May 2015
-
கூலியுழைப்பும் மூலதனமும் …

அளவு கடந்த செல்வமுடைய ஒரு சிறு வர்க்கம், சொத்து ஏதுமற்ற கூலித் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு பெரிய வர்க்கம் எனச் சமுதாயம் பிளவுறுவதானது, இந்தச் சமுதாயத்தைத் தன்னுடைய தேவைக்கதிக உற்பத்தியில் தானே சிக்கி மூச்சுத் திணரும் நிலைக்குத் தள்ளியுள்ளது. Continue reading
-
ரஷ்யாவின் தனித்தன்மை …

1917 பிப்ரவரியில் நடந்த புரட்சி உண்மையில் முதலாளித்துவப் புரட்சி. அது நடந்த பிறகு, எட்டு மாதங்கள் கழித்து, அக்டோபரில் சோசலிப் புரட்சி நடந்தது. இந்த இரண்டு புரட்சிகளுக்கும் முன்னோடியாக ஒரு நிகழ்வு அமைந்தது. அது 19௦5-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய எழுச்சி. அது தோல்வியில் முடிந்தது. Continue reading
-
மார்க்சிஸ்ட் கட்சி துடிப்புடன் எழுச்சி பெற கட்டியம் கூறும் அரசியல் தீர்மானம்

இடதுசாரிகள் இந்தியாவுக்குப் பொருத்தப்பாடு அற்றவர்களாகி விட்டார்கள் என்று வண்டி வண்டியாக எழுதிக் களைத்தவர்களுக்கு, பொதுசெயலாளர் பொறுப்புக்குப் போட்டி என்று மாநாடு நடந்த அத்தனை நாட்களும் தினம் தினம் பேசி மகிழ்ந்தவர்களுக்கு மாநாட்டு விவாதங்களும், தீர்மானங்களும், ஏகமனதான தேர்வுகளுமே பதிலடியாக அமைந்து விட்டன. அரிவாளும் சுத்தியலும் தடுத்து நிறுத்தும் ! சமூக வலைத்தளங்கள் விடுவதாயில்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்கு இறுதிச்சடங்கு செய்யும் பொறுப்பு யெச்சூரிக்கு அளிக்கப் பட்டிருக்கிறது என்று ஒரு பதிவு; மூழ்கிக் கொண்டிருக்கும் டைட்டானிக் கப்பலுக்குக் கேப்டனாக யெச்சூரி… Continue reading
-
கிரீஸ் – சிரிசாவின்வெற்றிவிடுக்கும்செய்தி

ஐரோப்பிய அரசியல் களம் ஒரு புதிய நிகழ்வினை அரங்கேற்றியுள்ளது. ஜனவரி மாதம் நடந்த பொதுத் தேர்தலில் கிரீஸ் நாட்டு மக்கள் இடதுசாரி கண்ணோட்டம் கொண்ட சிரிசா என்ற அமைப்பினை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியுள்ளனர். நிதிமூலதனத்திற்கும் மக்களுக்கும் இடையே பல்வேறு வடிவங்களில் உலகின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் கிரீஸ் நாட்டு மக்கள் நிதிமூலதனத்தின் வலிமையினை எதிர்த்துப் போராடி அதன் அரசியல் ரீதியான தாக்குதலை சற்றே பின்னடைய செய்துள்ளனர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக… Continue reading
-
உடனடிப் போராட்டத்தின் களமாக இந்திய சுகாதாரம்

உலகத்திலுள்ள அனைத்து நாடுகளையும் விட மருந்துகளுக்கு அதிக விலை கொடுக்கும் நாடு இந்தியாதான் என்று அமெரிக்க செனட் உறுப்பினரான எஸ்டஸ் கோபர் தலைமையிலான கமிட்டி சுட்டிக்காட்டியும், இந்திய மக்கள் காலரா முதலான பல தொற்று நோய்களினால் செத்துமடிந்த போதும் தங்கள் மருந்துகளைத் தேவையான அளவு வழங்கவோ அவற்றின் விலைகளைக் குறைக்கவோ இப்பன்னாட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை. Continue reading
-
மார்க்ஸ் பற்றி எங்கல்ஸ் – லெனின் …

மார்க்ஸ் பற்றி எங்கல்ஸ் தனது காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு நிந்திக்கப்பட்டவர் மார்க்ஸ். வெறுக்கப்பட்டவர் மார்க்ஸ்.சர்வாதிகார அரசுகளும் குடியரசுகளும் ஒருசேர அவரை வெறூத்தனர், நாடு கடத்தினர், முதலாளி வர்க்கங்கள், அவை பிற்போக்காக இருந்தாலும், அதிதீவிர ஜனநாயகவாதியாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு மார்க்ஸ் மீது அவதூறுகளைப் பொழிந்தனர். இவற்றையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. தூசுகள் எனக் கருதினார்.மிகவும் அவசியம் எனக் கருதியபொழுது மட்டுமே பதில் அளித்தார். மேலும், அவர் இறக்கும் போழுது, சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிஃபோர்னியா வரை, அனைத்து… Continue reading
-
நெட் நியூட்ராலிட்டிக்கான போராட்டம் என்பது என்ன?

குறிப்பிட்ட தளங்கள் இலவசம் எனும் இந்த அறிவிப்பு – இணையத்தில் காணக் கிடைக்கும் பல லட்சக்கணக்கான தளங்களுக்கும் இடையே உள்ள சமநிலையை சிதைக்கிறது. இது ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தும் நிலையை உருவாக்கும். Continue reading
-
மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு – பாடத்திட்டங்களில் என்ன மாற்றங்களைச் செய்வார்கள்?
கேள்வி: அகிலன், ஈரோடு. பதில்: ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் பாஜக அரசுக்குமான உறவு தற்போது நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது தாங்கள் அறிந்ததே. மாநில அதிகாரத்துக்கு வந்தவுடனே இந்துத்துவத்திற்கு உதவி செய்திடும் மாற்றங்களை பாடத்திட்டத்தில் ஏற்படுத்திட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஈடுபடத் தொடங்கியது. கல்வியில், குறிப்பாக ஆரம்பக் கல்விக்கான பாடத்திட்டத்தில் அபத்தங்களையும், கற்பனையை வரலாறாக்கியுள்ளனர். பத்ரா என்றொரு அபத்தஜீவியின் வழிகாட்டுதலில், குஜராத் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் சில பத்திகளை வாசித்தால் அபத்தத்தின் அளவுகோல் புரியும். “இந்தியாவில் வாழ்ந்த ரிஷிகள் தங்கள் யோகக் கல்வியின்… Continue reading
-
ஆர்எஸ்எஸ் பயங்கரவாதம் – வெளிப்படும் கோர முகம்!

இஸ்லாமிக் ஸ்டேட் என்னும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில், பிரிட்டானியர்களும், ஜெர்மானியர்களும் சேருகின்றனர், என்ற செய்தியை ஊடகங்கள் தொடந்து வெளியிடுகின்றன. ஆனால் இந்துத்துவா பயங்கரவாதம் தன் பயங்கரவாதச் செயல்களுக்கு, ஆள்சேர்க்கும் நடவடிக்கைகளை செய்து வருகிறது, என்பதை எந்தவொரு மைய ஊடகமும், பெரிய செய்தியாக ஆக்கிடவில்லை. காரணம் இன்றைய அரசியல் சூழலில் இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு, பின்புலமாக அமைந்துள்ள இந்துத்துவக் கோட்பாட்டை பின்பற்றுவோர், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாகும். கேரவன் என்னும் ஆங்கில இதழின் ஆசிரியர்குழு உறுப்பினர், லீனா கீதா ரெங்கநாத் பயங்கரவாதச்… Continue reading
-
முறியடிக்க வேண்டிய ‘இந்துத்துவ’ நிகழ்ச்சிநிரல்!

ஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரம் என்றரால் என்ன? என்ற தலலைப்பில் தோழர். சீத்தாராம் யெச்சூரி மேற்கொண்ட ஆய்வு, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘மோடி அரசாங்கம்; வகுப்புவாதத்தின் புதிய அலை’ என்ற புத்தகத்தில் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. இந்துத்துவத்தை களத்தில் எதிர்கொண்டு முறியடிக்கும் பணியில் தோழர்களுக்கு உதவிடும் அந்த ஆய்வின் சுருக்கத் தழுவலை இங்கே வழங்குகிறோம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய ‘இந்துத்துவ’ சித்தாந்தம் இந்து மதத்தை மேம்படுத்தும் எந்த சேவையையும் செய்ததில்லை. மாறாக மத அடையாளத்தைக் கொண்டு தன்… Continue reading
