June 2021
-
அறிவியல், வரலாறு மற்றும் சமூகம்
பிரபிர் புர்காயஸ்தா தமிழில். மோசஸ் பிரபு இயக்கவியல் பொருள்முதல்வாத பார்வையானது 1) ஒரு உலகப்பார்வையை 2) இயற்கையையும் சமூகத்தையும் ஆய்வு செய்வதற்கான வழிமுறையை 3) அறிவியலின் தத்துவத்தை நமக்கு வழங்கியிருப்பதை நாம் அறிந்துவைத்துள்ளோம். இயக்கவியலானது, அறிவியலின் தத்துவமாக மட்டுமே அறிவியலுக்கு வெளியே நின்றுகொண்டு தன் விதிகளின் மூலமாக அதனை வழிநடத்தவில்லை. அதன் வழிமுறையானது, கண்டுபிடிப்புச் செயல்களில் உதவுகிறது. இயற்கையின் விதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கண்டு உணர உதவுகிறது. மார்க்ஸ், இயக்கவியலின் விதிகளை பொருளாதாரத்திற்கு பொருத்தி தன்… Continue reading
-
திமுக ஆட்சியும் இடதுசாரிகளின் பணியும்
எஸ். கண்ணன் இந்திய நிர்வாகத்தில் தன்னாட்சி அமைப்புகளாக இருந்துவந்த நீதித்துறை, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ, வரலாற்று ஆய்வு உள்ளிட்டவைகளை வகுப்புவாத அபாயம் நிறைந்த இந்துத்துவா அமைப்புகளின் கைப்பாவையாக இயக்கும் பணியை பாஜக ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா என்பதை மறந்து, சர்வ அதிகாரம் கொண்ட அரசாக மத்திய பாஜக ஆட்சி தன்னை முன்னிறுத்துவதை காணமுடிகிறது. இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மாநிலங்களுக்கான உரிமைகளை அபகரிக்கும் அனைத்து பணிகளிலும் ஆர்.எஸ்.எஸ் கொள்கை அமலாக்கம் என்ற முறையில்… Continue reading
-
தோழர் ஆர்.பி.முரே : ஒடுக்குமுறைகளுக்கு எதிரான புரட்சிகரக் குரல்
சுபாஷிணி அலி மே 12ஆம் தேதி தோழர் ஆர்பி முரேயின் நினைவுதினம். 1972இல் அவர் இறந்த போது மகாராஷ்டிரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தார். அப்போது அவருக்கு நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மட்டுமல்லாது, அம்பேத்கரிய இயக்கத்தின் தலைவர்கள் ஞான்ஷியாம் தல்வாட்கர், பாஸ்கர் கேத்ரேகர் மற்றும் பலரும் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் மகன் யஷ்வந்த்ராவ் அம்பேத்கர் அவர்கள் தலைமை தாங்கினார். அம்பேத்கரியர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையிலான… Continue reading
-
மார்க்சீய -லெனினியத்தில் தத்துவமும் நடைமுறையும்: சில குறிப்புகள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் கார்ல் மார்க்சும் எங்கெல்சும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கிய மார்க்சீயத்தை மேலும் செழுமைப்படுத்தி, சமகாலப்படுத்தினார் தோழர் லெனின். மார்க்சீயம் சமகாலத்தில் மார்க்சீய- லெனினியமாகவே பொது உடமை இயக்கத்தில் கருதப்படுகிறது. பொது உடமை இயக்கங்களை நிராகரிக்கும் பல ஆய்வாளர்களும் அறிவுஜீவிகளும் மார்க்சீயத்தையும் லெனினியத்தையும் வேறுபடுத்திப் பார்க்கின்றனர். இவர்களில் சிலர் மார்க்சீயத்தை அங்கீகரிப்பதாகவும், ஆனால் லெனினியத்தை நிராகரிப்பதாகவும் பிரகடனம் செய்கின்றனர். வேறு சிலர், லெனினியம் என்பது ஜார் கால ரஷ்யாவிற்கு, அன்று நிலவிய சர்வாதிகார ஆட்சியை… Continue reading
-
களப் பலியாகும் கூட்டாட்சி தத்துவம்
வீ.பா.கணேசன் வணிகம் செய்வதென்ற பெயரில் இந்தியக் கடற்கரையில் வந்திறங்கி, படிப்படியாக நாட்டை கபளீகரம் செய்த பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகள் பல்வேறு மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட, ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வான வளர்ச்சி நிலையைக் கொண்டிருந்த, இந்தியாவை தங்கள் பிடிக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையை எட்டுவதற்கு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆயிற்று. இந்த அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டங்கள் வேலூர் கோட்டையில் நடைபெற்ற கலகத்திலிருந்து தொடங்கி சிப்பாய் எழுச்சி வரை ஆங்காங்கே தன்னெழுச்சியாக நடைபெற்றன. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ்… Continue reading
-
தோழர் மைதிலி சிவராமன்: அர்ப்பணிப்பு மிக்க புரட்சியாளர்
வெங்கடேஷ் ஆத்ரேயா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் மைதிலி சிவராமன் 2021 மே 30 அன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தின் மூலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனநாயக இயக்கமும் வர்க்க சுரண்டல், சாதிய ஒடுக்குமுறை, மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகிய கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வந்த ஓர் அர்ப்பணிப்புமிக்க போராளியை இழந்திருக்கின்றனர். மைதிலி சிவராமன் ஜனநாயக இயக்கத்தில் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சிறப்புற செயல்பட்டு வந்தார். குறிப்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர்… Continue reading
-
தோழர் மைதிலி : மார்க்சிய அறிவாற்றலுடன் இயங்கிய களப்போராளி
என். குணசேகரன் 1990ஆம் ஆண்டின் துவக்கத்தில் சென்னையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவராக தோழர் மைதிலி சிவராமன் பொறுப்பேற்று செயலாற்றினார். மாநாட்டில் தோழர் மைதிலி சிவராமன் ஆற்றவேண்டிய வரவேற்புரை வழக்கமாக பேசப்படுகிற வரவேற்புரையாக இல்லாமல், மாணவர் இயக்கத்தின் முக்கியத்துவத்தை குறிப்பதாகவும், மாணவர் இயக்க வரலாறு பற்றியதாகவும் அமையவேண்டும் என்று கேட்டிருந்தோம். குறிப்பாக சென்னை நகர மாணவர் இயக்க வரலாறு சுருக்கமாக இடம் பெறவேண்டும் என்றும் கேட்டிருந்தோம். அவர் அந்த உரைக்காக… Continue reading
-
கியூபா: புரட்சியைப் பாதுகாக்கும் புதிய தலைமுறை
மிகுவேல் டியாஸ் கேனல் இவ்வாறு பேசினார், “கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை இரண்டே வரிகளில் சுருங்கக் கூறுவதானால், ‘மக்களும் ஒற்றுமையும்’ எனலாம். அதனால்தான் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் கட்சியாக இருந்ததே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது… பெரும் அநீதியும், ஏற்றத்தாழ்வும் நிலவிய நாட்டின் நிலைமையை மாற்றியமைக்க விரும்பிய மனித நேயசக்திகளின் அனைவரின் ஒற்றுமையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. ஒரு கட்சியின் உறுதிப்பாடு என்பது நாட்டின் சக்தியை வளர்ச்சியை நோக்கி திரட்டி செலுத்தும் தன்மையே ஆகும். Continue reading
-
இந்தியாவின் தொடரும் வேளாண் கிளர்ச்சி: மார்க்சீய புரிதலை நோக்கி
மாநில நிலைமைகளுக்கு ஏற்றவாறு, விவசாயத் தொழிலாளர்கள் அமைப்பு மட்டுமின்றி அனைத்து கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளுக்கான அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். விவசாய தொழிலாளர் சங்கம், ஊரக தொழிலாளர் சங்கம், விவசாய சங்கம் ஆகியவை இணைந்து பொது பிரச்சினைகளின் மீது ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்த வேண்டும். இது கிராமப்புற செல்வந்தர் வர்க்கத்தை எதிர்கொள்ள மிகவும் அவசியம். Continue reading
-
ஜே.டி. பெர்னலின் வரலாற்றில் அறிவியல் ஒரு பின்னணி
ஆங்கிலப் புத்தகத்தைப் படிப்பதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு பேராசிரியர் முருகன் அவர்களின் இந்தப் புத்தகம் அரிய வாய்ப்பாகும். புத்தகத்தின் முக்கிய அம்சங்களை எளியமுறையில், புரிந்துகொள்ளக்கூடிய வகையில், உள்ளூர் உதாரணங்களோடு விளக்கி இருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பாகும். ஒரு நாடகத்தின் கட்டியங்காரனாக மட்டுமல்ல; புத்தகத்தின் தாக்கங்களையும் முருகன் அவர்கள் மிகச்சிறப்பான முறையில், வாசிப்பதற்கு எவ்வித தடையுமின்றி கொடுத்திருப்பது மேலும் சிறப்பாகும். Continue reading
