December 2018
-
தொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி

ச. லெனின் “பிரபுத்துவ மீத மிச்சங்களுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரான எங்கள் போராட்டத்தில், நாங்கள் ருஷ்யாவின் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் ஒன்றுபடச் செய்வதில் வெற்றி பெற்றோம். மூலதனத்தையும், பிரபுத்துவத்தையும் எதிர்த்து விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டதுதான் எங்களுடைய வெற்றி அவ்வளவு சுபலமாக காரணமாய் இருந்தது” என்று குறிப்பிடுகிறார் லெனின். ரஷ்ய புரட்சியின் இந்த அனுபவம் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கான முக்கியமான படிப்பினையாக அமைகிறது. பிரெஞ்சு புரட்சியின் போது ” விவசாய வர்க்கம், முதலாளி வர்க்கத்தின் உதவிப்படையாக செயலாற்றியது. இதன் விளைவாக, அங்கு… Continue reading
-
கீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்

கீழத்தஞ்சையில் உக்கிரமாக நடந்துவந்த வர்க்கப் போராட்டத்தின் விளைவாக ஏகபோக நிலவுடமையாளர்கள் சீற்றமடைந்தார்கள். சாதி ஆதிக்கத்தையும், பொருளாதாரச் சுரண்டலையும் எதிர்த்து மக்கள் திரள்வதை, ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. கீழ்வெண்மணியின் படுகொலைகளுக்கு பிறகும் அவர்களால் வர்க்க இயக்கத்தை வீழ்த்த முடியவில்லை என்பது ஒருபக்கம் இருக்க. இப்படி தங்கள் அடக்குமுறைத் தாண்டவம் செய்திகளிலோ, சினிமா ஊடகத்திலோ பிற பகுதி மக்களுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் முயற்சிகளும் இருந்தன. Continue reading
-
கீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி

அதிகார மேலாதிக்கத்தில் விரிசல் ஏற்படுத்தி பொருளாதார ரீதியான முன்னேற்றம் சற்றே கிடைத்தால், அது வாழ்வியலின் இதர அம்சங்களிலும் மாற்றம் காண்பதற்கான களச்சூழலை ஏற்படுத்தும் என்பது கீழத்தஞ்சையில் நிரூபணமாயிற்று. அதில் செங்கொடி இயக்கத்தின் பங்களிப்பு உன்னதமானது. Continue reading
-
கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை

தமிழ்நாட்டிலும் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடியது. சிவகாசிக்கு அருகில் உரத்திற்காக வயலில் போட்ட கடலைப் பிண்ணாக்கை பசி தாங்காது எடுத்து தின்ற மக்கள் பலர் காலரா நோய்க்கு பலியாகி மாண்டனர். இந்த சமுதாய அரசியல் சூழ்நிலையில்தான், இப்படி பெரும் வேலைகள் நிறைந்திருந்த சூழ்நிலையில்தான், கிராமத்து மக்களை அமைப்பு ரீதியாக ஒன்று திரட்ட, தமிழக விவசாயிகள் இயக்கம் முன்னுக்கு வர முற்பட்டது. Continue reading
-
கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் !

இரா. சிந்தன் கீழ் வெண்மணியில் நிகழ்த்தப்பட்டபடுகொலைகள், தனித்த சம்பவம் அல்ல. அது கீழத் தஞ்சையில் (இப்போதைய நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில்) கூர்மையடைந்திருந்த வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடே. பிரிட்டிஷ் காலனியாதிக்க காலமாக இருந்தாலும், இந்திய விடுதலைக்கு பிறகான சூழலிலும், மாநிலத்தில் ஆட்சி மாறிய பின்னணியிலும், தொடரும் வர்க்கப் போராட்டத்தின் உக்கிரத்தை வெளிக்காட்டும் நிகழ்வுகளில் ஒன்றே கீழ்வெண்மணி தியாகம் ஆகும். பிரிட்டிஷ் ஆதிக்க காலம் : அப்போதைய தஞ்சாவூர் இந்திய அரிசி உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்தை கொடுத்து வந்தது.… Continue reading
-
ஓய்வறியா போராளி தோழர் கோ.வீரைய்யன்…

இவ்வளவு சிறப்புக்குரிய தலைவரான கோ.வீரய்யன் கடந்த 2005-ம் ஆண்டு வயது முதிர்வின் காரணமாக தன்னுடைய பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கட்சி பணிகளில் ஈடுபடமுடியாமல் தன்னுடைய சொந்த கிராமமான சித்தாடியில் ஓய்விலிருந்து வந்தார். Continue reading
-
வெண்மணி 50: மார்க்சிஸ்ட் டிசம்பர் 2018 இதழில் …
வெண்மணி படுகொலையின் 50-ம் ஆண்டை நினைவு கூறும் வகையில் இம்மாத இதழ் வெளிவருகிறது. சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார அம்சங்களில் வெண்மணியின் தாக்கம், எதிர்வினை மற்றும் படிப்பினைகளை உள்ளடக்கியதாக இந்த இதழின் கட்டுரைகள் அமைகின்றன. தமிழகத்தில் விவசாயிகள் இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் நிலவிய நில உறவுமுறையை விளக்கி தோழர் கோ. வீரய்யன் எழுதியிருந்த கட்டுரை இந்த இதழில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டுல்லாமல் சமூக, கலாச்சார ரீதியான ஆதிக்கத்தை எதிர்த்தும் நின்றதுதான்… Continue reading
