September 2006
-
இலங்கைப் பிரச்சனை – ஒரு பார்வை
இலங்கையில் எல்டிடிஈ-யினருக்கும், இலங்கை ராணுவத்திற்கும் ஆயுத மோதல் துவங்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இரண்டு பக்கமும் பல்லாயிரம் உயிர்கள் பலிவாங்கப்பட்டு விட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு பொருள் சேதம் நடந்துவிட்டது. இத்துடன் கடந்த சில ஆண்டுகளாக நார்வே தலைமையிலான சர்வ தேசக் குழுவின் முன்னிலையில் பேச்சு வார்த்தைகளும் நடந்துவிட்டது. எனினும் தீர்வு காணப்பட வில்லையே ஏன் என்ற கேள்வி எழத்தான் செய்யும். Continue reading
-
தமிழக விவசாய மறுமலர்ச்சி, தரிசு நிலத் திட்டம்!
இன்று ஏழை நிலமில்லா மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த புதிய தமிழக அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளது. இந்த முடிவினை அதன் தோழமைக் கட்சிகளும், தமிழக மக்களும் வரவேற்றுள்ளன. இத்திட்டம் சிறந்த, நெறிய முறையில் நிறைவேற்றப்படுமானால், தமிழகம் விவசாயத் துறையில் புத்தொளி பெறுவது திண்ணம். Continue reading
-
நஞ்சு கலந்த வரலாற்றுத் திருத்தங்கள் – ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்
நாட்டு மக்களே! வரலாற்றிலிருந்து நாம் நழுவ இயலாது இப்படிச் சொன்னவர் ஆப்ரஹாம் லிங்கன். ஆனால் நழுவுதல் என்னவோ நடந்து கொண்டு தான் இருக்கிறது. வரலாறு மறைக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் அல்லது திருத்தப்படுவதும் அந்த நழுவுதலின் சில வடிவங்கள் ஆகும். அத்தகைய முயற்சிகளுக்கு தற்போது புதிய வேகம் கிடைத்திருக்கின்றது. இந்தச் சூழலில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மையங்கள் பல்வேறு வடிவங்களில் உருவாவதையும் காண்கிறோம். Continue reading
அடிமைத்தனம், ஆப்ரஹாம் லிங்கன், ஈராக், ஊழல், ஏழ்மை, கரீபியன், காலனி ஆதிக்கம், கியூபா, கொத்தடிமை, கொலம்பியா, கோஸ்டாரிகா, சுரண்டல், சூறையாடல், டொமினிகன் குடியரசு, தி கார்டியன், நிகரகுவா, நில அபகரிப்பு, பஞ்சம், பனாமா, பி.பி.சி, பிலிப்பைன்ஸ், புஷ், பெரு, மெக்ஸிகோ, யுத்தம், ஹைதி, ஹோண்டுராஸ், Charter Movement, Howard Zinn -
வெல்வதற்கோர் பொன்னுலகம்!

சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப் பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகர பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் – இவையாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவோடும், ஒளிச்சுடரோடும் எடுத் துரைக்கிறது. மாமேதை லெனின் அவர்கள் மார்க்சும், ஏங்கல்சும் எழுதிய கம்யூனிஸ்ட்… Continue reading
-
இலங்கைப் பிரச்சனையும் இன்றைய உலக அரசியலும் ..
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துயரம், பாலஸ்தீனமா, இலங்கையா, காங்கோ, சூடான், உகாண்டா போன்ற ஆப்பிரிக்கக் கண்ட நாடுகளா? என்று கேட்டால், யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பண்பாட்டு பார்வை கொண்டவன் பதில் சொல்லத் திணறுவான். Continue reading
-
சிருஷ்டி வரலாறு!
இன்றைய உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டதென்றும், இவ்வுலகிலுள்ள பொருட்கள் எவ்வாறு உற்பத்தியாயிற்று என்பதைக் குறித்தும் இன்று மக்களுள் பலவிதமான அபிப்பிராய பேதங்கள் நிலவி வருகின்றன. இவற்றுள் இரண்டு விதமான அபிப்பிராய பேதங்கள் குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டில் ஒன்று, சென்ற பல ஆண்டுகளாக மக்களால் நம்பி அனுசரிக்கப்பட்டு வந்ததும், உலகிலுள்ள பல மதத்தின் கொள்கைகளைத் தழுவி அனுசரித்து வந்ததும், பைபிளின் ஆதியாகமத்தில் குறிப்பிட்டுள்ளதுமான உலக சிருஷ்டி கதையாகும். Continue reading
