மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


September 2015

  • தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 2

    தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 2

    அறிமுகம் இக்கட்டுரைத்தொடரின் முதல் பகுதி ஜூலை மாத தமிழ் மார்க்சிஸ்ட் இதழில் வெளிவந்தது. அதில் நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழக பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்தும், தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்டு வரும் கடந்த 25 ஆண்டுகளில் தமிழக வேளாண் வளர்ச்சி பற்றியும், மிக முக்கியமாக இந்த வளர்ச்சிப்போக்குகளின் வர்க்கத்தன்மை கிராமப்புறங்களில் எவ்வாறு இருந்துள்ளது என்பது பற்றியும் சுருக்கமாக எழுதியிருந்தோம். கட்டுரையின் இந்த மாதப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் தமிழக தொழில் துறை வளர்ச்சி பற்றியும் அதன் வர்க்கத்தன்மை… Continue reading

  • தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் !

    தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் !

    திராவிட இயக்கம் மற்றும் அதன் கருத்தியல் மரபை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து விவாதம் நடத்துவது தமிழக சமூக அரசியல் சூழலில் அவசியமான ஒன்றாகும். துவக்ககால சமூக நீதி இயக்கத்தின் ஜனநாயக மரபினை மீட்டெடுக்க வேண்டும், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளின் முதலாளித்துவ முகத்தையும், பிற்போக்கான சமூகப் பார்வையையும், சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். Continue reading

  • மரண தண்டனை மீதான ஆட்சேபனை …

    மரண தண்டனை மீதான ஆட்சேபனை …

    மரணதண்டனையின் மீது சோசலிசம் முன்வைக்கும் ஆட்சேபனை என்பது ‘சமூகப் பொறுப்பு’ (அதாவது ஒரு தனி நபரின் செயலானது, ஒவ்வொரு தனி நபருக்கும் அமைந்த சமூக நிலைமைகளினால் ஏற்படுகிறது – குற்றத்திற்கான தனிப் பொறுப்பை ஏற்கிறார் எனவே அவரின் உயிரை மட்டும் எடுப்பது சரியல்ல) என்ற வரையறைக்குள் நிற்பதல்ல அல்லது அது ‘மனித நேயத்தை’ (ஆயுதமற்ற எந்த உதவியுமற்ற ஒரு தனிமனிதனை ரத்தம் சொட்டச் சொட்ட படுகொலை செய்வது, அதுவும் ஒரு அரசே அதனை மேற்கொள்வது ‘குற்றவாளியின்’ நடவடிக்கையிலிருந்து… Continue reading

  • மார்க்சியத்தில் ‘புரட்சி’ என்பதற்கான விளக்கம் என்ன?

    மார்க்சியத்தில் ‘புரட்சி’ என்பதற்கான விளக்கம் என்ன?

    சமூகத்தின் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப – உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடையாத போது அது பஞ்சத்திலும், பற்றாக்குறையிலுமே முடியும். இந்த புறச் சூழலைப் பயன்பபடுத்திக் கொண்டு – ஆளும் வர்கங்களுக்கு எதிரான அரசியல் உணர்வுபெற்ற கலகங்கள் வெடிப்பதும், அதன் மூலம் அப்போதைய ஆளும் வர்க்கத்தை வீழ்த்தி புதிய வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்துவதே சமூகப் புரட்சியாகும். Continue reading

  • ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை காலவரிசையில் விளக்க முடியுமா?

    ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை காலவரிசையில் விளக்க முடியுமா?

    ரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சியில் நீண்டகாலம் இருந்தது. இரண்டாம் அலெக்சாண்டரின் காலத்தில் தொழில்மய நடவடிக்கைகள் தீவிரமாகின. அதே காலகட்டத்தில் முடியாட்சிக்கு எதிராக, அரசியல் அமைப்பில் மாற்றங்கள் வேண்டிய போராட்டங்கள் அதிகரித்து வந்தன. அப்போது, புனித பீட்டர்பெர்க் நகரத்தின் வீதிகளில், அதிதீவிர அரசு எதிர்ப்புக் குழுவின் குண்டுவீச்சில் ஜார் அலெக்சாண்டர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவருடைய மகன் மூன்றாம் அலெக்சாண்டருக்கு முடிசூட்டப்பட்டது. மூன்றாம் அலெக்சாண்டரின் ஆட்சி முன்னதை விடவும் பிற்போக்குத்தனமானதாக அமைந்தது. 1894 இல் – மூன்றாம் அலெக்சாண்டர்… Continue reading

  • தமிழகப் பல்கலைக்கழகங்கள் ,பிரச்சனைகளும், தீர்வுகளும்

    தமிழகப் பல்கலைக்கழகங்கள் ,பிரச்சனைகளும், தீர்வுகளும்

    ஒரு பல்கலைக்கழகத்தின் அடிப்படைத் தேவைகளான சிறந்த கற்றல், கற்பித்தல் முறைகள், நேர்மையான ஆராய்ச்சி நெறிகள், தூய்மையான நிர்வாகச் செயல்பாடுகள் இவைகள் எல்லாம் இன்றி தமிழகப் பல்கலைக்கழகங்கள் சீரழிந்து வருகின்றன. Continue reading