August 2024
-
ஜூலை 30 தியாகிகள் தினம் : வர்க்கப் போராட்டத்தின் வழிகாட்டி
புதுச்சேரி. வெ. பெருமாள் ஜூலை 30 தியாகிகள் தின நிகழ்வுகள், புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிமிகு போராட்டத்தின் வீரகாவியமாகும். 88 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1936 ஜூலை 30இல் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் சுழல் பீரங்கிக்கு 12 பஞ்சாலைத் தொழிலாளர்கள் இரையாகி, தெற்காசியாவில் முதன்முதலில் 8 மணி நேர வேலை உரிமையை பெற்றிட்ட வரலாற்று நிகழ்வு அது. சுரண்டலையும், ஏகாதிபத்தியத்தையும் ஒரு சேர எதிர்த்திட்ட எழுச்சிமிகு வர்க்க போராட்டத்தின் அடையாளமும் ஆகும். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் வருகை… Continue reading
-
மோடியின் நிகழ்ச்சி நிரலா? மக்களின் நிகழ்ச்சி நிரலா?
என். குணசேகரன் பாரதிய ஜனதா கட்சிக்கு அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில் தனது நிகழ்ச்சி நிரலை அக்கட்சியால் தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா? பாஜகவின் நிகழ்ச்சி நிரல் என்பது ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலான இந்துத்துவா இலக்குதான் என்பதை அனைவரும் அறிவார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம் அமைக்கும் தொலைநோக்கு இலட்சியத்தின் சில திட்டங்களை மோடி அரசு அமலாக்கியுள்ளது. தற்போது ஆட்சி அதிகாரம் அதற்கு மீண்டும் கிடைத்துள்ள நிலையில், மதசார்பின்மை, ஜனநாயகம் உள்ளிட்டு இந்தியா… Continue reading
-
சோசலிச கியூபாவை கொண்டாடுவோம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் நாம் வாழ்ந்துவரும் 21ஆம் நூற்றாண்டு மானுட இனத்தின் எதிர்காலம் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நூற்றாண்டின் முதல் கால் பாகம் நிறைவடைய இன்னும் 18 மாதங்கள் கூட இல்லை. எனினும் மானுடத்தின் எதிர்காலம் பற்றிய மிகுந்த கவலையுடன், இந்த காலகட்டத்தில் சுற்றுச் சூழல், புவி வெப்பமயமாதல், பருவ/கால நிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் முக்கியம் என்றாலும், சமகாலத்தில் இயற்கையையும், மானுடத்தையும், தனது லாப… Continue reading
-
கொலையாளி வெப்ப அலையா? முதலாளித்துவமா?
ஆர். எஸ். செண்பகம் ஒரு லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது பூமி வெப்பமாக உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது. இந்தியா மூன்றாவது ஆண்டாக கடுமையான வெப்ப அலைகளை அனுபவித்து வருகிறது. பல நகரங்களில் இரவு நேர வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை விட அதிகமாக உள்ளது. வட இந்தியாவில் வெப்ப அலையின் காரணமாக, மார்ச் மாதத்திற்கும் ஜுன் மாதத்திற்கும் இடையில் 143 பேர் உயிரிழந்துள்ளனர். 42,000 பேர் வெப்ப… Continue reading
-
ஏலியன் பற்றிய கேள்விக்கு எங்கெல்ஸ் சொன்ன பதில் என்ன? : இயற்கையின் இயக்கவியல் நூல் ஓர் அறிமுகம்
இரா. சிந்தன் இந்தப் பூமியே மொத்தமாக அழிந்துபோனால், வேறு எங்காவது உயிர் தோன்றவோ, பிழைத்திருக்கவோ சாத்தியம் உண்டா? பூமியை போலவே உயிர்கள் வாழ சாத்தியமுள்ள கோள்கள் உள்ளனவா? நம்மைப் போலவோ, நம்மை விட முன்னேறியோ, உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்தில் வாழ்கின்றனவா? என்ற கேள்விக்கு விஞ்ஞானம் இப்போதும் நிரூபணம் தேடி வருகிறது. அதையே பலரும் கற்பனையான வேற்றுலக வாசிகள் என்ற பெயரால் கதைகளாகவும், அச்சுறுத்தும் யூகங்களாகவும் முன்வைக்கின்றனர். இதே கேள்வியை மார்க்சிய நோக்கில் அணுகும்போது, மாமேதை ஃபிரடெரிக் எங்கெல்சிடம்… Continue reading
-
செயற்கை நுண்ணறிவும் வேலைவாய்ப்பின் மீதான பாதிப்புகளும்
பேரா. பிரபாத் பட்நாயக்தமிழில்: மோசஸ் பிரபு எழுத்தாளர்களுக்கு மாற்றாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை கண்டித்து கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஹாலிவுட் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக வாக்குறுதி அளித்தபோது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அவர்கள் எழுப்பிய அடிப்படையான பிரச்சனைகளுக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு அறிமுகம் குறித்தும், அதன் நன்மை தீமைகள் குறித்தும், பல்வேறு கோணத்தில் பலர் எழுதியுள்ளனர். அது உண்டாக்கப்போகும் பெருவாரியான… Continue reading
-
18வது நாடாளுமன்றத் தேர்தல்: முதல் கட்டப் பார்வை
உ. வாசுகி 18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் சூழலில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. நான் கடவுளின் குழந்தை என்ற திட்டமிட்ட பிதற்றல் துவங்கி, மோடியும் பாஜக ஆட்சியும் வெல்லவே முடியாதவை என்கிற தோற்றம் வரை அனைத்தும் நொறுக்கப்பட்டது தான் இந்திய வாக்காளர்களின் மகத்தான பங்களிப்பாக அமைந்திருக்கிறது. வாழ்வாதார பிரச்னைகள் குறிப்பாக வரலாறு காணாத வேலையின்மை மற்றும் கடும் விலை உயர்வு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசமைப்பு சட்டப் பாதுகாப்பு… Continue reading
-
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பாலஸ்தீன விடுதலைப் பயணம்!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் 1988 நவம்பர் 15 அன்று பாலஸ்தீன விடுதலை இயக்கம், இறையாண்மை பெற்ற பாலஸ்தீன நாடு அமைந்துள்ளது என அறிவித்தது. வரலாற்றில் பாலஸ்தீனம் என்று அறியப்பட்ட பகுதியில், 1967இல் இஸ்ரேல் நாடு ஆக்கிரமித்துக்கொண்ட பகுதியான கிழக்கு ஜெருசலம் உட்பட உள்ள ஜோர்தான் நதியின் மேற்குக் கரை மற்றும் காஜா பகுதி ஆகியவை இதில் அடங்கும். இவை பாலஸ்தீனத்தை சேர்ந்தவை என்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். 1988 ஆண்டு இறுதிவரை 78 நாடுகளால் பாலஸ்தீனம்… Continue reading
-
ஈஎம்எஸ்.: மார்க்சிய வழிகாட்டி
பிரகாஷ் காரத் தமிழாக்கம்: சேலம் சோபனா (ஆங்கில தத்துவார்த்த ஏடு மார்க்சிஸ்ட் 2009 ஜூலை-செப்டம்பர் இதழில் எழுதிய கட்டுரை ) மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் தலைவரும் மார்க்சிய அறிவுஜீவியுமான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அவர்கள் பிறந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஈஎம்எஸ். என உலகளவில் அறியப்பட்ட அவர், ஜூன் 13, 1909இல் பிறந்து, மே 12, 1998இல் மறைந்தார். ஈஎம்எஸ். ஒரு கட்டுப்பெட்டியான நம்பூதிரி பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம் மாணவராக இருந்தபோது, பொதுவாழ்வில் அவரது முதல் நடவடிக்கை நம்பூதிரி சமூகத்தினுள் நிலவி வந்த பிற்போக்கான… Continue reading
-
தோழர் சி.எஸ். – ஒரு வரலாற்று பெட்டகம்
கே. பாலகிருஷ்ணன்மாநில செயலாளர் – சிபிஐ(எம்) “ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சி.சுந்தரம் ஐயரின் மகன், சுமார் 30-40 வயது மதிக்கத்தக்கவர், உயரம் 5 அடி 7 அங்குலம், ஒல்லியான உடல்வாகு, கோதுமை வண்ணம், படிய சீவிய தலை” – ‘சுப்ரமணியம் மற்றும் பி.ராமமூர்த்தி, எஸ்.மோகன் குமாரமங்கலம், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரை ராஜதுரோக குற்றத்தின் கீழ் கைது செய்ய உதவியாகத் தகவல் தருபவருக்கு ரூ.100 சன்மானம் தரப்படும்” என பிரிட்டிஷ் அரசாங்கம் செய்தித்தாளில் இப்படி ஓர் விளம்பரத்தை அளித்திருந்தது.… Continue reading
