April 2016
-
காவு வாங்க வரும் காப்புரிமை சட்டதிருத்தம்

தேச விரோத கொள்கைகளை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவதே நம் தேச பக்த கடமையாகும் Continue reading
-
மாநிலக் கட்சிகள், சாதி ஒடுக்குமுறை – மார்க்சிஸ்ட் அணுகுமுறை …

தமிழில்: இரா.சிந்தன் மாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு எத்தகையது? மார்க்சிஸ்ட் கட்சியின் 21 வது அகில இந்திய மாநாடு, மாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு பற்றி விவாதித்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள் – பிராந்திய முதலாளிகளின் நலன்களை மட்டுமல்லாது, அரசுக்கும் மற்றும் கிராமப்புற பணக்காரர்களுக்கும் இடையில் நிலவும் கூட்டின் பிரதிநிதிகளாகவும் உள்ளன, என்று கட்சி வரையறுத்துள்ளது. மாநிலக் கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் என்கிறோம். அவர்கள் பாஜகவுடன் கூட்டு சேர தயங்குவதில்லையே? தற்போது அரங்கேற்றப்படும்… Continue reading
-
தேசம் என்றால் என்ன? தேசியம் என்றால் என்ன?

இன்றைய அரசு மற்றும் அதன் ஒரு பகுதியான அரசாங்கம் இரண்டும் இந்தியாவின் பல்வேறு தேசியப் பிரச்சனைகளை காலில் போட்டு மிதிக்கின்றன. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக நிகழ்வும் நேரு பல்கலைக்கழக நிகழ்வும் இதன் வெளிப்பாடுகளே! இவை தொடரவே செய்யும். Continue reading
-
எல்லா அதிகாரங்களும் மக்களுக்கே ! ஏப்ரல் கருத்தியல் தரும் பாடம்

ஜாரிசத்தின் வீழ்சியென்பது நாட்டின் வரலாற்றில் ஒரு காலகட்டத்திலிருந்து மற்றொரு காலகட்டத்திற்கு செல்லுகிற நிகழ்வாக அமைந்துள்ளது. புதிய சூழலில் கட்சிக்கு புதிய திசைவழியும், புதிய திட்டமும் வேறுபட்ட நடைமுறை உத்திகளும், வேறுபட்ட முழக்கங்களும் தேவைப்பட்டன. இப்பிரச்சனைகள் அனைத்திற்கும் லெனின் உரிய தீர்வுகளை அளித்தார். – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு ஆறுமுக நயினார் புரட்சிகளின் வரலாறும், புரட்சிக்கான கட்டத்தின்போதே அரசியல், தத்துவார்த்த – நடைமுறை ஞானம் பெற்றிருந்த தலைவர்களின் அளப்பரிய பங்களிப்புகளும் மீண்டும் மீண்டும் படித்துத் தெளிவு பெற… Continue reading
-
கேள்வி பதில் – ஏப்ரல் 2016
பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது சிவில் உரிமைகளை பறிக்கக் கூடியதே. அனைத்துப் பகுதி மக்களின் கண்டனக் குரல்கள், எதிர்ப்பு இயக்கங்கள் அதிகமாக நடந்ததா? குறைவாக நடந்ததா? என்பதை விட கண்டனக் குரல் எழுப்பிய அமைப்புகள் மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. Continue reading
-
பகுத்தறிவு சித்தாந்தமும் தி.மு.க. – அதி.மு.க. கட்சிகளின் சீரழிவும்

பெரியார் வித்திட்ட பகுத்தறிவு, சுய மரியாதை உணர்வுகள் மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தின் (அதாவது வர்க்கப்போராட்டத்தின்) விளைவாக உயிர்த் தெழும். அல்லது அதற்கான போராட்டம் தொடரும். Continue reading
-
வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் போராட்டம் … 2

– டி.கே.ரங்கராஜன் இடது ஜனநாயக அணியைக் கட்டுவதென்பது, மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. இந்தப் பின்னணியில், மக்கள் நலக் கூட்டணியுடன் கட்சியின் அணுகுமுறை எவ்வாறு இருந்திட வேண்டும்? இந்தக் கேள்வியானது இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமானது. 1982 ஜனவரியில் விஜயவாடாவில் நடைபெற்ற 11வது கட்சி காங்கிரசின் அரசியல் தீர்மானத்தை முன் மொழிந்து விவாதத்திற்கு தொகுப்புரை வழங்குகிறபோது – தொகுப்புரையின் ஒரு பகுதியாக தோழர் பி.டி.ரணதிவே வழங்கிய தொகுப்புரையில் “இடது ஜனநாயக ஒற்றுமை” என்ற தலைப்பின் கீழ் வரும் விபரங்களை… Continue reading
-
வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் போராட்டம் … 3

– டி.கே.ரங்கராஜன் திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் பண்படுத்திய தமிழக மண்ணில் சாதிய, மத சக்திகள் தமிழகத்தில் காலூன்றி வருவதாகத் தெரிகிறதே? புதிய, புதிய வழிபாடுகளும், மக்கள் கோயில்களை நோக்கி படையெடுப்பதும் இப்போது அதிகமாகி வருகிறதே? இந்த விஷயத்தில் கம்யூனிஸ்டுகளுடைய பணியும், திராவிட இயக்கத்தின் பணியும், தியாகமும் பாராட்டத்தக்கவை. தமிழகத்தின் சீர்திருத்த இயக்கம் பற்றிய புரிதல் நமக்கு உண்டு. பேராசிரியர் அருணனின் ‘தமிழகத்தில் இரு நூற்றாண்டு சமூக சீர்திருத்தம்’ கட்டுரைகளில் அந்தச் சிந்தனைகள் நன்கு வெளிப்படுகின்றன. பெரியார்… Continue reading
-
வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் போராட்டம் … 1

ஆட்சியதிகாரத்தில் இருந்துகொண்டு, மக்கள் நலன்களைப் புறக்கணித்து, ஊழலில் முற்றிலுமாக முழுகிப்போன திமுக – அதிமுகவை எதிர்ப்பது என்கிற சரியான, அரசியல் ரீதியிலான முடிவுக்கு நாம் வரவேண்டியிருந்தது. இந்தப் பின்னணியில்தான் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. குறைந்தபட்ச செயல்திட்டம் வரையறுக்கப்பட்டது. Continue reading
-
ஐம்பது ஆண்டு கால தமிழக அரசியல் பொருளாதாரம் 1967 – 2016

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலில் ஒரு பெரும் மாற்றம் துவங்கியது. இந்தியாவின் விடுதலைக்குப்பின் மூன்று பொது தேர்தல்களில் (1952, 1957, 1962) மக்களவையிலும், 1957 கேரளா நீங்கலாக அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்தது இந்திய தேசிய காங்கிரஸ். ஆனால், 1967 தேர்தல்களில் மக்களவையில் குறைந்த அளவு பெரும்பான்மை பெற்று அக்கட்சி ஆட்சி அமைத்த போதிலும், எட்டு மாநில சட்டப்பேரவைகளில் அது பெரும்பான்மை பெறமுடியவில்லை. அந்த எட்டில் ஒரு மாநிலம் தமிழ் நாடு.… Continue reading
