிச, தீவிர வலதுசாரியான, மரைன் லு பென் தலைமையிலான தேசிய அணிதான் (National Rally: RN) அதிக இடங்களை வெல்லுமென்று கூறினர். ஆனால், அவற்றுக்கு மாறாக, இடதுசாரிகளின் கூட்டணியான புதிய பாப்புலர்… Continue reading
-
சி.டி. குரியன்: கிராமப்புற மக்களின் மேன்மைக்குக் குரலெழுப்பிய அறிஞர்
வீ. பா. கணேசன் 93 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்டு, நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்ற பொருளாதார அறிஞரான சி.டி. குரியன் தன் வாழ்நாள் காலத்தில் செய்த சாதனைகள் எண்ணற்றவை. 1931ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று பிறந்த அவர், 1953ஆம் ஆண்டில் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். பின்பு, அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து 1962ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். 1962 முதல் 1978ஆம் ஆண்டு வரை சென்னை கிறித்துவக் கல்லூரியில் பொருளாதாரத்… Continue reading
-
மார்க்சிய தத்துவ ஆசான் யெச்சூரிக்கு செவ்வணக்கம்!
ச. லெனின் தோழர் யெச்சூரிக்கு இருந்த ஆழ்ந்த சித்தாந்த தெளிவும், செயலாற்றலும், மிக இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் உயர்பொறுப்பிற்கு அவர் வருவதற்கு ஆதாரமாக அமைந்தன. அந்த அடித்தளமே அவர் கொள்கை உறுதியோடு இறுதிவரை செயலாற்ற வழிவகுத்தது. “மார்க்சிய சித்தாந்தத்தை நடைமுறையில் பொருத்தவேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காகவே அதில் நாம் நிபுணத்துவம் பெறவேண்டும்” என்ற மாவோவின் கருத்தை யெச்சூரி தனது எழுத்துகளில் சுட்டிக்காட்டியுள்ளார். மாவோ முன்வைத்த வழிகாட்டுதலின் வழிபட்டே யெச்சூரியின் மார்க்சிய நிபுணத்துவம் வெளிப்பட்டது. ”இயக்கவியல்… Continue reading
-
இயக்கவியல் பொருள்முதல்வாதம்
மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு அறிமுகம் மார்க்சிய தத்துவம், மற்ற அனைத்து தத்துவ இயல்களைக் காட்டிலும் மிகச் சிறந்த, விஞ்ஞான முறையிலான புரட்சிகர தத்துவமாகும். மார்க்சிய தத்துவம், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்தை கோட்பாட்டு வழியிலும் சித்தாந்த வழியிலும் ஆகச் சிறந்த விதத்தில் ஆற்றல்மிக்க ஆயுதப்பாணியாக்குகிறது. பல சிக்கல்கள் நிறைந்த சமூக, அரசியல் நிலைமைகளை சரியான முறையில் அணுகுவதற்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தகுதிப்படுத்துகிறது. நடைமுறையை விஞ்ஞான வழியில் பகுத்தாய்வு செய்வதற்கும், வரையறுக்கப்பட்ட முன்னுரிமை கடமைகளை தெளிவாக … Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாடுகளின் முக்கியத்துவம்
உ. வாசுகி பொதுவாக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஸ்தாபன கட்டமைப்பில் மாநாடுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. அந்தந்த மட்டத்தில் மாநாடே உயர்ந்த பட்ச அமைப்பாகும். அனைத்து அதிகாரங்களும் மாநாட்டுக்கு உண்டு. குறிப்பாக, கட்சிக் காங்கிரஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மாநாட்டுக்கு அதிகபட்ச அதிகாரம் உள்ளது. அமைப்பு விதிகள் திருத்தம், பொதுச் செயலாளர், மத்திய குழு, அரசியல் தலைமை குழு தேர்வு என்பதோடு, கடந்த மாநாட்டின் அரசியல் நடைமுறை உத்தி பரிசீலிக்கப்பட்டு, வரும் 3 ஆண்டுகளுக்கான அரசியல் திசை… Continue reading
-
செவ்வணக்கம் தோழர்! புத்ததேவ் பட்டாச்சார்யா (மார்ச் 1, 1944 – ஆகஸ்ட் 8, 2024)
ஆசிரியர் குழு 1977 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி இடது முன்னணி அரசு மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தபோது, அந்த அரசில் செய்தி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான துறையின் அமைச்சராக தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 33. அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, 1968லிருந்து தொடங்கி 1981 வரை அவர் மேற்கு வங்க மாநில வாலிபர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். மேற்கு வங்க மாநிலக் குழு, மாநில செயற்குழு, மத்தியக்… Continue reading
-
இந்திய விடுதலையும் வரலாறும்
இ.எம். எஸ். நம்பூதிரிபாட் நாட்டு விடுதலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் 1970களின் துவக்கத்தில் நடைபெற்றபோது ஏராளமான நூல்களும், விடுதலைப் போராட்டம் பற்றிய பல்வேறு தலைப்புகளில் தனி நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. இவற்றில் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் முக்கிய இடம் பெற்றன. இந்த ஆய்வுகள் நம்முடைய வரலாற்றியலை மெய்யாகவே வளப்படுத்தியுள்ளன. எனினும் பெரும்பாலான அறிஞர்கள், பின்வருவன போன்ற பல கேள்விகளுக்கு, பகுத்தறிவுக்குப் பொருத்தமான விடைகளை அளிக்கத் தவறிவிட்டனர். 1857-ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னரும் நடைபெற்ற கலகங்கள் ஏன் வெற்றியடையவில்லை?… Continue reading
