மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


October 2020

  • கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்துப் போராட்டங்கள் : தோற்றமும், இயக்கத்தின் மீதான தாக்கமும்

    1957 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் இரட்டிப்பானது, இரண்டாவது மிகப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்தது. கேரளாவில் பெரும்பான்மையை வென்றது. தேர்தலுக்கு பின், கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க்கி “வெகுஜன கட்சியாக” கட்டமைக்க மத்தியக்குழு அழைப்பு விடுத்தது. அமிர்தசரஸ் நகரில் கட்சியின் ஐந்தாவது “சிறப்பு” மாநாடு 1958 ஏப்ரல் 6 முதல் 13 வரை நடைபெற்றது. “திரிபுவாத, பிரிவினைவாத போக்கிற்கு எதிராக போராடி, இந்திய நிலையை கருத்தில் கொண்டு, மார்க்சிய – லெனினியத்தை பொருத்தி, திட்டங்களை வகுக்க”… Continue reading

  • இந்திய தொழில் வளர்ச்சியும், கம்யூனிஸ்ட்டுகளும்

    1952 ல் தேர்வு செய்யப் பட்ட நாடாளுமன்றவுறுப்பினர்களில் கம்யூனிஸ்ட்டுகள் இரண்டாவது இடத்தில் இருந்தனர். இதை இந்திய வளர்ச்சிக்கான ஆக்கப் பூர்வமான பங்களிப்பு செய்யவும் பயன்படுத்தினர். அதில் மிக முக்கியமானவை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், மின்சார தயாரிப்பு மற்றும் இரும்பு உருக்காலை, சேலத்தில் அமைப்பது ஆகியவை முக்கியமானதாகும். இதில் பி. ராமமூர்த்தி முக்கிய பங்களிப்பு செய்தார். திருச்சியில் பெல் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலைகள் அமைவதில் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பின் மூலம் அனந்த நம்பியார் நிறைவேற்றினார். Continue reading

  • கம்யூனிஸ்ட் இயக்கம்: நூறாண்டுகள் கடக்கும் போராட்ட வரலாறு!

    ஜி. ராமகிருஷ்ணன் “இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்தக் கட்டுரை கடந்த 100 ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார தளங்களில் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்களை, தமிழ்நாட்டை மையப்படுத்தி விவரிக்க முயல்கிறது. உலகைக் குலுக்கிய ரஷ்ய புரட்சி 1917 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அக்காலகட்டத்தில் கல்கத்தாவிலிருந்து வெளியாகி வந்த ஒரு நாளிதழ் “ஜார்ஆட்சியின் வீழ்ச்சி இந்தியாவிலும் அந்நிய… Continue reading

  • நூற்றாண்டு கண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது என்ன?

    கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் உள்ள சாத்தியங்களையும், வாய்ப்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்திரமோ, கசப்புணர்வோ உதவாது. திறந்த மனதுடன் சாத்தியங்களை ஆய்வு செய்வதன் வழியாகவே கம்யூனிஸ்டுகள் முன்னேற முடியும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, இந்திய மக்கள் நலன்களை பாதுகாக்க மிக மிக அவசியமாகும். நாடு, அநாகரீக நிலைமைக்கு பின் தள்ளப்படாமல் தடுப்பதில், கம்யூனிஸ்டுகள் தங்கள் கடமையை வீரியமாக ஆற்றிட வேண்டும். Continue reading

  • பன்முக தளங்களில் செயல்பட்ட தோழர் டி.இலட்சுமணன்

    தோழர் DL மார்க்சிஸ்ட் இதழின் ஆசிரியர் குழுவில் நீண்ட காலம் பணியாற்றினார்..அடிப்படை மார்க்சியம், சாதியம், வகுப்புவாதம் என பல தலைப்புக்களில் எளிமையான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தோழர் DL மறைவு மார்க்சிய இயக்கத்திற்கும் மக்கள் இயக்கங்களுக்கும் பேரிழப்பு. Continue reading

  • பிரடெரிக் எங்கெல்ஸ் : மார்க்சியத்தை இணைந்து நிர்மாணித்தவர்

    சீத்தாராம்யெச்சூரி (பிரடெரிக் எங்கெல்ஸின் 200 வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் பாரதி புத்தகாலயம்முன்னெடுக்கும் சிவப்பு புத்தக தினத்திற்காக (நவம்பர் 28, 2020) கம்யூனிசத்தின்கோட்பாடுகள்நூலின் புதிய தமிழ் பதிப்பினை வெளியிட்டு தோழர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை மற்றும் குறிப்பில் இருந்து) பிரெடெரிக் எங்கெல்ஸ் உலகத்தின் முதல் மார்க்சியவாதி என அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. ஒருவேளை எங்கெல்ஸ் இதனை பெருமையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆனாலும், இவ்வாறு முதல் மார்க்சியவாதி என குறிப்பிடுவது, அவரை மார்க்சிற்கு இளைய பங்காளியாக பார்ப்பதாகிறது. இது முற்றிலும் நியாயமற்றதாகும். “மார்க்ஸ்… Continue reading

  • இன்றைக்கும் வெளிச்சம் தரும் வள்ளலார் ஏற்றிய விளக்கு

    நான்கு வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட பழய சமூக அமைப்பை இந்த நவீன யுகத்திலும் கைவிட ஆர்எஸ்எஸ் பரிவாரம் தயாராக இல்லை. மதச்சார்பற்ற, அரசியல் சட்டத்தின் இடத்தில் மநு நூலை வைக்கத் துடிக்கின்றனர். வரலாற்றுச் சக்கரத்தை பின்னுக்குத் தள்ளி வேதகாலத்திற்கு கொண்டு போய் விட முடியுமா என்று முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ‘நான்கு வர்ணங்களும் நால்வகை ஆசிரமங்களும் ஆசாரங்களும் இவை சொன்ன சாத்திர சரிதங்களும்’ வெறும் பிள்ளை விளையாட்டு என்று எள்ளி நகையாடியவர் 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில்… Continue reading

  • எங்கெல்ஸ் 200: இணையவழி தொடர் உரைகள் – நிகழ்ச்சிநிரல்

    மார்க்சிஸ்ட் இதழ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து, மாமேதை எங்கெல்ஸ் தொடர்பான இணைவழி தொடர் உரைகளை ஒளிபரப்பவுள்ளோம். எங்கெல்சின் எழுத்துக்களை தமிழ் வாசகப் பரப்பிற்கும் அறிமுகம் செய்வதாகவும், பரவலாக்குவதாகவும் இந்த முயற்சி அமைகிறது. இந்நிகழ்வுகளின் இறுதியில், நவம்பர் 28, 2020 அன்று, சிவப்பு புத்தக தினம் நிகழவுள்ளது. தமிழகமெங்கும் 10 ஆயிரம் இடங்களில் ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’ நூல் வாசிக்கப்படவுள்ளது. Continue reading