மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


March 2012

  • இன்று…இப்போது…என்ன செய்வது? நூல் விமர்சனம்

        புதிய ஜீவா  எழுதிய”இன்று…இப்போது… என்ன செய்வது”? என்ற நூல் ஒரு புதிய முயற்சி. ஒரு பெரிய தொழிற்சாலையில் பன்னிரெண்டு ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நெருக்கமாக இருந்து பார்த்த அனுபவ அடிப்படையில் தொழிற்சங்கத்தின் இன்றியமையாமையையும், அது சந்திக்கும் சவால்களைத்தீர்ப்பதற்கான அணுகுமுறைகளையும், முன்மொழிவுகளையும் ஆலோசனைகளாக முன்வைக்கிறார். நூலின் முன்பாதியில் சென்னை போன்ற பெருநகரங் களில் தொழிற்சங்கம் சந்திக்கும் பிரச்சனை களைப் பற்றி விவரிக்கிறார். பின்பாதியில் வேக மாக உலக மயம் அமலாகும் இன்றைய கால கட்டத்தில் தொழிற்சங்கம்… Continue reading

  • பசுமையான புதிய ஒப்பந்தம்

        உலகளவில் முதலாளித்துவம் மிகப்பெரிய அளவில் சரிவுகளை சந்தித்து வருகிறது. உலக வங்கி, சர்வதேச நீதி அமைப்புகள், அமெரிக் காவின் பொருளாதார அமைப்புகள் கடுமை யான பொருளாதார முயற்சிகளை மேற் கொண்டும் நிலைமை கட்டுப்படுத்த அல்லது சரிவுகளை சீர் செய்ய முடியவில்லை. கடுமை யான நிதிநிலை மானிய வெட்டுகள், நலத் திட் டங்கள் குறைப்பு, பொதுத்துறை நிறுவன விற் பனை, நிதி நிறுவனங்களில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி போன்ற முதலாளித்துவ பொரு ளாதார நடவடிக்கைகள் மேலும்… Continue reading

  • கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் – மார்ச் 14

      பிரிட்டிஷாரால் இந்தியா மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொடுமைஎன்பது இதுவரை இந்தியா சந்தித்த துன்ப துயரங் களையெல்லாம் விட அடிப்படையில் வேறுபட்டதும் மிகக் கூடுதல் கடுமையானதும் ஆகும்.. இந்திய சமூகத்தின் முழு கட்டமைப்பையும் இங்கிலாந்து தகர்த்துவிட்டது. கட்டமைப்பின் மறு உருவாக்கத்திற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.  பழைய உலகம் அழிக்கப்பட்டு எந்த ஒரு புதிய உலகமும்கிடைக்க வில்லை என்ற நிலை இந்திய மக்களுக்கு பெரும் சோகமாய் அமைந் துள்ளது. பிரிட்டனால் ஆளப்படும் இந்தியா தனது பெரும் பழமை வாய்ந்த பாரம்பரியத்திலிருந்தும்… Continue reading

  • “மகாத்மாவும் – அவரது இசமும்” நூலில் தோழர் இ. எம்.எஸ்.

    காந்தியிசத்தின் வெற்றி எது? தோல்வி எது? “காந்தியின் தலைமையில் சுதந்திரத்தை வென்றுவிட்டோம் என்று கோடிக்கணக்கானவர்கள் மகிழ்ந்த தருணம் அது.ஆனால் காந்தியோ, மனிதர்களின் நல்லியல்புகளைப் புத்துயிர்ப்பு செய்வதென்ற தனது லட்சியம் தோற்று விட்டது .என்று கருத்து தெரிவித்தார். பிரிட்டிஷ்காரர் களுக்கு எதிரான போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் உத்தியாகவும், தந்திர மாகவும் காந்தியிசம் வெற்றி பெற்றது. ஆனால் மனித இயல்பு களைப் புத்துயிர் பெறச் செய்யும் புதிய முறை, புதிய சமூகச் சித்தாந்தம் என்கிற வகையில் காந்தியிசம் முழுத்… Continue reading

  • ஏ.கே. கோபாலன் வாழ்க்கையில் காந்தியிசம்

        நான் சோவியத் யூனியனுக்கு வந்து சுமார் எட்டு மாதங்களாகின்றன. உடனடியாக தாயகம் திரும்ப வேண்டுமென்று கட்சி தந்தியடித் திருந்தது. ஆயினும் திரும்புவதற்கு முன் சில இடங்களைக்கூட பார்க்க வேண்டுமென் றெண்ணினேன். ருஷ்யாவின் மிகப்பழமை வாய்ந்த பஞ்சாலை ஒன்றைப் பார்க்கச் சென் றேன். அன்று அதற்கு 145 வருடத்திய பழக்கம் இருந்து வந்தது. அக்டோபர் புரட்சியில் உயிர் நீத்த தொழிலாளிகளின் நினைவுச் சின்னத்தைத் தான் அந்த பஞ்சாலைக்குள் புகும்பொழுது நாம் முதல் முதலாகப் பார்ப்பது, அந்தச்… Continue reading

  • அரசின் கொள்கை மாற்றங்களில் நீதிமன்ற தலையீடு அவசியம்

    இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கோட் பாடுகளையும் அது மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் இதற்கேற்ப வகுக்கப்பட்டுள்ள அரசின் நெறிமுறைப் படுத்தும் கோட்பாடுகளையும் இவைகள் மீதான இந்திய நீதிமன்றங்களின் கடந்தகால பங்களிப் பையும், புரிந்துகொள்வதுடன் இதில் இன்று உலகமயம்-தனியார்மயம்- கொள்கைகள் ஏற் படுத்தி வரும் மாறுதல்களையும் இதற்கேற்ப மாறிவரும் நீதிமன்றங்களின் நிலைபாடுகளையும் புரிந்து கொள்வதே, நீதிமன்ற நடவடிக்கைகளில் சந்தை நலனை புறந்தள்ளி மக்கள் நலனை முன்னிலைப்படுத்த உதவும். இதுவே இந்திய நீதிமன்றங்களின் வரலாற்றிற்கு பலம் சேர்க்கும். Continue reading

  • நினைவில் வாழும் தோழர் ஸ்டாலின்

    அவருடைய நினைவுநாளில் அனைத்தையும் பரிசீலித்துத்தான் நாம் நமது கருத்தினை உரு வாக்கிக்கொள்கிறோம். சாதனைகள் தவறுகளை விஞ்சி நிற்கின்றன என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தில் நமக்கு முழு உடன்பாடு உண்டு. Continue reading

  • திருப்புமுனையில் உலகம் உலகமயமாக்கலின் நெருக்கடி (3)

    முதலாளித்துவ அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி அதன் இயல்பிலிருந்து பிறழ்ந்து ஏற்பட்டதல்ல. இந்நெருக்கடி முத லாளித்துவ பொருளாதார மற்றும் சமூக அமைப் பின் இயல்பிலிருந்தே தோன்றியதாகும். முத லாளித்துவ பொருளாதாரத்தில் கிராக்கி என்பது ஒரு தொடர் பிரச்சினையாகும். பேரா சிரியர் பிரபாத் பட்னாயக் சுட்டிக்காட்டியபடி, முதலாளித்துவம் என்பது இயல்பிலேயே கிராக்கியின் தொய்வால் கட்டுண்ட அமைப் பாகும்.  இதனால் மிக விரைவாக வளரும் உற்பத்தி சக்திக்கும், மந்தமாக வளரும் நுகர்வு சக்திக்கும் இடையே எப்போதும் ஒரு இழுபறி இருந்து… Continue reading