August 18, 2019
-
ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
இந்தியாவின் பன்முகத்தன்மையை முற்றாக அழித்து ஆர்.எஸ்.எஸ்- இன் ஒற்றை பண்பாட்டை திணிக்கும் வேலையை மத்திய பா.ஜ.க அரசு அனைத்து வழிகளிலும் செய்து வருகிறது. ஒரே நாடு-ஒரே மொழி, ஒரே நாடு – ஒரே ரேஷன் அட்டை, ஒரே நாடு ஒரே சட்டம் போன்ற வார்த்தை ஜாலங்களோடு, தீவிர முதலாளித்துவ சுரண்டலுக்கும் அது வசதி செய்து தருகிறது. மாநிலங்களின் உரிமைகளை தகர்ப்பது, கல்வி, வேலை உள்ளிட்ட பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்களில் கூட மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் பல்வேறு சட்டத்… Continue reading
-
எங்கெல்ஸ் 125: மார்க்சியத்தின் அடித்தளம் எங்கெல்ஸ்
மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்வதற்கும், காலத்தை வென்று மார்க்ஸ் என்றும் நிலைத்து நிற்பதற்கும், மார்க்சிய தத்துவம் வலுவான அடித்தளம் பெறுவதற்கும் எங்கெல்சின் அயராத பங்களிப்பே அனைத்திற்கும் அடிப்படையாக திகழ்ந்தது என்பதே உண்மை. Continue reading
-
கல்வியும் கம்யூனிஸ்டுகளும்
கல்வியை வழங்குவது அரசின் கடமை என்பது காலாவதியாகிப் போன முழக்கமாக மாற்றப்பட்டது. இரு வேறு கல்வி முறை கூர்மையாக பிரித்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. உற்பத்தித் துறைக்கு மாறாக, வணிக, சேவைத் துறைக்கு உகந்ததாக கல்வி அமைப்பு செயல்படத் தொடங்கியது. இத்தகைய தாராளமய, தனியார்மய பாதை பெருமுதலாளிகளுக்கு ஏராளமான பலன்களை தந்தது. புதிய வர்த்தக நிறுவனங்கள் தோன்றி பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக விரிவடைந்தன. Continue reading
-
உள்ளிருந்தே கைப்பற்றப்பட்ட அரசு அய்ஜாஸ் அகமத் – உடன் ஓர் உரையாடல்
இடதுசாரிகளின் பின்னடைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை சமூக ரீதியான இயக்கங்களும், அரசுமுறை சாரா அமைப்புகளும், அங்குமிங்குமாக செயல்பட்டு வரும் சிறு குழுக்களும் நிரப்பி விடக் கூடும் என்று யாரும் நினைத்தால் அத்தகைய ஒரு நிகழ்வு நடக்கவே நடக்காது Continue reading
-
சாதி, வர்க்கம், இயக்கங்கள்
ஆனந்த் டெல்டும்டெவின் “சாதிக் குடியரசு” நூல், இந்திய மக்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்கள் பற்றி ஆழமான பல கருத்துக்கள், ஏராளமான விவரங்கள் கொண்ட 400-பக்க நூலாக அமைந்துள்ளது. டெல்டும்டெவின் சிந்தனைகள் அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை; விவாதத்திற்கும், விமர்சனத்திற்கும் உட்படுத்த வேண்டியவை. எனினும், முக்கிய கருத்துக்கள் சிலவற்றை மட்டும் இக்கட்டுரை விவாதிக்கிறது. Continue reading
-
அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்
பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித் தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல் தான். Continue reading
