February 2013
-
தோழர் ஹரிபட்….
சென்னை நகர வரலாறு பலவிதமாக எழுதப்படுகின்றன, ஆனால் சென்னை நகரை உருவாக்கும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாறு சரியாக சொல்லப்படாமலே உள்ளது. அப்படி எழுதப்படுமானால் தோழர் ஹரிபட்டின் வாழ்க்கை இடம் பெறும். ஹரிபட்டின் வாழ்க்கை ஒரு தனி மனிதனின் வாழ்க்கையல்ல. சென்னை நகர பாட்டாளி வர்க்க போராட்டத்தில் இரண்டற கலந்த வாழ்க்கையாகும். Continue reading
-
ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் தோற்றம் நமது அனுபவம்

கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஸ்தாபன கோட்பாடுகளில் முக்கியமானதாக ஜனநாயக மத்தியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் துவக்கம் ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாகும். இந்தக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் (மாநாடு) 1903 ஆம் ஆண்டு நடைபெற்றது. Continue reading
-
தற்கால சீனத்தில் புதுமைகாணும் மார்க்ஸியத்தை மையமாகக் கொண்ட ஏழு சமூக சிந்தனைகளின் நீரோட்டங்களும் அவற்றின் வளர்ச்சியும்

இன்றைய காலகட்டத்தில் சோஷலிச சீனத்தில் அரசியல், பொருளாதார வளர்ச்சியை தத்துவம் மற்றும் கருத்தியல் சார்ந்த வளர்ச்சியிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது; இவற்றின் பிரதிபலிப்போ அல்லது உள்ளடக்கமோ பின்வரும் ஏழு சமூக கருத்தியல்களில் அடங்கியுள்ளது. அவை: நவீன தாரளவாதம், ஜனநாயக சோஷலிசம், புதிய இடதுசாரிவாதம், பல்கருத்தோட்ட மார்க்ஸிசம், பாரம்பரிய மார்க்ஸிசம், பழமைமீட்சிவாதம், புதுமைகாணும் மார்க்ஸிசம் ஆகியவையே. இங்கு, சமூக நீரோட்டங்கள் என்ற சொற்றொடர் நடுநிலையான சொல்லாடலாகும்; அதில் மார்க்ஸிசம் என்பது ஒருவகையானது. Continue reading
-
பெண்மை – ஆண்மை எனும் பொய்மைகள் (ஒரு சமூக விஞ்ஞான விளக்கம்)

தலை நகர் டெல்லியில் ஒரு பெண்ணை காம வெறியில் கூட்டாக சித்தரவதை செய்து குடலை உருவி குற்றுயிருடன் சாலையில் வீசியது ஊடக உதவியால் உலகையே குலுக்கியதோடு, இந்திய அதிகார மையத்தையும் சிறிது அசைத்துவிட்டது. “நீதிபதிகளின் பார்வை சிறிது மாற வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதியையே கூறவைத்துள்ளது. Continue reading
