September 2019
-
செப்டம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
உற்பத்தி துறைகளை பெரு நிறுவனங்கள் கபளீகரம் செய்வது குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் “முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள்” என்ற கட்டுரை விவாதிக்கிறது. இது அதிபர் ஜுலியஸ் நெய்ரே பெயரில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேரா. பிரபாத் பட்நாயக் பேசியதன் ஒரு பகுதியாகும். வாகன உற்பத்தி துறையில் ஏற்பட்ட வேலை இழப்பு இன்னும் தொடர்ந்துகொண்டே வருகிறது. ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதற்கான காரணங்களையும் அதற்கான உண்மையான மாற்றையும் முன்வைத்து… Continue reading
-
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தனியார்மயம் – உலகமயம் உணர்த்தும் பாடங்கள்
அ. இராசகோபால் இந்திய அரசின் சமீபத்திய அறிக்கையின்படி இந்தியாவில் 21 நகரங்களில் குடிநீருக்காக உபயோகிக்கப்படும் நிலத்தடி நீர் 2020-ல் முற்றிலும் குறைந்து பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதில் சென்னையும் அடங்கும். 2020-ல் இந்தியாவில் தேவைப்படும் குடிநீர் அளவு இரட்டிப்பாகி பல கோடி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த வருமானத்தில் ஆறு சதவீதம் இழப்பு ஏற்படும். ( நிதி ஆயோக்- ஜூன் 2018). சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் ஏற்பட்டுள்ள கடும்… Continue reading
-
ஆர்.எஸ்.எஸ் விரும்பும் அகண்ட பாரதமும், காஷ்மீர் பிரச்சனையும்
டி.கே.ரங்கராஜன் காஷ்மீரில் அரசமைப்புச் சட்ட பிரிவு 370 வழங்கியிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. பாஜக தனது கொள்கையை அமலாக்கியிருப்பதாக சொல்கிறது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலோ, மோடியின் கடந்த ஆட்சியிலோ செய்யாத ஒன்றை இப்போது அவசர அவசரமாக செய்வதற்கு என்ன காரணம்? காஷ்மீர் பிரச்சனையைப் பற்றி விரிவாக பேசுவதற்கு முன், சில அடிப்படையான விசயங்களை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. அடிப்படையில் பாஜக ஒரு வகுப்புவாத கட்சி. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வடித்துக் கொடுத்த வகுப்புவாத தத்துவத்தைத்தான் முன்னெடுக்கும். ஒரு வகுப்புவாதக் அமைப்பானது… Continue reading
-
இந்துத்துவா அரசியலை பாஜக கைவிடுமா? அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்
பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியது ஒரு பாசிச வெளிப்பாடு என்றும், ஆர் எஸ் எஸ் தனித்துவமான பல பாசிச தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்றும் நான் இப்போதும் நம்புகிறேன். இருந்தபோதிலும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் வரலாற்று ரீதியாகவே மிகவும் தனித்துவமான அரசியல் கட்சியாக இருக்கும் அதன் வெகுஜன அரசியல் முன்னணிப் படைக்கும் இடையே ஒரு வேறுபாட்டையும் நான் காண்கிறேன். Continue reading
-
மாவோ எழுதிய நமது பயில் முறை சீர்திருத்தம் கட்டுரையில் இருந்து …
”எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது எனவே அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கருதியும் உத்தரவுகளை மேற்கொள்கின்றனர். நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைவாதப் பாணி நிலவுகிறது அல்லவா? Continue reading
-
இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலை
செல்போன், கம்ப்யூட்டர் போன்றவை மானுடத்தின் சாதனைகள், உலகமயத்தின் சாதனைகள் அல்ல. உலகமயம் என்பது இந்த தொழில்நுட்பங்களின் உதவியோடு வளரும் நாடுகளை, மேலைநாடுகள் கையகப்படுத்தக்கூடிய வாய்ப்பை முன்வைக்கிறது. இதுதான் உலகமயம். Continue reading
