November 2014
-
வகுப்புவாத அரசியல்!

இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறிப் பிரச்சாரம் செய்து, மதக்கலவரத்தை உருவாக்கி மக்களை மதரீதியில் பிளவுபடுத்தி இந்துக்கள் மத்தியில் இந்துத்துவா பிரச்சாரத்தை கொண்டு செல்லும் ஆர்எஸ்எஸ்-ன் அடிப்படையான திட்டத்தை இன்று நாட்டின் பல பகுதிகளில் ஆர்எஸ்எஸ் நிறைவேற்றி வருகிறது. நமது கட்சி திட்டம் குறிப்பிடுவது போல் வகுப்புவாத நடைமுறை இங்கு பாசிசத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியே செயல்படுத்தப்படுகிறது Continue reading
-
தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுபடுத்துவோம், அவர்களின் வர்க்க உணர்வை மேம்படுத்துவோம்!

“தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ், இந்திய மக்கள், விடுதலையை எய்திட உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்ற முறையில், மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, சுரண்டப்படும் மக்கள் அனைவருக்கும் தலைமையேற்று முன்னேறிச் செல்லக்கூடிய விதத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க ஒற்றுமையையும், புரட்சிகர உணர்வையும், வலிமையையும் உயர்த்த வேண்டியது அவசியம்.” Continue reading
-
மகத்தான அக்டோபர் புரட்சி: மானுட வரலாற்றில் திருப்புமுனை

தனியாக, உடைமை அடிப்படையில், உற்பத்தியை நிர்வகிப்பதாக சொல்லிக் கொண்டு உழைப்பை சுரண்டும் முதலாளி வர்க்கம் அவசியம் இல்லை என்பதை மானுடத்திற்கு உணர்த்திய புரட்சி அக்டோபர் புரட்சி. எனவேதான் உலகளவில் முதலாளி வர்க்கம் அதனை பூண்டோடு அழிக்க முயன்றது, இன்றும் அந்த முயற்சி தொடர்கிறது. அது தோற்கும். அக்டோபர் புரட்சி விதைத்த சோசலிச கனவுகள் நனவாகும். Continue reading
-
சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விழுந்து எழும் ஆற்றல்!

1848ல் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தோடு கம்யூனிஸ்ட் இயக்கம் லன்டனில் பிறந்தது. அன்றிலிருந்து அதன் இயக்கமும் பரவலும் நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்றே இருந்து வருகிறது. உண்மையில் அது சர்ச்சைகளால், சர்ச்சைகளுக்கிடையே, சர்ச்சைகளின் வழியே, சர்ச்சைகளைத் தேடி வளர்கிற சமூக விஞ்ஞானம் ஆகும். அது திண்ணை வேதாந்தமல்ல. யாரோ ஒருவர் தவமிருந்து கண்டதல்ல. அது உழைப்பாளி மக்களின் நடைமுறைகளையும் கருத்தோட்டங்களையும் கூட்டு செயல்பாட்டையும் கொண்ட அனுபவ விஞ்ஞானமாகும். Continue reading
அரசியல், இயக்கவியல், என்ஜினியர்கள், ஐரோப்பிய கம்யூனிஸ்டு கட்சி, குடும்ப உறவு, சமூக வாழ்வு, சீன கம்யூனிஸ்ட் கட்சி, சொத்துடைமை, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்), நேரு, பேராசிரியர்கள், பொருள் உற்பத்திகள், மருத்துவர்கள், மார்க்சிசம், மார்க்ஸ், மாவோ, முதலாளித்துவம், வலது திரிபு, விஞ்ஞானிகள், வியட்நாம் கம்யூனிஸ்ட் இயக்கம், விவசாயி, ஸ்ரீபெரும்புதூர், Leninism, Mao Tse-tung, Marxism, Marxism-Leninism
