மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


February 2019

  • இட ஒதுக்கீடு ஏன் எவ்வாறு?

    இட ஒதுக்கீடு முன்னேறியசாதியிலுள்ள ஏழைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்படவில்லை; மாறாக முன்னேறியசாதியினர் எட்டியிருக்கும் சமூக, பொருளாதார, கலாச்சார மட்டத்தின் அளவிற்கு ஒடுக்கப்பட்ட சாதியினரையும் முன்னேற்றுவதுதான் இடஒதுக்கீட்டின் நோக்கம். Continue reading

  • சிங்காரவேலரின் மார்க்சியப் பார்வை

    என்.குணசேகரன் மானுட விடுதலைக்கு வழிகாட்டுகிற தத்துவம் மார்க்சியம். காரல் மார்க்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் ஆன இன்றைய பின்னணியில் சிங்கரவேலரின் மார்க்சிய சிந்தனை தமிழக சிந்தனைப் பரப்பில் முக்கியத்துவம் வாய்ந்தததாக உள்ளது,  அது இன்றைக்கும் பொருத்தப்பாடு கொண்டதாகவும் உள்ளது. இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர், தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட் இயக்கப் போராளி,தொழிலாளர்     இயக்கங்களையும், தொழிலாளர் போராட்டங்களையும் தலைமையேற்று நடத்திய தலைவர் ,மிகச்சிறந்த அறிவியல் பரப்புரையாளர், சுயமரியாதை இயக்கத்தின் கருத்தியல் செயல்பாட்டாளர் என பன்முகத் தளங்களில் பணியாற்றியவர்… Continue reading

  • தோற்கடிக்கப்பட்ட புரட்சியின் படிப்பினைகள்

    தமிழில்: பாலச்சந்திரன் 26 ஆகஸ்ட் 1849 ல், மார்க்ஸ் ஆங்கிலேய மண்ணில் காலடி வைத்தபொழுது லண்டன் மாநகரம், இருபது லட்சத்திற்கும் மேலான மக்கள்தொகை கொண்டதாகவும்,உலகிலேயே மிகப் பெரிய நகரமாகவும், உலகின் ‘தொழிற்பட்டறை’யாகவும், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாட்டின் தலைநகரமாகவும் விளங்கியது. 1848 ம் ஆண்டின் வசந்த காலத்தில், அடிப்படை ஜனநாயக உரிமைகளின் விரிவாக்கத்திற்காக, சார்டிஸ்ட் இயக்கம் மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்த பொழுது, ஐரோப்பிய புரட்சி, இங்கிலாந்தின் கதவுகளையும் தட்டிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த இயக்கம் மிகப் பெரிய… Continue reading

  • மோடி அரசின் மோசடி பட்ஜெட் 2019

    வெங்கடேஷ் ஆத்ரேயா பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்னும் இரண்டே மாதங்களில் காலாவதியாக உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடந்து புதிய அரசாங்கம் அமையும் வரையிலான, வரும் 2019-20 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்கள் வரை, அரசு நடத்துவதற்கான வரவு செலவு திட்டம் முன்வைக்க  மட்டுமே இந்த அரசுக்கு அதிகாரம் உண்டு. இதனை ஏற்று,  நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே சமர்ப்பிக்க உள்ளோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் அதை மீறி 2019-20 நிதி… Continue reading

  • சிங்காரவேலர் : நகரசபை உறுப்பினராக மக்கள் பணிகள்

    உதயகுமார் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூலவரான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக உலக அளவில் அன்றே போற்றப்பட்டவர். கான்பூரில் 1925 இல் நடைபெற்ற இந்திய பொதுவுடமைக் கட்சி மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தியவர் என்ற பெருமையும் உண்டு. சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் தொடர்புடைய சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பும் கொண்டிருந்த சிங்காரவேலர் எந்த ஒரு பொறுப்பையும் தீவிர கொள்கை பிடிப்புடனும் சமரசமற்ற முறையிலும் நிறைவேற்றி வந்தார் என்பது தனிச்சிறப்பாகும். ஈ.வே.ரா பெரியார்… Continue reading

  • பிப்ரவரி 2019 மார்க்சிஸ்ட் இதழில் …

    மார்க்ஸ் பிறந்த 200 ஆம் ஆண்டை முன்னிட்டு மார்க்சிஸ்ட் இதழில் நாம் தொடர்ந்து பல்வேறு சிறப்பு கட்டுரைகளை கடந்த ஆண்டு முழுவதும் வெளியிட்டு வந்தோம். அதன் நிறைவாக, சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மார்க்ஸ் பிறந்த நாள் இருநூற்றாண்டு விழாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மக்கள் சீனத்தின் குடியரசுத்தலைவருமான ஜி ஜின்பிங் மார்க்ஸ் குறித்தும், மார்க்சியத்தை பயில்வதின் அவசியம் குறித்தும், சீனாவில் அதை அமலாகும் விதம் குறித்தும் ஆற்றிய உரையின் பகுதி “மார்க்சை பயில்வது என்பது என்ன?”… Continue reading