மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


May 2020

  • எல்லை மீறிய உழைப்புச் சுரண்டலுக்கு மூலதனத்தை அழைக்கும் பாஜக!

    எஸ்.கண்ணன் அரசும், முதலாளித்துவமும் பொது முடக்கத்தில் தொழிலாளர்களையும், ஜனநாயக அமைப்புகளையும் முடக்கி, தீவிரமாக செயல்படுகிறது. மார்க்ஸ் சொன்னது போல் மூலதனம் தன்னை மேலும் மேலும் அதிகரித்து கொள்வதற்கு, இந்த கொரானா கொள்ளை நோய் காலத்தையும் விட்டு வைக்கவில்லை. பொது மருத்துவம் பறிக்கப்பட்ட மக்களுக்கு, கொரானா நோய் இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதித்து கொள்வதும் கூட, மிக அதிக செலவு பிடிக்கிறது. தனியார் பரிசோதனை மையங்கள் ரூ. 4500 வசூலிக்க அரசே வழிகாட்டுகிறது. தங்களின் அடிப்படை தேவை என்ன… Continue reading

  • கொரோனாவும் கூட்டாட்சி தத்துவமும்

    மேலோட்டமாக ஆய்வு செய்து பார்த்தாலே மோடி அரசின் அணுகுமுறை கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது; மாநில உரிமைகளை பறிப்பது என்பது மட்டுமின்றி, மாநிலங்களையே இல்லாததாக்குவது என்பதாக, முழுமையான அரசியல் சட்டத்துக்கு விரோதமானதாக உள்ளது என்பதைக் காண முடியும்.  Continue reading

  • நகரமயமாக்கலும் கொரோனாவும்!

    தற்போதைய நவீன உலகமய போட்டியில் கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட சந்தைக்கும், நகர கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கி அமல்படுத்த வேண்டிய அரசிற்கும் ஒரு நெருக்கமான பிணைப்பு உள்ளது. எப்படிப்பட்ட நகர்ப்புற வளர்ச்சி, அரசின் பொது நிதியாதாரம் எதற்கு, எப்படி, எங்கே செலவு செய்ய வேண்டுமென்பதை தீர்மானிப்பது இந்த கார்ப்பரேட் சந்தைதான். இந்த சந்தைக்கு இணக்கமாக அரசு மற்றும் மாநகராட்சிகள் செயல்படுகின்றன. Continue reading

  • சோஷலிசமும் பெண் விடுதலையும்

    அரசியலில் பெண்கள் பங்கு என்று பார்க்கும்போது 28.4% என தெரிகிறது. எனவே, அதில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதை அந்த அரசு உணர்ந்திருக்கிறது. பாலின சமத்துவக் கருத்துக்கள் வேரூன்றி வருகின்றன. புரட்சிக்கு பின்னர் மக்கள் சீனத்தில் பெண்கள் பிரமிக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். Continue reading

  • கார்ல்மார்க்ஸ் 17 வயதில் எழுதிய அரிய கட்டுரை (தமிழில்)

    “எதிர்கால தொழிலை தேர்ந்தெடுப்பது பற்றி” காரல் மார்க்ஸ் தனது பள்ளி இறுதி வகுப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். மதத்துடனும் கடவுளுடனும் இன்னும் முழுமையாக கணக்கு தீர்த்து விட்டு இயக்கவியல் பொருள்முதல்வாதியாக வளர்வதற்கு முன்பு, கடவுளின் பெயரையும் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது இந்தக் கட்டுரை. இக்கட்டுரை 17 வயதிலேயே மார்க்சிடம் இருந்த சமூக வாழ்வு பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது. Continue reading

  • இந்தியப் பெண்கள் இயக்கத்தில் சோசலிச சிந்தனையும் செயல்பாடும்

    பெண்களின் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, சோசலிச சிந்தனையும் நடைமுறையும் இந்த ஆண்டுகளில் மிகவும் விரிவான முன்னோக்குப் பார்வையாகவும் திட்டமாகவும் உருவெடுத்துள்ளது. இந்தக் கட்டுரையில் அதன் சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. Continue reading

  • ஆணாதிக்க பிற்போக்கு சித்தாந்தங்களும், தொடரும் ஏற்றத்தாழ்வுகளும்

    சுபாஷினி அலி சித்தாந்தங்கள் – நாம் சிந்திக்கும், விளங்கிக் கொள்ளும் வழிகள் –  எங்கிருந்தோ திடீரென முளைப்பதில்லை. அவை நம் சூழ்நிலைகளின், வரலாற்று-சமூக உண்மை நிலைகளில் இருந்துதான் விளைகின்றன. நாம் முக்கியமாக புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், ஒன்று, அவை சுரண்டல் நிறைந்த சமூக-பொருளாதார அமைப்பை வலுப்படுத்தவும் நிலையானதாக ஆக்கவும் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, பரப்பப்படுகின்றன; அல்லது அவை சுரண்டல் நிறைந்த சமூக-பொருளாதார அமைப்பை தூக்கி எறிவதற்காக உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, பரப்பப்படுகின்றன. இந்த கட்டுரை எண்ணிலடங்கா வேறுபாடுகளைக் கொண்ட பிற்போக்கான… Continue reading

  • பெருநிறுவன-நிதி மூலதன கூட்டாளிகளும் அதற்குள் அமைந்த அடுக்குகளும்

    பேராசிரியர் பிரபாத் பட்நாயக் தமிழில்: வயலட் நாம் முழுமையான ஒன்றாக காண்கிற அனைத்துமே வேறுபாடுகள் கொண்ட பல்வேறு கூறுகளால் ஆனது என்பதையும், அவைகளுக்குள்ளாக முரண்பாடுகள் உள்ளன என்பதையும் மார்க்சியப் பார்வை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. அவ்வாறு நாம் முழுமையாக பார்க்கிற ஒன்றை கருத்தாக்க அளவில் முழுமையாகவே குறிப்பிடுகிற போதும், அதன் உள்ளார்ந்த பகுதியாக அமைந்திருக்கும் இந்த முரண்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டும். எதேச்சதிகார, ஃபாசிசத்தனமான அரசுகளின் அரசியல் பொருளாதாரத்தைப் படிக்கும்போது இந்த கட்டளையை மறந்துவிடக்… Continue reading