October 2015
-
வர்க்க நிலைமைகள் பற்றி மாவோ !

(மாவோ எழுதிய ‘சீன சமூகத்தில் வர்க்கங்களின் பகுப்பாய்வு ‘ என்ற கட்டுரையின் சாரம் - https://www.marxists.org/reference/archive/mao/selected-works/volume-1/mswv1_1.htm ) புரட்சிக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியே யார் நமது எதிரிகள்? யார் நமது நண்பர்கள்? என்பதாகும். சீனாவில் முந்தைய அனைத்துப் புரட்சிகரப் போராட்டங்களிலும் மிகச் சிறிய அளவே சாதிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கேற்ற உண்மையான நண்பர்களுடன் நம்மை ஒன்றிணைத்துக் கொள்ளத் தவறியதே ஆகும். (சீனாவில் அப்போதைய ஆளும் வர்க்கங்களாக நிலக்கிழார் வர்க்கமும், தரகு முதலாளி வர்க்கமும்… Continue reading
-
சின்னஞ்சிறு வியத்நாமின் சாதனைகள் …

மிகவும் குறுகிய காலத்தில், மனித வள குறியீடுகளின் அடிப்படையில் நோக்குகையில், வியத்நாம் சாதனை படைத்துள்ளது. பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. இருப்பினும், புரட்சி நடை பெற்று, மக்களின்அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, சோஷலிச சமுதாயத்தை படைக்கும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. Continue reading
-
மின்சாரத்துறை சீர்திருத்தங்களின் திவால் நிலைமை …

1991இல் ஒரிசாவில் புயல் ஏற்பட்டவுடன் ஒரிசா மின் வினியோக சீர்திருத்தங்கல் தோல்வியடைந்தன. அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஏ.இ.எஸ். புயல் தாக்கிய இடங்களில் மீண்டும் சரி செய்யும் கடமையிலிருந்து வெளியேறி விட்டது. Continue reading
-
புரட்சிப் பயணத்தில் கருத்து மோதல்கள் …

என்.குணசேகரன் பிப்ரவரியிலிருந்து அக்டோபர் புரட்சி வரை நிகழ்ந்த சம்பவங்கள், எந்த அளவில் முக்கியமானதோ, அதே அளவில் அப்போது வெடித்தெழுந்த கருத்து மோதல்களும் முக்கியமானவை. இந்தக் கருத்து மோதல்களின் ஊடாக, சரியான முடிவுகளும், சரியான பார்வைகளும் உருப்பெற்றன. லெனின் தலைமையில் நடந்த இந்த கருத்துப்போர் பாட்டாளி வர்க்கத்தை புரட்சிக்கு தயார் செய்தது. புரட்சியின் ஒவ்வொரு அசைவிலும் நடைபெற்ற இந்தக் கருத்துப்போர், பல புதிய கருத்தாங்கங்கள் உருவாக வழிவகுத்தது. இந்தக் கருத்தாக்கங்கள், ரஷ்ய நிலைமைகளை சார்ந்து உருவானவைதான். ஆனால் ரஷ்யப்… Continue reading
-
கேரள வரலாற்றில் தடம் பதித்த புன்னப்புரா வயலார் போராட்டம்…

25 அக்டோபர் அன்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். தடைகளைத் தாண்டி உழைக்கும் வர்க்கம் நடத்திய மாபெரும் போராட்டம் இது. கம்யூனிஸ்டுகளை இப்படி கொன்று குவித்தது,கம்யூனிச எதிர்ப்பாளர்களை கூட திவானுக்கு எதிராக திருப்பியது Continue reading
-
பண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம்

எம்.பாலாஜி உலகமயமாக்கலுக்கும், தாரளயமயமாக்கலுக்கும் ஆதரவான நிலைபாடு பண்பாட்டின் வழியாக மிகப்பெரிய அளவில் நுழைந்து சமூகச் சீரழிவை வேகப்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் நாம் இன்று வாழ்கிறோம். பண்பாடு, உலகமயமாக்கலின் முகமூடியாகவும் அதே நேரத்தில் அதன் வாளாகவும் செயல்படுகிறது. முதலில் அது மேலாதிக்கம் செலுத்தும் வகையிலும் இரண்டாவதாக அது பன்னாட்டு மூலதன விரிவாக்கத்திற்கு உதவிடும் வகையிலும் செயல்படுகிறது. மேலும், இதைப் புரிந்துகொள்வதற்கு பண்பாடு என்பது எந்தப் பொருளில் இங்கே குறிக்கப்படுகிறது? என்பதையும், மேலாதிக்கம் என்பதன் பொருள் என்ன? என்பதையும் புரிந்துகொள்ள… Continue reading
-
வங்கத்தில் நடந்துவரும் அரசியல் போராட்டம் …

மக்களையும், இடதுசாரிகளையும்இணைப்பதிலும், மதச்சார்பற்ற, ஜனநாயகப்போராட்டத்தில் இணைந்துள்ள கட்சிகளையும், மக்களையும் இணைப்பதிலும், அமைப்பை உருவாக்குவதிலும், உடனடியான எதிர்ப்புக்களை மட்டுமே நம்பியிருக்காமலும் இருப்பதை மிகவும் முக்கியமான பணியாக நாங்கள் கருதுகிறோம். Continue reading
-
பாரம்பரியத்தின் கட்டமைப்பு …

கலைகளைப் பொருத்தவரையில் பெண்கள் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்தார்கள் அல்லது அவர்கள் ஒரு தொழிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்தத் தொழில் சமுதாயக் கோட்பாடுகளுக்கு எதிரானது. இவர்கள் சமூகத்திற்கு அப்பாற்பட்ட தங்களுக்கே உரித்தான ஒரு சமூகத்தின் கருவை உருவாக்கிக் கொண்டார்கள். பெளத்த, சமணப் பெண் துறவிகளின் குழுக்கள் மேற்கூறிய தேவதாசிகளின் குழுக்களில் இருந்து மாறுபட்டவை. Continue reading
