September 2013
-
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் ஆழமடையும் இந்திய பொருளாதார நெருக்கடியும்
கடந்த பல மாதங்களாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அண்மையில் இந்த வீழ்ச்சி, வேகம் அடைந்துள்ளது. ஜனவரி 2012 இல் ஒரு அமெரிக்க டாலருக்கு 44 ரூபாய் என்று இருந்த நிலை மாறி 2013 செப்டம்பர் துவக்கத்தில் 68 என்று அதிகரித்தது. அதாவது 50 சதவிகிதத்துக்கும் அதிகமான சரிவு. அதிலும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி 15 நாட்களில் மட்டும் 25% சரிவு. இது ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.… Continue reading
-
தீண்டாமை ஒழிப்புப் போரில் கம்யூனிஸ்டுகள்
உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படாத இந்திய உபகண்டத்தின் தனித்தன்மையே இந்த சாதியமைப்பு. இந்திய சமூகத்தில் சாதி உணர்வு மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. இதன் துவக்கம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். இந்தியாவில் வர்க்க சமுதாயம் துவங்கிய போது அது வருண சமுதாயமாகவே அமைந்தது. Continue reading
-
அமெரிக்க போர் முரசும், அல்லல்படும் சிரியாவின் மக்களும்
மீண்டும் அமெரிக்கா போர் முரசு கொட்டு கிறது. எண்ணெய் வள அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவின் அதிபர் ஐ.நா நெறிகளை மீறி வைத் திருக்கும் பேரழிவு ரசாயன ஆயுதங்களிலிருந்து உலக மக்களை காக்க படையெடுக்கப் போவதாக வும் மேலும் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங் களுக்கு உட்பட்டே இருக்கும் என்றும் ஒபாமா ஓசை எழுப்பியுள்ளார். இந்த போர்முரசின் நோக்கம் எந்த சோற்றாலும் மறைக்க முடியாத மலையாகும்.. தனது மேலாதிக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டதாக பயந்து ஆயுத பலத்தை உலகிற்கு… Continue reading
-
அவரைப்போல் வாழ முயற்சிப்போம்!
1977 செப்டம்பர் 21 மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதிப்புமிக்க தலைவர், தன் வீரதீரச் செயல்களால் இளைஞர்களையும், உழைக்கும் மக்களையும் செங்கொடி இயக்கத்தின்பால் ஈர்க்கும் ஆற்றல் படைத்தவர். ஆதிக்க சக்திகளுக்கு, அதிகார வர்க்கத்திற்கு சிம்ம சொப்பனமாகவும், உழைக்கும் மக்களுக்கு உற்ற துணைவனாகவும் விளங்கிய தோழர்.என்.வெங்கடாசலம் காணாமல் போன நாள். ஆம்! அப்படித்தான் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. Continue reading
-
சுதந்திர இந்தியாவில் மூலதனத்தின் ஆதிக்கமும் திட்டமிடலும்
இந்த கருத்துத் தாளில் இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகான முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 1950 முதல் 1966 வரையிலான காலகட்டத்தில் முதலாளித்துவ ஒருங்கிணைப்பு மற்றும் அதன் பல்வேறு செயல் உத்திகள் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது; அதே காலகட்டத்தில் சமூக உறவுகளின் கட்டமைப்பில் அது எத்தகைய உறவினைக் கொண்டிருந்தது என்பன போன்ற விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன. Continue reading
