மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


August 2020

  • சொல்லகராதி: அறுதி உபரி மதிப்பு சார்பு உபரி மதிப்பு

    கே.சுவாமிநாதன் உபரி மதிப்பு எவ்வாறு உருவாகிறது, அது மூலதனக் குவியலுக்கு வழி வகுக்கிறது என்பதை கடந்த மாதங்களில் இப் பகுதியில் கண்டோம். முதலாளித்துவ உற்பத்தி முறைமையில் உபரி மதிப்பின் விகிதத்தையும், அதன் குவிப்பையும் அதிகரிப்பதற்கான தொடர்ந்த முனைப்பு இருந்து கொண்டே இருக்கும். உபரி மதிப்பு அதிகரிப்பை அது இரண்டு வழிகளில் செய்யும். ஒன்று அறுதி உபரி மதிப்பு (Absolute Surplus Value). இன்னொன்று சார்பு உபரி மதிப்பு ( Relative Surplus Value). அறுதி உபரி மதிப்பு… Continue reading

  • பெண்ணியமும் வர்க்க உணர்வும்

    வர்க்க ஒடுக்குமுறையிலிருந்தும், ஆணாதிக்க ஒருக்குமுறையிலிருந்தும் விடுதலைக்கான போராட்டங்களில் பங்கேற்றபடியே, சொந்த விடுதலைக்காகவும் போராடிய பெண்களுடன், கம்யூனிச இயக்கம் அடைந்த வளர்ச்சிக்கு இருந்த இணைப்பினைக் குறித்து இக்கட்டுரை விவாதிக்கிறது. Continue reading

  • இந்திய விடுதலைப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை

    இந்திய விடுதலை என்பது ஆங்கில ஏகபோக முதலாளித்து வர்க்கத்திற்கும், இந்திய நிலப் பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடந்த ஒரு சமரசம் ஆகும். இந்திய முதலாளிகள் சுதந்திரத்திற்குப் பிறகும் நாட்டின் பொருளாதார, அரசியல், சமுதாய, கலாச்சார வளர்ச்சியை முதலாளித்துவப் பாதையிலேயே உருவாக்க விரும்பினர். அதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பாதையிலேயே நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிறுவனங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அப்பொழுது மேலோங்கியிருந்த பிற்போக்கான ஆதிக்க வர்க்கங்களின் ஆட்சி அமைக்கப்பட்டது. Continue reading

  • விடுதலைப் போரில் காங்கிரஸின் வர்க்க அணுகுமுறை

    வெள்ளை ஏகாதிபத்தியத்தின் ரௌலட் சட்டத்தை எதிர்த்து அகிம்சை வழியில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்தது. மகாத்மா காந்தி எவ்வித நிபந்தனையும் இன்றி ஒத்துழையாமை இயக்கம் என அறிவித்து திலகர் போன்ற தீவிர தேசிய தலைவர்களை எல்லாம் ஓரங்கட்டியது என்றாலும், ஒத்துழையாமை இயக்கத்தையும், கிலாபத் இயக்கத்தையும் இணைத்து மாபெரும் மக்கள் எழுச்சியை உருவாக்க முடிந்தது. Continue reading

  • லெனின் 150: லெனினும் இந்திய விடுதலை போராட்டமும்

    இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜனநாயக புரட்சியில் விவசாயிகளின் பங்கு பற்றி லெனின் முன்வைத்த புரிதல் மார்க்சீயத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல் எனலாம். Continue reading

  • சீனாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் – சில கேள்விகளும் பதில்களும்

    சோவியத் யூனியன் சிதறுண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலவிய ஆட்சிகள் வலுவிழந்து உலக அளவில் சோஷலிச சக்திகளை பலவீனப்படுத்திய போதிலும்கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் தற்போது நீடித்து வரும் சோஷலிசமானது பொருளாயத அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு முரணான ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மை தொடர்ந்து நீடிக்கிறது. Continue reading

  • சிங்காரவேலர்: சமூக நீதியும் பொதுவுடைமையும்

    “இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்” என்று “குடி அரசு” இதழில் வெளியான தலையங்கத்திற்காக 1933 டிசம்பர் 30 அன்று பெரியார் கைது செய்யப்பட்டார். ஒன்பது மாதக் கால சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் பெரியார் விடுதலையாகும்வரை எந்த கூட்டமும் நடத்துவதில்லை என்று செயற்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் ஜீவா போன்ற இளம் சுயமரியாதைக்காரர்கள் வேகமாக வேலை செய்தனர். மே தின கொண்டாட்டத்தை நடத்துமாறு அறிக்கை விடப்பட்டது. Continue reading

  • லெனின் 150: லெனினும் தொழிலாளி வர்க்கமும்

    ஒவ்வொரு வேலைநிறுத்தப் போராட்டமும் தொழிலாளர்களுக்கு தங்கள் மீதான அவநம்பிக்கையை போக்குகிறது. சுரண்டலில் இருந்து விடுதலையும், எதிர்காலமும் தங்கள் கையில் உள்ளது என்று நம்பிக்கை அவர்களுக்கு வலுப்படுகிறது. தாங்கள் தனி நபர்கள் அல்ல என்ற உண்மையும், தாங்கள் ஒரு வர்க்கம் என்ற உண்மையும் அவர்களுக்கு புலப்படுகிறது. Continue reading

  • சோஷலிச கியூபாவும் கொரோனா பெருந்தொற்றும்

    ஆரோக்கியம் தொடர்பான மனிதவளம் திட்டமிட்ட அடிப்படையில் தொலைநோக்குடன் போதுமான அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபா நாட்டில் மேலோங்கியுள்ள சமூக விழுமியங்கள் ஆரோக்கியத்தை மனித உரிமை எனக் கருதுகின்றன. (கியூபாவின் சோசலிச அரசியல் சாசனம் இதை உறுதிபடக் கூறுகிறது.)­ கியூபாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் லாப நோக்கத்தால் உந்தப்பட்டு செயல்படுவதில்லை. மாறாக, மக்கள் நலம் பேண அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். Continue reading

  • உழைக்கும் வர்க்க இயக்கமும் பெண்களின் பங்களிப்பும்

    இந்தியாவிலும், உழைக்கும் வர்க்க ஒற்றுமையை கட்டமைப்பதில் பெண்கள் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி இயக்கத்தில், குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சிறந்த பங்களிப்பை செலுத்தியவர்கள் ஆவர். விமலா ரணதிவே, அஹல்யா ரங்கனேகர், தமிழகத்தில், விவசாய தொழிலாளிகளை கிராமம் கிராமமாக சென்று ஒன்று திரட்டி அவர்களது குரலை சட்டமன்றத்தில் ஒலிக்க செய்த கே.பி. ஜானகி அம்மாள், ரயில்வே தொழிலாளர் போராட்டம் தொடங்கி பல உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், பெரிதும்… Continue reading