மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


May 2016

  • புதிய பொருளாதாரக் கொள்கை பற்றி லெனின் (1921)

    புதிய பொருளாதாரக் கொள்கை பற்றி லெனின் (1921)

    தொழில் துறையானது விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரசு வர்த்தகத்தை நடத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் விவசாயிகள் தங்களது தேவைகளை வர்த்தகத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். Continue reading

  • புதிய பொருளாதாரக் கொள்கை, சோவியத் செய்த முயற்சியும், இன்றைய உலகமய தாக்குதலும் ….

    புதிய பொருளாதாரக் கொள்கை, சோவியத் செய்த முயற்சியும், இன்றைய உலகமய தாக்குதலும் ….

    (1991 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்றபின் புதிய பொருளாதாரக் கொள்கை முன்வைக்கப்பட்டு அது தொடர்யது பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தப் பட்டுவருகிறது. அதனை நாம் எதிர்க்கும்போது 1921 இல் லெனின் சோவியத் யூனியனில் புதிய பொருளாதாரக் கொள்கையினை முன்வைக்கவில்லையா? என்று சிலர் எதிர்க் கேள்வி கேட்கின்றனர். அதனை விளக்கும் முயற்சிதான் இயதக் கட்டுரை) மனித குல வரலாற்றில் முதன்முறையாக உழைக்கும் வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை 1917இல் அன்றைய ருஷ்யாவில் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருந்த சுரண்டல் வர்க்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தப் புதிய… Continue reading

  • ‘‘லூயிஸ் போனபார்ட்டின் 18வது புருமையர்’’ வர்க்க சமூகங்களின் குணாம்சங்களும் மார்க்சின் கணிப்பும்!

    ‘‘லூயிஸ் போனபார்ட்டின் 18வது புருமையர்’’  வர்க்க சமூகங்களின் குணாம்சங்களும் மார்க்சின் கணிப்பும்!

    “1848ன் ஜுன் மாத நாட்களின் பேரெழுச்சி – பாரீஸ் பாட்டாளி வர்க்கம் நடத்திய அந்தப் பேரெழுச்சி ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது; ஆனால் பிரான்சில் அடுத்தடுத்து நடந்த தொடர் நிகழ்வுகளில் ஒரு பிசாசைப்போல அது துரத்திக் கொண்டே இருந்தது. இந்தப் பின்னணியில்தான் பிரான்ஸ் தன்னை ஒரு ஜனநாயகக் குடியரசு என்று அறிவித்துக் கொண்டது. Continue reading

  • சமநிலை இணையத்துக்கான போராட்டம் … (1)

    சமநிலை இணையத்துக்கான போராட்டம் … (1)

    சமீப காலத்தில் கூகிள், பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற அனைத்து நிறுவனங்களும் மூன்றாம் உலக நாடுகளில் இணைய இணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இதற்கு நற்பணி நோக்கம் அடிப்படையாகச் சொல்லப்பட்டாலும், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற காலனியக் குடியேற்றங்களிடமிருந்து வேறுபட்ட ஒன்றல்ல. Continue reading

  • ஒரு சரியான கொள்கை வழி மட்டும் போதாது- டிமிட்ரோவ் (1)

    ஒரு சரியான கொள்கை வழி மட்டும் போதாது- டிமிட்ரோவ் (1)

    தோழர்களே! கம்யூனிஸ்ட் அகிலத்திற்கும் அதன் பிரிவுகளுக்கும் அடிப்படையான விஷயம் ஒரு சரியான கொள்கை வழியை வகுப்பதாகும் என்பது தெளிவான ஒரு விஷயம். ஆனால் வர்க்கப் போராட்டத்தில் திட்டவட்டமான தலைமைக்கு ஒரு சரியான கொள்கை வழி மட்டும் போதாது. அதற்கு பல நிபந்தனை நிலைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகக் கீழ்க்கண்டவை முக்கிய மானதாகும். முதலாவது ஸ்தாபன (கட்சி அமைப்பு) உத்திரவாதங்கள்: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறையில் செயல்படுத்தப் படுவதற்கும் அதற்குக் குறுக்கே நிற்கும் இடையூறுகளை உறுதியாக நின்று சமாளித்து… Continue reading

  • பிசாசுகளின் நடனம் – ஆனந்த் டெல்டும்டே

    பிசாசுகளின் நடனம் – ஆனந்த் டெல்டும்டே

    (தமிழில் கி.ரமேஷ்) ஐம்பதாண்டுகளுக்கு முன் பாபாசாகேப் அம்பேத்கார் அரசியலமைப்புச் சட்டத்தைக் கைவிட்டார்.  அது ஒரு உபயோகமற்ற ஆவணம் என்று கண்டித்தார்.  இன்றோ, அம்பேத்காரை அரசியலமைப்புச் சட்ட ஆவணத்தின் சிற்பி என்று கொண்டாடிக்கொண்டே வலதுசாரிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் மெய்ப்பொருளை மிதித்துத் துவைத்துக் கொண்டிருக்கின்றன.  அவர் கைவிடும்போது கூறிய வார்த்தைகள் உண்மையாகிக் கொண்டிருக்கின்றன. பாபாசாகேப் அம்பேத்கார் ஒருமுறை கூறினார், “நாம் கடவுள் உள்ளே வருவதற்காக ஒரு கோவிலைக் கட்டினோம் . . . ஆனால் கடவுள் சிலை நிறுவப்படுவதற்கு முன்னால்… Continue reading

  • கேள்வி – பதில்: மே 2016

    கேள்வி: பெண் விடுதலை பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் வர்க்க போராட்டங்களின் பங்கு என்ன? பதில்: ஆண்களுடன் சேர்ந்து தோளோடு தோள் நின்று போராடி சமூகத்தை மாற்றுவது தான் பெண்களின் விடுதலையை உறுதி செய்யும். அதே சமயம், ஆண்களை விடவும் கூடுதலாக, பெண்கள் பாலின ஒடுக்குமுறைக்கும் சேர்த்தே ஆளாக்கப்படுகின்றனர். இவ்வாறான ஒடுக்குமுறையை வர்க்க ஒடுக்குமுறையின் மூலம் பாதிக்கப்பட்ட ஆண்களும் செயல்படுத்துகிறார்கள் என்பதையும் ஒருங்கே பார்க்க வேண்டி இருக்கிறது. இவ்வாறு இரட்டை ஒடுக்குமுறை நடப்பதைப் பார்க்கவேண்டுமென ரஷ்யப் புரட்சி… Continue reading