மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


October 21, 2023

  • இந்திய சமுதாய அமைப்பும் வரலாறும் ஒரு மார்க்சிய கண்ணோட்டம்

    இந்தியாவின் வரலாற்று அனுபவத்தை ஒரு பரந்த தளத்தில் வைக்கும் வகையில், நவீன காலத்திற்கு முந்தைய உலகின் சில சமூக அமைப்புகளைப் பற்றிய சுருக்கமான ஆய்வுடன் தொடங்குவது பயனுள்ளதாக இருக்கும். உலக வரலாற்றின் அடிப்படையில் வர்க்க சமுதாயத்தின் தோற்றம் மற்றும் ஆரம்பகால அரசு உருவாக்கம் ஆகியவை, கிமு 3000-இல் ஈராக்கின் தெற்கு மண்டலப் பகுதியில் தோன்றிய ஆரம்பகால நாகரிகமான சுமேரிய நாகரிகத்தில், அசாதாரண விரிவான தன்மையுடன் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.    Continue reading

  • இந்துத்துவா வகுப்புவாதம்

    விடுதலைக்கான தேசிய இயக்கம் உருவானதும் அதற்கு பிரிட்டஷ் அரசாங்கத்தின் எதிர்வினையின் ஒரு விளைவாகவும், 1906ஆம் ஆண்டு “ஆகா கான்” என்பவரது முன்முயற்சியில் முஸ்லீம் நிலப்பிரபுக்களின் ஒரு பிரிவினரால் 1906ம் ஆண்டு டாக்காவில் முஸ்லீம் லீக் தொடங்கப்பட்டது. முஸ்லீம் லீக் முஸ்லீம்களுக்கு தனி பிரதிநிதித்துவத்தையும் தனி வாக்குரிமையையும் கோரியது.  பிரிட்டஷ் அரசாங்கம் தனது சூழ்ச்சிக்காக இதனை சாதகமாக கையாண்டது. பல்வேறு திருப்பங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு பின்னர், அரசு “இந்திய அரசாங்கம் சட்டம் 1935” எனும் சட்டத்தை இயற்றியது. Continue reading

  • இடது ஜனநாயக முன்னணியும் இன்றைய அரசியல் நடைமுறை உத்தியும்

    நாடு முழுவதிலும் வலுவானதொரு கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுப்பது அவசியமாகும். ஸ்தாபனம் குறித்து கல்கத்தா ப்ளீனம் மேற்கொண்ட முடிவுகளை உண்மையாக அமலாக்குவதன் மூலம் மட்டுமே மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படையில் அமைந்த வெகுஜன அடித்தளத்துடன் கூடிய வலுவானதொரு கட்சியை நம்மால் கட்டியெழுப்ப முடியும். Continue reading

  • சி.பி.ஐ(எம்) கட்சி திட்டம் குறித்த சிறு குறிப்பு …

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாக்கப்பட்ட 1964ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கல்கத்தாவில் நடைபெற்ற 7வது கட்சி மாநாட்டில், கட்சித் திட்ட ஆவணம் உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1992ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 14 ஆவது கட்சி மாநாடு 1990களில் சர்வதேச மற்றும் தேசிய நிலைமைகளில் ஏற்பட்ட முக்கியமான மாறுதல்களின் பார்வையில் கட்சியின் திட்டத்தை காலப்படுத்துவது என்ற  முக்கியமான முடிவை எடுத்தது. மூன்று மாத காலம் நாடு முழுவதும் நடைபெற்ற தீவிரமான உட்கட்சி விவாதங்களுக்கு பின்னர், 2000ஆம் ஆண்டில்,… Continue reading