October 2006
-
தூணிலும் இருப்பாரா?
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று பிரகலாதன் சரித்திரமொன்றைக் கட்டி விட்டார்கள். இது சர்வ வியாபி என்ற கடவுளின் லட்சணத்தைக் குறிக்கும் கதையாகும். வான நூலின் படி பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ளவை தூசும், தும்புமே. இதனைக் கடவுளென்பதில் அர்த்தமில்லை. ஆதலின், கண்டவரையில், கடவுள் சர்வ வியாபி என்று சொல்ல யாதொரு நியாயமுமில்லை. வேதாந்திகள் சொல்லும் சத்து, சித்து, ஆனந்தமும் பிரபஞ்சத்தில் காணோம். Continue reading
-
மீட்சியுற்ற அணி சேரா இயக்கம்!

உலக அரசியலில் ராணுவக் கூட்டுக்களை வைத்து தலையீடு செய்யும் ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிராக கூட்டுச் சேரா இயக்கம் பிறந்தது. பல காரணங்களால் அணி சேரா நாடுகளின் இயக்கம் படுத்த படுக்கையானது. இப்பொழுது நாம் (NAM) என்று அழைக்கப்படும் இயக்கம் முன்னைவிட பலத்தோடும், எழுச்சியோடும் மீட்சியுற்று ஏழை நாடுகளின் பாதுகாவலனாக நிமிர்ந்து நிற்கிறது. Continue reading
-
அநாகரிகப் பொருளாதாரத்தின் அதிரடித் தாக்குதல்..
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நவீன முதலாளித்துவ அமைப்பு முறையை மிகவும் கவனமாக கார்ல் மார்க்ஸ் ஆய்வு செய்துள்ளார். முதலாளித்துவ அமைப்பு முறையின் தரம் தாழ்ந்த பண்பைப் புரிந்து கொண்ட அவர் – அதற்கு அநாகரிகப் பொருளாதாரம் என்று பெயர் சூட்டினார். அந்த அநாகரிகப் பொருளாதார அமைப்பு முறையால் மீண்டும் மூழ்கடிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் இந்தியா இருக்கிறது. Continue reading
-
ஆவிகளின் நடமாட்டம் – ஒரு விஞ்ஞான ஆய்வு
பிரிட்டன் நாட்டைச் சார்ந்த தகவல் தொழில் நுட்ப நிபுணர் விக்டாண்டி ஆவிகளின் நடமாட்டம் பற்றி ஒரு விஞ்ஞான விளக்கத்தை ஒரு பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். Continue reading
-
பாட்டாளி வர்க்கத்திற்கு புதிய குரல் கொடுக்கும் – ஒரு புதினம் – சுரங்கம்

கு.சி.பா என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் கு.சின்னப்ப பாரதியின் பேனாவிலிருந்து ஒரு கதை பிறக்கிறது என்றால் அது நிச்சயம் பாட்டாளி வர்க்கத்தின் குரலோடுதான் பிறக்கும். அவரது தாகம் முதல் அண்மையில் வெளிவந்த சுரங்கம் வரை பாட்டாளி வர்க்கத்தின் போர்க்குண முத்திரை பதிந்திருப்பதை படிப்போர் உணர்வர். Continue reading
-
கம்யூனிசக் கொடியின் கீழ்…

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் தனி வார்ப்புகள்: தனித் தாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள்; உலகப் பாட்டாளி வர்க்கப் படையின் நேர்நிகரற்ற போர்த்தந்திரியான தோழர் லெனின் அணியில் அங்கத்தினர்கள். இந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதைவிட சிறந்த பெருமை எங்களுக்கு வேறெதுவும் இல்லை. தோழர் லெனினினால் அமைக்கப் பெற்று, அவரது தலைமையில் இயங்கிய கட்சியில், இயக்கிய கட்சியில் உறுப்பினர் என்பதைவிட சிறந்த பெருமை வேறொன்றும் இல்லை. Continue reading
-
மருளா? மயக்கமா?
5.10.2006 -ம் தேதியிட்ட தினத்தந்தியில் தேர்தலில் வெற்றி பெற பில்லி சூன்யம் வைத்ததாகச் செய்தி வந்துள்ளது. விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியும், நம்மூர் பக்கம் அந்த ஞானம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை என்பதை இச்செய்தி நமக்கு உணர்த்துகிறது. போன நூற்றாண்டில் இந்த மூட நம்பிக்கையை எதிர்த்து முதலில் போர்க் கொடி உயர்த்தியவர் சிங்காரவேலர். அரது கட்டுரையை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். Continue reading
-
கம்யூனிஸ்ட்டுகளும் – கருத்துப் போராட்டமும்!
கம்யூனிஸ்ட் இயக்கமும் அதன் தலைமையிலான வெகுஜன இயக்கங்களும், ஆளும் வர்க்கம் கொடுக்கக் கூடிய பலதரப்பட்ட தாக்குதல்களையும், இன்னல்களையும் எதிர் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகிறது. மேலும், முன்னேறவே செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்த முன்னேற்றத்திற்கான, அடைந்த வெற்றிகளுக்கான பல்வேறு காரணங்களை இங்கு விளக்க தேவையில்லை. சுருங்கக் கூறின், இடைவிடாத முறையில் பரந்து கிடக்கும் மக்களைத் திரட்டுவது, அவர்களை ஸ்தாபன ரீதியாக ஒன்றுபடுத்தவது, அவர்களின் அரசியல் உணர்வை மேலும், மேலும் வளர்த்து ஒரு மகத்தான மக்கள் சக்தியை தொடர்ந்து… Continue reading
